வெள்ளையடிப்புக்கு உள்ளான இலங்கை தொடர்ந்தும் எட்டாமிடத்தில்

647

இலங்கைக்கு எதிராக 3-0 எனும் அடிப்படையில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் அணிகளின் தரவரிசையில் மேலுமொரு புள்ளியுடன் மூன்றாமிடத்தை தக்கவைத்துள்ள அதேவேளை, இலங்கை அணி தொடர்ந்தும் எட்டாமித்தில் உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 12ஆவது உலகக் கிண்ண போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 139 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் அதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டு வருகின்றன.

போராட்டத்தின் பின் T20I தொடரையும் இழந்த இலங்கை

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு.. இலங்கை …

அநேகமான அணிகள் தற்சமயம் சுற்றுத் தொடர்கள் மூலம் தங்களது அணியின் பலம், பலவீனம் போன்றவற்றை இனங்கண்டு எவ்வாறு அவற்றை உலகக் கிண்ண போட்டிகளில் திருத்திக் கொள்ளலாம் என்பதை பரிசீலித்து வருகின்றன.  

அந்த அடிப்படையில் இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தற்சமயம் தங்களது அடைவு மட்டங்களை பரிசீலித்து வருகின்ற நிலையில், பங்களாதேஷ், இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் உலகக்கிண்ண போட்டிகள் ஆரம்பமாகுவதற்கு முன்னர் தங்களது அடைவு மட்டங்களை பரிசீலிப்பதற்கான போட்டித் தொடர்களில் விளையாடவுள்ளன.

இந்நிலையில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் (08) நிறைவுக்கு வந்துள்ள நிலையில் நியூசிலாந்து அணி 3-0 என்ற அடிப்படையில் இலங்கை அணியை வெள்ளையடிப்பு செய்திருந்தது.

இதன் மூலம் நியூசிலாந்து அணி உலகக் கிண்ணத்திற்கு தங்கள் அணி பூரண ஆயத்தம் என்பதை நிரூபித்துள்ள அதேவேளை, இலங்கை அணி தொடர்ந்தும் ஒருநாள் போட்டிகளுக்கான தங்கள் அணியை எவ்வாறு தெரிவு செய்வது என்பதிலேயே சிக்கல் நிலைமையை கொண்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கவுள்ள இளம் துடுப்பாட்ட வீரர் சுபைர் ஹம்சா

பாகிஸ்தான் – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் மந்த ….

இலங்கைநியூசிலாந்து ஒருநாள் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியஅவுஸ்திரேலிய, தென்னாபிரிக்காபாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது (.சி.சி) புதிய ஒருநாள் அணிகளின் தரவரிசையை நேற்று (09) வெளியிட்டிருந்தது.

அதன் படி தொடரை கைப்பற்றிய நியூஸிலாந்து அணி ஒரு புள்ளியை மேலதிகமாக பெற்று 113 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தை பிடித்துள்ளது. மேலும், இலங்கை அணி தொடரை இழந்ததன் மூலம் ஒரு புள்ளியை இழந்த போதும் ஏற்கனவே இருந்த எட்டாமிடத்தில் நீடிக்கின்றது.

.சி.சி யின் புதிய ஒருநாள் அணிகளின் தரவரிசை

  1. இங்கிலாந்து – 126 புள்ளிகள்
  2. இந்தியா – 121 புள்ளிகள்
  3. நியூசிலாந்து – 113 புள்ளிகள்
  4. தென்னாபிரிக்கா – 111 புள்ளிகள்
  5. பாகிஸ்தான் – 102 புள்ளிகள்
  6. அவுஸ்திரேலியா – 100 புள்ளிகள்
  7. பங்களாதேஷ் – 93 புள்ளிகள்
  8. இலங்கை – 78 புள்ளிகள்
  9. மேற்கிந்திய தீவுகள் – 72 புள்ளிகள்
  10. ஆப்கானிஸ்தான் – 67 புள்ளிகள்   

இந்நிலையில் அடுத்து நடைபெறவுள்ள இந்தியஅவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கபாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் மூலம் தரவரிசையில் ஏற்படவுள்ள மாற்றங்கள்.

தென்னாபிரிக்கா எதிர் பாகிஸ்தான் தொடர்

தென்னாபிரிக்கா 5-0 எனுமடிப்படையில் வெற்றி பெற்றால்தென்னாபிரிக்கா 115 புள்ளிகள், பாகிஸ்தான் 98 புள்ளிகள்

தென்னாபிரிக்கா 4-1 எனுமடிப்படையில் வெற்றி பெற்றால்தென்னாபிரிக்கா 113 புள்ளிகள், பாகிஸ்தான் 99 புள்ளிகள்

தென்னாபிரிக்கா 3-2 எனுமடிப்படையில் வெற்றி பெற்றால்தென்னாபிரிக்கா 111 புள்ளிகள், பாகிஸ்தான் 101 புள்ளிகள்

பாகிஸ்தான் 5-0 எனுமடிப்படையில் வெற்றி பெற்றால்பாகிஸ்தான் 108 புள்ளிகள், தென்னாபிரிக்கா 105 புள்ளிகள்

பாகிஸ்தான் 4-1 எனுமடிப்படையில் வெற்றி பெற்றால்பாகிஸ்தான் 105 புள்ளிகள், தென்னாபிரிக்கா 107 புள்ளிகள்

பாகிஸ்தான் 3-2 எனுமடிப்படையில் வெற்றி பெற்றால்பாகிஸ்தான் 103 புள்ளிகள், தென்னாபிரிக்கா 109 புள்ளிகள்

இந்தியா எதிர் அவுஸ்திரேலிய தொடர்

இந்தியா 3-0 எனுமடிப்படையில் வெற்றி பெற்றால்இந்தியா 122 புள்ளிகள், அவுஸ்திரேலியா 98 புள்ளிகள்

இந்தியா 2-1 எனுமடிப்படையில் வெற்றி பெற்றால்இந்தியா 120 புள்ளிகள், அவுஸ்திரேலியா 100 புள்ளிகள்

அவுஸ்திரேலியா 3-0 எனுமடிப்படையில் வெற்றி பெற்றால்அவுஸ்திரேலியா 104 புள்ளிகள், இந்தியா 117 புள்ளிகள்

அவுஸ்திரேலியா 2-1 எனுமடிப்படையில் வெற்றி பெற்றால்அவுஸ்திரேலியா 102 புள்ளிகள், இந்தியா 119 புள்ளிகள்

எனவே, இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ள இந்த இரண்டு தொடர்களின் பின்னர் குறித்த அணிகளுக்கிடையில் ஏற்படுகின்ற மாற்றம் முதல் 6 இடங்களிலுள்ள ஏனைய அணிகளின் தரவரிசையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.

2019 .சி.சி உலகக் கிண்ண போட்டிகள் மே 30 தொடக்கம் ஜூலை 14 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் மொத்தமாக 48 போட்டிகளை உள்ளடக்கி நடைபெறவுள்ள நிலையிலேயே தரப்படுத்தலிலும் மாற்றங்கள் ஏற்படும் விதத்தில் இந்த தொடர்கள் அமையவுள்ளன.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<