முன்னைய வாரங்களில் தடுமாற்றத்தினை காண்பித்திருந்த நியூ யங்ஸ் கால்பந்து கழக அணி, களனி கால்பந்து அரங்கில் நடைபெற்று முடிந்த டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் சுப்பர் 8 சுற்றின் தமது இறுதி ஆட்டத்தில் விமானப்படை அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இத்தொடரை வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.

கடந்த வாரப் போட்டியில் 4-1 என்கிற கோல்கள் கணக்கில் கடற்படை அணியை வீழ்த்திய நியூ யங்ஸ் கழகமும், இறுதியாக சொலிட் அணியுடனான போட்டியில் வெற்றியைப் பெற்ற விமானப்படை அணியும் இந்தப் போட்டியில் மோதின.

சரியாக விசாரணைகள் தேவை : FFSL இடம் ரோஹித வேண்டுகோள்

நியூ யங்ஸ் மற்றும் சொலிட் கழக…

இந்தப் போட்டியில் தமது அணியின் நட்சத்திர வீரர் ஹஸித்த பிரியங்கர உள்ளடங்களாக 5 வீரர்களை போட்டித்தடை காரணமாக இழந்திருந்த நிலையில் நியூ யங்ஸ் அணி களமிறங்கியது.  போட்டியின் முதல் தருணங்களில் நிவ் யங்ஸ் அணியின் பொஸ்டர் அமாடி ஓரளவு சிறப்பாக செயற்பட்டிருந்தார்.

எனினும் வீரர்கள் தவறுகள் மற்றும் கவனக்குறைவாக செயற்பட்ட காரணங்களினால் இரு அணிகளும் பந்தின் கட்டுப்பாட்டினை தம்மகத்தே பெறுவதில் சிரமத்தினை எதிர்கொண்டிருந்தன. குமார லங்கேஸ்வர விமானப்படை சார்பாக பொறுப்பாக ஆடி இருப்பினும், நியூ யங்ஸ் அணியின் பொஸ்டர் அமாடி தொடர்ச்சியாக எதிரணிக்கு அச்சுறுத்தலாய் இருந்தார்.

இப்படியாக போட்டி நடந்து கொண்டிருக்கும் தருணத்தில், மொஹமட் பெளசான் 3 வீரர்களைத் தாண்டி விரைவாக முன்னேறி, எதிரணியின் பெனால்டி எல்லைக்குள் வந்தார். பின்னர் எதிரணியின் தடைகளை தகர்த்து விவேகம் மற்றும் நுணுக்கத்துடன் தனது திறமை மூலம் முதல் கோலினைப் போட்டார்.

போட்டியின், முதல் பாதி நிறைவுறும் தருணம் நினைவுபடுத்தப்பட்ட வேளையில், இரு அணிகளும் தமது சிறப்பான செயற்பாட்டினை வெளிக்காட்டியிருந்தன. எனினும் சிறு சிறு இடைவெளிகளில் போட்டியின் ஆதிக்கம் நியூ யங்ஸ் அணியிடம் இருந்தது.

முதல் பாதி : நியூ யங்ஸ் கால்பந்துக் கழகம் 1 – 0 விமானப்படை விளையாட்டுக் கழகம்

போட்டியின் இரண்டாம் பாதியின் ஆரம்பத்திலும் வென்னப்புவ இளம் அணியான நியூ யங்சிடம் இருந்து, எதிரணிக்கு அதிக அழுத்தம் தரப்பட்டது. ஆனால், இரண்டாம் பாதி ஆரம்பித்து சில நிமிடங்களில் மீண்டும் போட்டி, வீரர்களின்  தவறுகளினால் மந்த கதிக்கு உள்ளாகியது.

போட்டியில், போதுமான கவனத்தினை காட்டியிராத நிப்புன பண்டார மற்றும் நட்சத்திர வீரர் கவிந்து இஷான் ஆகியோர் விமானப்படை அணிக்காக வாய்ப்புகளை முன்னெடுப்பதில் சிக்கல்களை எதிர்கொண்டனர்.

எனினும், பின்னர் இரு அணிகளும் அவதானமாக செயற்பட்ட காரணத்தினால் சவால் மிக்க வகையில் மோதல் இடம்பெற்றது. போட்டியின் இறுதி 10 நிமிடங்களில் அதிக உத்வேகத்துடன் விமானப்படை அணி திறம்பட செயற்பட்டிருந்தது.

எனினும் கோல் காப்பாளர் கவீஷ் பெரேரா மற்றும் பின்கள வீரர்களின் தடுப்பினால் விமானப்படையின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. அதுபோன்று, நியூ யங்ஸ் கழகம் சில வாய்ப்புகளை பெற்றிருப்பினும் இறுதியில் அவர்களுக்கு அவையும் கைகூடியிருக்கவில்லை.

இலகு வெற்றியை சுவீகரித்த விமானப்படை விளையாட்டு கழகம்

டயலொக் சம்பியன்ஸ் லீக் காற்பந்தாட்ட போட்டிகளில், சூப்பர் 8 சுற்றில் தனது முதல் வெற்றியை விமானப்படை அணியானது பதிவு செய்துகொண்டது.

அத்துடன், பொஸ்டர் அமாடி சிறு உபாதைக்கு உள்ளாகியிருந்தது தடுப்பில் இருந்த குமார லங்கேசகரவிற்கு இலகுவாய் இருந்தது.

இன்றைய போட்டியின் இறுதிப் பகுதியில் உபாதையினை எதிர் நோக்கியிருந்த நியூ யங்ஸ் அணியின் பொஸ்டர் அமாடி, சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்ததோடு, ஆக்ரோசமான முறையில் எதிரணிக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி இருந்தார்.

முழு நேரம்: நியூ யங்ஸ் கால்பந்துக் கழகம் 1 – 0 விமானப்படை விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகன்: பொஸ்டர் அமாடி (நியூ யங்ஸ் கால்பந்து கழகம்)

போட்டியின் பின்னர் ThePapare.com இற்கு நியூ யங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் ரோஹித்த பெர்னாந்து கருத்து தெரிவிக்கையில்,

பலம் குறைந்த வீரர்களின் குழாத்தினுடனேயே இறுதி இரண்டு போட்டிகளையும் விளையாடி இருந்தோம். இதில் எமது குழாத்தில் விளையாடும் முக்கியமான ஆரம்ப வீரர்கள் 5 பேர், தகுந்த காரணமின்றி விளையாட தடை செய்யப்பட்டிருந்தனர். எது எப்படியாயினும், இறுதி இரண்டு போட்டிகளிலும் எமது அணி தொடர்ச்சியாக வெற்றி ஈட்டியதற்காக எமது வீரர்கள் வழங்கிய பங்களிப்பினை பார்க்கும் போதும் வீரர்கள் வெளிக்காட்டிய பாங்குகளை காணும் போதும் சந்தோசமாகவுள்ளது. “

கோல் பெற்றவர்கள்

நியூ யங்ஸ் கால்பந்து கழகம்: மொஹமட் பெளசான் (14’)

மஞ்சள் அட்டைகள்

நியூ யங்ஸ் கால்பந்துக் கழகம்: மொஹமட் பெளசான் (59’)

விமானப்படை விளையாட்டுக் கழகம்: குமார லங்கேசர (43’), சத்துரங்க பெர்னாந்து (57’), தேவிந்த பண்டார (86’)