ஐக்கிய அரபு இராச்சியத்துடனான T20 தொடரை சமன் செய்த நேபாளம்

97
ICC

சுற்றுலா நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் இடையே துபாய் நகரில் இன்று (2) இடம்பெற்று முடிந்திருக்கும் இரண்டாவது T20 போட்டியில் நேபாள அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியினை பதிவு செய்ததோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 1-1 என சமநிலை செய்திருக்கின்றது.

நேபாளத்துக்கு எதிரான T20 தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த ஐக்கிய அரபு இராச்சியம்

சுற்றுலா நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் இடையே நடைபெற்று ….

நேற்று (1) இந்த T20 தொடரின் முதல் போட்டியில் 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்த ஐக்கிய அரபு இராச்சிய அணியினர் இப்போட்டியின் நாணய சுழற்சியிலும் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தனர்.

தொடர்ந்து முதலில் துடுப்பாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிர்பார்த்த ஆரம்பம் கிடைக்கவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த அவ்வணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

ஐக்கிய அரபு இராச்சிய அணியின் துடுப்பாட்டத்தில் சுன்டங்கபொயில் றிஸ்வான் மாத்திரம் 44 ஓட்டங்களுடன் ஆறுதல்தர ஏனைய வீரர்களில் ஒருவர் கூட 20 ஓட்டங்களையேனும் தாண்டியிருக்கவில்லை.

மறுமுனையில் அசத்தலான பந்துவீச்சினை வெளிப்படுத்திய நேபாள அணியில் அபினாஷ் போஹரா 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சந்தீப் லமிச்சானே, கரண் KC மற்றும் சொம்பால் கமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் சாய்த்திருந்தனர்.

இதனை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 108 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய நேபாள அணி, குறித்த இலக்கை 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றவாறு அடைந்தது.

நேபாள அணியின் வெற்றியினை கடைசிவரை களத்தில் நின்று உறுதி செய்த தீபேந்திர சிங் ஐய்ரி 41 பந்துகளில் 4 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 47 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

ஐக்கிய அரபு இராச்சிய அணியின் பந்துவீச்சில் சுல்தான் அஹமட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய போதிலும் அவரது தரப்பு வெற்றி பெறுவதற்கு அது போதுமாக இருக்கவில்லை.

போட்டியின் ஆட்ட நாயகன் விருதினை நேபாள அணியின் வெற்றியினை உறுதி செய்த தீபேந்திர சிங் ஐரி பெற்றுக்கொண்டார்.

68 வயதில் ஓய்வை அறிவித்த நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவென் செட்வீல்ட் ….

இனி இரண்டு அணிகளுக்கும் இடையிலான T20 தொடரினை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான போட்டி ஞாயிற்றுக்கிழமை (3) இடம்பெறுகின்றது.

போட்டிச் சுருக்கம்

ஐக்கிய அரபு இராச்சியம் – 107 (19.2) சுன்டங்கபொயில் றிஸ்வான் 44(43), அபினாஷ் போஹாரா 20/3(4), சொம்பல் கமி 15/2(4), கரண் KC 22/2(4), சந்தீப் லமிச்சானே 19/2(4)

நேபாளம் – 111/6 (19.3) தீபேந்திர சிங் ஐய்ரி 47(41), சுல்தான் அஹ்மட் 9/2(4)

முடிவு – நேபாள அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<