சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் யார்?

4961
National Selectors, Who would you pick?

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் திருவிழாவாக அமையவிருக்கும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆரம்பமாகும் 2017ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஸ் கிண்ணத்தில், இலங்கை சார்பாக விளையாடப்போகும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன.

இத்தருணத்தில், முக்கியமான இத்தொடரில் இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக விளையாட தகுதி உள்ள வீரர்களை பற்றி ஒரு விரிவான ஆய்வினை ThePapare.com மேற்கொள்கின்றது.

ICC யின் தொலைக்காட்சி வர்ணனையாளராக குமார் சங்கக்கார

கடந்த காலங்களில் அதிவலுவான ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கியதற்கு பெயர் சொல்லப்பட்ட ஒரு நாடாக இலங்கை இருந்தது. எனினும், தற்கால நிலைமைகளை ஒப்பிடும்போது இறுதி 12 மாதங்களில் இலங்கை அணி, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ஜோடியினை தேர்வு செய்வதில்  பிறழ்வினை சந்தித்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.  குறிப்பிட்ட இந்த காலப்பகுதியில் ஆறு தடவைகளுக்கு மேலாக இலங்கையின் ஆரம்ப வீரர்கள்  மாற்றப்பட்டிருக்கின்றனர்.

அணியின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான ஆரம்ப துடுப்பாட்டத்திற்கு பொருத்தமான ஆறு வீரர்களினை நாங்கள் இந்த கட்டுரை மூலம் பார்க்கவுள்ளோம்.

இலங்கை தேசிய அணியின் தேர்வாளர்களின் தலைமைப் பொறுப்பினை வகிக்கும் முன்னாள் அபாயகர அதிரடி ஆரம்ப நாயகனான சனத் ஜயசூரிய இத்தொடரில், குறைந்தது மூன்று ஆரம்ப வீரர்களையாவது தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உபுல் தரங்க

Upul Tharangaதற்போதைய மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் விளையாடும் இலங்கை குழாத்தில் இருக்கும் வீரர்களில் அனுபவம் கூடிய ஒருவர் என உபுல் தரங்கவைப் பற்றி கூறுவதில்  மிகையேதும் இருக்க முடியாது.

இதுவரை 200 சர்வதேச போட்டிகளுக்கு மேலாக விளையாடியிருக்கும் தரங்க, 14 சதங்களுடன் 6000 ஓட்டங்களை எட்டியிருக்கின்றார்.

உபுல் தரங்க எப்படியும் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இந்த மாபெரும் தொடரிற்கு தேர்வாளர்கள் மூலம் அணியில் வாய்ப்பைப் பெறுவார் என்பதும் உறுதியானது.

காயத்திலிருந்த இலங்கை அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்சிற்கு பதிலாக, ஜிம்பாப்வேயில் இடம்பெற்ற முக்கோணத் தொடரில் அணித் தலைவராக செயற்பட்டிருந்த தரங்க, அத்தொடரினை இலங்கை வெல்வதற்கு பெரிதும் துணையாக இருந்தார்.

அதன் பின்னர் தென்னாபிரிக்காவுடன் 5-0 என இலங்கை வைட் வொஷ் செய்யப்பட்ட ஒரு நாள் தொடரில் இலங்கை அணியின் தலைவராக தரங்க செயற்பட்டார். தொடர்ந்து, பங்களாதேசுடனான ஒரு நாள் தொடரில் இறுதியாக விளையாடிய இலங்கை, அதனை தரங்கவின் தலைமையில் 1- 1 என சமநிலைப்படுத்தியிருந்தமையும் நினைவு கூறத்தக்கது.

