இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி கட்டாயம்: கிறிஸ் மொரிஸ்

363
Chris Morris
Getty

இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்திக்க நேரிட்டமை ஏமாற்றத்தையும், கோபத்தையும் தருவதாகத் தெரிவித்த தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கிறிஸ் மொரிஸ், தொடர்ந்து உலகக் கிண்ண கனவை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் இனிவரும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ரோஹித்தின் சதத்துடன் இந்தியாவுக்கு முதல் வெற்றி

உலகக் கிண்ணத்தின் தங்களுடைய முதல் போட்டியில்……..

இந்தியாதென்னாப்பிரிக்கா அணிகள் நேற்று (05) மோதிய உலகக் கிண்ண லீக் போட்டியில் சஹால், பும்ராவின் பந்துவீச்சு மற்றும் ரோஹித் சர்மாவின் அபார துடுப்பாட்டம் என்பவற்றினால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்தியிருந்தது.

இந்தத் தொடரில் தென்னாப்பிரிக்க அணி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் முழுமையாக போராட தயாராக இருந்தது. எனினும், இந்திய வீரர்களின் அபார ஆட்டத்தால் அவர்களது கனவு கலைந்தது.

ஏற்கனவே இரண்டு தோல்விகளால் துவண்டுபோன தென்னாபிரிக்கா அணி, இம்முறை உலகக் கிண்ணத்தில் பெறும் 3ஆவது தொடர் தோல்வி இதுவாகும். அத்துடன், உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் அவ்வணி முதல்தடவையாக அடுத்தடுத்து தோல்விகளையும் சந்தித்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளில் அரையிறுதி வரை முன்னேறிய தென்னாபிரிக்க அணி, இம்முறை உலகக் கிண்ணத்தில் இதுவரை பங்குபற்றிய அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.  

எனவே, இந்த தொடரில் அரையிறுதிக்கான வாய்ப்பைப் பெற வேண்டுமால் அடுத்து வரும் 6 போட்டிகளில் 5இல் அவ்வணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.  

ரோஹித்தின் சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் என புகழும் கோஹ்லி

நாங்கள் இந்தப் போட்டியில் அனைத்து …………

இந்த நிலையில், இந்தியாவுடனான போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவ்வணியின் சகலதுறை வீரர் கிறிஸ் மொரிஸ்,

”உண்மையில் இந்தத் தோல்வியானது ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் ஒன்பது போட்டிகளில் இங்கு விளையாடவுள்ளோம். ஆனால், ஆரம்பத்திலேயே தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை சந்திக்க நேரிட்டமை கவலையளிக்கிறது. எனவே, உலகக் கிண்ண கனவை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டுமாயின் இனிவரும் ஒவ்வொரு போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற வேண்டும்.

ஆகவே, அணியில் உள்ள வீரர்களுக்கு அடுத்துவரும் போட்டிகளில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பது தொடர்பில் நன்றாக தெரிந்து இருக்கும் என தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி சார்பாக கிறிஸ் மொரிஸ் சகலதுறையிலும் பிரகாசித்திருந்தார். துடுப்பாட்டத்தில் 42 ஓட்டங்களைக் குவித்த அவர், 10 ஓவர்கள் பந்துவீசி 36 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தியிருந்தார். முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் எதிர்பார்த்தளவு பிரகாசித்தத் தவறிய மொரிஸ் இந்தப் போட்டியின் முதல் பாதியில் அபாரமாக செயற்பட்டு இந்திய வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்திருந்தார்.

உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் டேல் ஸ்டெய்ன்

தோற்பட்டை உபாதைக்கு ஆளாகிய தென்னாபிரிக்க …….

”இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் நாங்கள் எதிரணிக்கு பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்திருந்தோம். முதல் ஆறு ஓவர்களில் ரபாடா அதிரடியாக பந்துவீச்சியிருந்தார். அத்துடன், எமக்கு கிடைத்த அந்த 3 பிடியெடுப்புகளை எடுத்திருந்தால் இந்திய அணி 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருக்கும். எனவே, முதல் ஐந்து ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தோம். துரதிஷ்டவசமாக, அவர்கள் எங்களுக்கு தொடர்ந்து அந்த வாய்ப்பினை கொடுக்கவில்லை.

முதலிரண்டு போட்டிகளில் விளையாடிய விதத்தைக் காட்டிலும் முற்றிலும் வித்தியாசமான முறையில் நாம் இந்தப் போட்டியில் களமறிங்கினோம். ஆனால் எதிர்பார்த்தளவு முடிவொன்றை எங்களால் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது” என அவர் குறிப்பிட்டார்.  

இறுதியாக தென்னாப்பிரிக்க ரசிகர்களுக்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். எந்தவொரு விளையாட்டிலும், குறிப்பாக இதற்குமுன் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் இதுபோன்று பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, இனிவரும் போட்டிகளில் எங்களால் முடிந்த அளவுக்கு உங்களுக்காக முயற்சி செய்கிறோம் என அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<