Home Tamil இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்ட டிக்வெல்ல, லக்மால்

இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்ட டிக்வெல்ல, லக்மால்

1950

நியூசிலாந்து அணிக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர நிறைவில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 227 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் பிற்பகுதி மழையின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நியூசிலாந்து அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களை பெற்றிருந்தது. நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை பொருத்தவரை ரொஸ் டெய்லர் அதிகபட்சமாக 86 ஓட்டங்களுடன் களத்தில் நின்றார்.

அபார சுழலால் நியூசிலாந்துக்கு சவால் கொடுத்த அகில தனன்ஜய

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல்….

இவ்வாறான நிலையில், இன்றைய தினம் போட்டி ஆரம்பிக்க, இலங்கை அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்திருந்தது. குறிப்பாக சுரங்க லக்மால் அணியின் பந்துவீச்சுக்கு முழுமையான பலத்தை வழங்கியிருந்தார். நேற்றைய தினம் 86 ஓட்டங்களை விளாசியிருந்த ரொஸ் டெய்லர் இன்றைய தினம் வந்த வேகத்தில் எந்தவொரு ஓட்டமும் இன்றி லக்மாலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து வருகைத்தந்த நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களை சுரங்க லக்மால் தொடர்ச்சியாக அரங்கு அனுப்பிய நிலையில், நியூசிலாந்து அணி மதியபோசன இடைவேளைக்கு முன் 249 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இன்றைய தினத்தில் சுரங்க லக்மால் 4 விக்கெட்டுகளை வீழ்த்த, டிம் சௌதி மாத்திரம் ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து, தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், மதியபோசன இடைவேளை நெருங்கும் போது, ஆரம்ப வீரர் லஹிரு திரிமான்னே (10) தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். இதன்படி மதியபோசன இடைவேளையின் போது, இலங்கை அணி 34 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்திருந்தது.

Photos: Sri Lanka vs New Zealand | 1st Test – Day 2

மதியபோசன இடைவேளைக்கு பின்னர் களமிறங்கிய இலங்கை அணி, தங்களுடைய அணித் தலைவரை இழந்தது. திமுத் கருணாரத்ன 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அஜாஸ் பட்டேலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும், இதன் பின்னர் ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை பகிர்ந்தனர். 

இதில், குசல் மெண்டிஸ் தனது 10வது டெஸ்ட் அரைச்சதத்தை கடந்த போதும், மெதிவ்ஸுடன் 77 ஓட்டங்களை பகிர்ந்து, 53 ஓட்டங்களுடன் தேநீர் இடைவேளைக்கு ஒரு பந்து எஞ்சியிருக்கும் போது ஆட்டமிழந்தார். 

தேநீர் இடைவேளைக்கு பின்னர், நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் பிரகாசிக்கத் தொடங்க இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க தொடங்கியது. குசல் பெரேரா வந்த வேகத்தில் ஒரு ஓட்டத்துடன் ட்ரென்ட் போல்ட்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து தனன்ஜய டி சில்வா மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோரை அஜாஸ் பட்டேல் ஆட்டமிழக்கச் செய்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய இரண்டாவது 5 விக்கெட் பிரதியை பதிவு செய்தார்.

புதிய பந்துவீச்சுப் பாணியை நான் மிகவும் விரும்புகிறேன் – அகில தனன்ஜய

எனது பந்துவீச்சுப் பாணியை சரிசெய்து கொண்டு மீண்டும்….

தொடர்ச்சியாக அகில தனன்ஜய, வில் சமர்வில்லின் பந்துவீச்சில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்க இலங்கை அணி 161 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இவ்வாறு, விக்கெட்டுகளை பறிகொடுத்துவந்த இலங்கை அணிக்கு சுரங்க லக்மால் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஜோடியின் இணைப்பாட்டம் நம்பிக்கையை கொடுத்தது.