அவுஸ்திரேலிய முன்னணி தொடரில் இலங்கையின் வலைப்பந்து நட்சத்திரம் தர்ஜினி

தரங்க இலங்கை அணிக்காக 13 போட்டிகளில் தலைவராக செயற்பட்டுள்ளதோடு, அதில் 7 போட்டிகளில் ஆரம்ப வீரராக களமிறங்கி 302 ஓட்டங்களினை விளாசியுள்ளார். இதில் தென்னாபிரிக்க அணியுடன் அதிரடியாக ஆடிப்பெற்ற 117 ஓட்டங்களும் அடங்கும்.

இங்கிலாந்து மண்ணில் 70 ஓட்டங்களிற்கு சற்று குறைந்த ஓட்ட சராசரியினை ஆரம்ப வீரராக களமிறங்கி பெற்றுக் கொண்டிருக்கும் உபுல் தரங்க, 2006 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணியுடனான தொடரில் சனத் ஜயசூரியவுடன் சேர்ந்து ஆங்கிலேயப் பந்து வீச்சாளர்களை சிதறடித்ததை யாராலும் மறக்க முடியாது. அதே சிறப்பான ஆட்டத்தினை தரங்க இம்முறையும் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.  

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்குள் அஞ்சலோ மெத்திவ்ஸ் திரும்பி விடுவார் என்கிற காரணத்தினால், தலைமைப் பொறுப்பின் சுமை இல்லாமல் தரங்கவினால் இத்தொடரில் பங்கேற்று இலங்கை துடுப்பாட்டச் சக்கரத்தின் அச்சாணிகளில் ஒன்றாக செயற்பட முடியும்.

குசல் ஜனித் பெரேரா

தைரியம் மிக்க ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான இளம் வீரர் குசல் ஜனித்Kusal Janith Perera பெரேரா, 2013ஆம் ஆண்டில் அறிமுகமாகியிருந்ததன் பின்னர், கடைசியாக தான் பங்குபற்றிய மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் தன்னால் எவ்வாறாக செயற்பட முடியும் என்பதனை உலகிற்கு வெளிக்காட்டியிருந்தார்.

குட்டி சனத்என்னும் செல்லப் பெயர் மூலம் அனைவராலும் அழைக்கப்படும் குசல், 57 போட்டிகளில் ஆரம்ப வீரராக ஆடி 26.80 என்கிற ஒட்ட சராசரியினை வைத்திருக்கின்றார். எனினும், கடந்த 12 மாதங்களில் இலங்கை அணிக்காக குசல் பெரேரா ஒரு சதத்தினை மாத்திரமே பெற்றிருந்தார். அதுவும் அயர்லாந்து அணிக்கெதிராக கடந்த வருட ஜூன் மாதத்தில் பெறப்பட்டதாகும்.

தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தினை காட்டியிருந்த காரணத்திலும் உபாதை ஒன்று ஏற்பட்ட காரணத்தினாலும் பெரேராவிற்கு இலங்கை அணியில் கிடைத்திருந்த இடம் மறுக்கப்பட்டிருந்தது. எனினும், சில வாரங்களுக்கு முன்னர் பங்களாதேஷ் அணியுடனான முதலாவது T-20 போட்டியில் 77 ஓட்டங்களினை விளாசிய அவர், அப்போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற பெரும்பங்காற்றி தனது வழமையான ஆட்டத்திற்கு திரும்பியிருந்தார்.

இங்கிலாந்தில் 11 போட்டிகளினை விளையாடியிருக்கும் பெரேரா, அங்கே 11.72 என்னும் ஓட்ட சராசரியினை மாத்திரமே வைத்திருக்கின்றார்.  அத்துடன், இறுதியாக 2013இல் இங்கிலாந்தில் நடந்த சம்பியன்ஸ் கிண்ணத்திலும் ஆடியிருந்த அவர் வெறும் 14 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக ஜிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் தொடரில் விளையாடியிருந்த பெரேரா 5 இன்னிங்சுகளில் 46 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றார். எனவே, தேர்வாளர்கள் இத்தொடரில் பெரேராவினை தெரிவு செய்வதை பொறுத்திருந்தே நோக்க வேண்டும்.  