குறித்த இருவரும் இன்றைய ஆட்டநேர நிறைவு வரை விக்கெட்டினை விட்டுக்கொடுக்காமல் துடுப்பெடுத்தாடி மிக முக்கியமான இணைப்பாட்டமொன்றை பெற்றுக்கொடுத்தனர். இவர்கள் இருவரும் 8வது விக்கெட்டுக்காக 66 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, இலங்கை அணி ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 227 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

நிரோஷன் டிக்வெல்ல 39 ஓட்டங்களையும், சுரங்க லக்மால் 28 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் அஜாஸ் பட்டேல் 76 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இலங்கை அணியானது, நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை எட்டுவதற்கு இன்னும் 22 ஓட்டங்களை பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடரும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க 

போட்டி சுருக்கம்

Result


Sri Lanka
267/10 (93.2) & 268/4 (86.1)

New Zealand
249/10 (83.2) & 285/10 (106)

Batsmen R B 4s 6s SR
Jeet Raval c Dhananjaya de Silva b Akila Dananjaya 33 83 3 0 39.76
Tom Latham c Niroshan Dickwella b Akila Dananjaya 30 88 3 0 34.09
Kane Williamson c Dimuth Karunaratne b Akila Dananjaya 0 3 0 0 0.00
Ross Taylor c Niroshan Dickwella b Suranga Lakmal 86 132 6 0 65.15
Henry Nicholls lbw b Akila Dananjaya 42 78 2 0 53.85
BJ Watling lbw b Akila Dananjaya 1 5 0 0 20.00
Mitchell Santner lbw b Suranga Lakmal 13 42 1 0 30.95
Tim Southee run out (Dhananjaya de Silva) 14 19 0 1 73.68
William Somerville not out 9 28 1 0 32.14
Trent Boult c Kusal Perera b Suranga Lakmal 18 22 1 1 81.82
Ajaz Patel lbw b Suranga Lakmal 0 0 0 0 0.00


Extras 3 (b 0 , lb 2 , nb 1, w 0, pen 0)
Total 249/10 (83.2 Overs, RR: 2.99)
Fall of Wickets 1-64 (26.3) Tom Latham, 2-64 (26.6) Kane Williamson, 3-71 (30.2) Jeet Raval, 4-171 (58.2) Henry Nicholls, 5-179 (60.2) BJ Watling, 6-205 (69.1) Ross Taylor, 7-216 (73.5) Mitchell Santner, 8-222 (74.6) Tim Southee, 9-249 (83.1) Trent Boult, 10-249 (83.2) Ajaz Patel,

Bowling O M R W Econ
Suranga Lakmal 15.2 5 29 4 1.91
Lahiru Kumara 10 1 37 0 3.70
Akila Dananjaya 30 3 80 5 2.67
Dhananjaya de Silva 6 0 20 0 3.33
Lasith Embuldeniya 22 1 81 0 3.68
Batsmen R B 4s 6s SR
Lahiru Thirimanne st BJ Watling b Ajaz Patel 10 36 1 0 27.78
Dimuth Karunaratne lbw b Ajaz Patel 39 73 4 0 53.42
Kusal Mendis c Ross Taylor b Ajaz Patel 53 89 7 1 59.55
Angelo Mathews c Ross Taylor b Ajaz Patel 50 98 7 1 51.02
Kusal Perera c Mitchell Santner b Trent Boult 1 4 0 0 25.00
Dhananjaya de Silva c & b Ajaz Patel 5 19 1 0 26.32
Niroshan Dickwella c Kane Williamson b William Somerville 61 109 3 0 55.96
Akila Dananjaya c Ross Taylor b William Somerville 0 8 0 0 0.00
Suranga Lakmal b Trent Boult 40 98 3 2 40.82
Lasith Embuldeniya lbw b William Somerville 5 17 1 0 29.41
Lahiru Kumara not out 0 9 0 0 0.00