இவ்வருட கிரிக்கெட் சமர்களின் சிறப்பாட்டங்களின் தொகுப்பு

நிரோஷன் திக்வெல்ல

Niroshan Dickwellaடில் ஸ்கூப்ஆர்வம் காட்டியவர்களைடிக் ஸ்கூப்என்னும் அற்புதமான துடுப்பாட்ட முறையை அறிமுகம் செய்து பலரையும் கவர்ந்திழுத்த நிரோஷன் திக்வெல்ல, தனது சிறப்பாட்டம் மூலம் கடந்த இரு மாதங்களாக அனைவராலும் அறியப்பட்டிருந்தார். 2014ஆம் ஆண்டு இந்தியா அணிக்கு எதிரான போட்டியொன்றில் அறிமுகமாகியிருந்த திக்வெல்ல அப்போது பெரிதாக பிரகாசித்திருக்கவில்லை.

எனினும், கடந்த வருடத்தில் ஜிம்பாப்வேயில் நடைபெற்றிருந்த முக்கோணத்தொடர் மூலம் தனது மறுபிரவேசத்தினை இலங்கை அணிக்காக திக்வெல்ல மீண்டும் வழங்கியிருந்தார். அத்தொடரில் இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்களினை குவித்த வீரராக திக்வெல்ல காணப்பட்டதோடு, 11 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 38 என்கிற ஓட்ட சராசரியினையும் வைத்துள்ளார்.

பங்களாதேஷ் அணியுடனான ஒரு நாள் போட்டித் தொடரிலும், T-20 தொடரிலும் இடது கையில் ஏற்பட்ட சிறு உபாதை காரணமாக அவருக்கு விளையாடும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போயிருந்தது.  திக்வெல்ல தற்போது பூரண சுகத்தை எட்டியிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் மூலம் எமக்கு  அறியக் கிடைக்கின்றது.

திரித்துவ கல்லூரியின் முன்னாள் அணித் தலைவரான நிரோஷன் திக்வெல்ல, நடைபெற்று வரும் மாகாண அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாட பெயரிடப்படவில்லை. எனினும், அவர் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அத்தொடரின் ஏனைய போட்டிகளில் விளையாடக் கூடியதாக இருக்கும் என சில வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது. இத்தொடரில் சிறப்பாக செயற்படுவது தேர்வாளர்களினை திக்வெல்லவின் பக்கம் ஈர்க்க பெரும்பாங்காற்றும் காரணிகளில் ஒன்றாக இருக்கும்.

திக்வெல்ல மற்றும் தரங்க ஜோடி, நடைபெற்று முடிந்த தென்னாபிரிக்க அணியுனான நான்காவது ஒரு நாள் போட்டியில் முதல் 10 ஓவர்களில் 100 ஓட்டங்களினைப் பெற்று இலங்கை அணிக்காக ஜொலித்திருந்தனர். அது 2001 ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கை அணி 10 ஓவர்களில் விரைவாகப் பெற்ற 100 ஓட்டங்களில் இரண்டாம் இடத்தினைப் பிடிக்கின்றது. NCC அணியின் ஆரம்ப வீரர்களான இந்த இருவரும் இங்கிலாந்திலும் கை கோர்க்க இலங்கை தேர்வாளர்கள் விடுவார்களா? காத்திருந்தே பார்க்க வேண்டும்.

தனுஷ்க குணத்திலக்க

எதிரணி பந்து வீச்சாளர்களினை தடுத்தாடும் ஆற்றல்Danushka Gunathilaka கொண்ட வீரர்களில் ஒருவரான
தனுஷ்க குணத்திலக்க, 2015இல் தனது ஆரம்பப் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டிருந்தார். எனினும், தனக்கு தொடர்ந்தும் கிடைத்த வாய்ப்புக்களின் மூலம் ஓட்டங்கள் குவிப்பதனை குணத்திலக்க தவறவிட்டிருந்தார்.