Extras 3 (b 1 , lb 1 , nb 0, w 1, pen 0)
Total 267/10 (93.2 Overs, RR: 2.86)
Fall of Wickets 1-27 (10.6) Lahiru Thirimanne, 2-66 (22.5) Dimuth Karunaratne, 3-143 (46.5) Kusal Mendis, 4-144 (47.3) Kusal Perera, 5-155 (52.2) Dhananjaya de Silva, 6-158 (54.1) Angelo Mathews, 7-161 (55.5) Akila Dananjaya, 8-242 (84.4) Suranga Lakmal, 9-262 (91.1) Niroshan Dickwella, 10-267 (93.2) Lasith Embuldeniya,

Bowling O M R W Econ
Trent Boult 20 4 45 2 2.25
Tim Southee 7 3 17 0 2.43
William Somerville 22.2 3 83 3 3.74
Ajaz Patel 33 6 89 5 2.70
Mitchell Santner 11 0 31 0 2.82
Batsmen R B 4s 6s SR
Jeet Raval c Dimuth Karunaratne b Dhananjaya de Silva 4 20 0 0 20.00
Tom Latham c Lahiru Thirimanne b Akila Dananjaya 45 81 2 1 55.56
Kane Williamson c Kusal Perera b Lasith Embuldeniya 4 25 0 0 16.00
Ross Taylor c Dhananjaya de Silva b Lasith Embuldeniya 3 5 0 0 60.00
Henry Nicholls c Kusal Mendis b Dhananjaya de Silva 26 71 2 0 36.62
BJ Watling c Niroshan Dickwella b Lahiru Kumara 77 173 6 0 44.51
Mitchell Santner c Suranga Lakmal b Lasith Embuldeniya 12 35 0 0 34.29
Tim Southee st Niroshan Dickwella b Lasith Embuldeniya 23 62 1 0 37.10
William Somerville not out 40 118 2 0 33.90
Trent Boult c Dhananjaya de Silva b Lahiru Kumara 26 25 2 1 104.00
Ajaz Patel lbw b Dhananjaya de Silva 14 23 1 0 60.87


Extras 11 (b 4 , lb 5 , nb 2, w 0, pen 0)
Total 285/10 (106 Overs, RR: 2.69)
Fall of Wickets 1-8 (7.4) Jeet Raval, 2-20 (14.4) Kane Williamson, 3-25 (16.3) Ross Taylor, 4-81 (27.5) Tom Latham, 5-98 (39.2) Henry Nicholls, 6-124 (49.3) Mitchell Santner, 7-178 (69.5) Tim Southee, 8-224 (90.3) BJ Watling, 9-260 (98.2) Trent Boult, 10-285 (105.6) Ajaz Patel,

Bowling O M R W Econ
Suranga Lakmal 15 2 37 0 2.47
Akila Dananjaya 32 4 84 1 2.62
Dhananjaya de Silva 12 3 25 3 2.08
Lasith Embuldeniya 37 4 99 4 2.68
Lahiru Kumara 10 0 31 2 3.10


Batsmen R B 4s 6s SR
Dimuth Karunaratne c BJ Watling b Tim Southee 122 243 6 1 50.21
Lahiru Thirimanne lbw b William Somerville 64 163 4 0 39.26
Kusal Mendis c Jeet Raval b Ajaz Patel 10 6 1 1 166.67
Angelo Mathews not out 28 73 2 0 38.36
Kusal Perera c Mitchell Santner b Trent Boult 23 19 5 0 121.05
Dhananjaya de Silva not out 14 13 3 0 107.69


Extras 7 (b 6 , lb 1 , nb 0, w 0, pen 0)
Total 268/4 (86.1 Overs, RR: 3.11)
Fall of Wickets 1-161 (60.2) Lahiru Thirimanne, 2-174 (61.5) Kusal Mendis, 3-218 (76.1) Dimuth Karunaratne, 4-250 (82.2) Kusal Perera,

Bowling O M R W Econ
Trent Boult 9.1 1 34 1 3.74
Tim Southee 12 2 33 1 2.75
William Somerville 31 6 73 1 2.35
Ajaz Patel 18 0 74 1 4.11
Mitchell Santner 13 2 38 0 2.92
Kane Williamson 3 0 9 0 3.00