இதுவரை 18 ஒரு நாள் இன்னிங்சுகளில் விளையாடியிருக்கும் குணத்திலக்க மூன்று அரைச் சதங்களுடன் 23.33 என்கிற ஓட்ட சராசரியினை வைத்திருக்கின்றார்.

பங்களாதேஷ் அணியுடனான தனது அண்மைய ஒரு நாள் தொடரில் 0,9,34 என்கிற ஓட்டங்களைப்பெற்றிருந்த அவருக்கு, குசல் பெரேராவின் மீள்வருகையினால் T-20 தொடரில் விளையாடும் வாய்ப்பு கிட்டியிருக்கவில்லை.

பயிற்றுவிப்பாளராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடரும் மட்டு நகர் ஜோன்சன் ஐடா

SSC அணி வீரரான குணத்திலக்க, உள்ளூர் போட்டிகளிலும் இலங்கை A அணிக்காக தான் விளையாடியிருந்த போட்டிகளிலும் அதி சிறப்பாக செயற்பட்டிருந்தார். எனினும், இலங்கை அணியின் ஆரம்ப வீரராக விளையாடிய அவருக்கு சரியான முறையில் பிரகாசிக்க முடியாது போனது.

குணத்திலக்கவின் அதிசிறந்த களத்தடுப்பு சம்பியன்ஸ் கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பினை பெற துணையாக இருக்கும். எனினும், தேர்வாளர்கள் முன்வரிசை துடுப்பாட்டத்தில் நிலையாக நீண்ட நேரம் நிற்க கூடிய ஒருவரையே எதிர்பார்க்கவும் கூடும்.

இலங்கை கிரிக்கெட்டின் முகாமையாளரான அசங்க குருசிங்க, அண்மைய தனது பேச்சுக்களில் குணத்திலக்க பற்றி அதிகம் பேசி இருப்பதோடு தடுமாறி வரும் இலங்கை ஆரம்பத்திற்கு நிரந்தர தீர்வாகவும் குணத்திலக்கவினை நோக்குகின்றார். எனவே, 26 வயதான குணத்திலக்கவினையும்  இங்கிலாந்திற்கான இந்த  சுற்றுப்பயணத்தில் எம்மால் எதிர்பார்க்க முடியும்.  

தனன்ஞய டி சில்வா

Dhananjaya De Silvaஅழகிய வலது கை துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான தனன்ஞய டி சில்வா இலங்கை சார்பாக ஒரு நாள் போட்டியொன்றில் ஆரம்ப வீரராக முதற்தடவையாக களமிறங்கி அதிக ஓட்டங்களினை குவித்த வீரர் என்னும் பெருமையினைக் கொண்டிருக்கின்றார்.

கடந்த வருட ஒகஸ்ட் மாதத்தில் அவுஸ்திரேலிய அணியுடனான நான்காவது ஒரு நாள் போட்டியிலேயே சில்வாவினால் 77 ஓட்டங்கள் பெறப்பட்டு அச்சாதனை நிகழ்த்தப்பட்டிருந்தது. இதோடு சேர்த்து மேலும் இரண்டு அரைச் சதங்களுடன், 6 இன்னிங்சுகளில் ஆரம்ப வீரராக விளையாடி 50ஐ அண்மித்த சிறந்த ஓட்ட சராசரியினை தனன்ஞய டி சில்வா வைத்திருக்கின்றார்.

இலங்கை அணிக்காக பல துடுப்பாட்ட வரிசை இடங்களில் சில்வா விளையாடியிருந்த போதும், ஆரம்ப வீரராக வந்திருந்ததே அவருக்கு கைகொடுத்திருந்தது. தென்னாபிரிக்கா அணியுடனான தனது கடைசி ஒரு நாள் தொடரில் மத்திய வரிசையில் விளையாடியிருந்த சில்வா 5 இன்னிங்சுகளில் 51 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றிருந்தார்.

பங்களாதேஷ் அணியுடனான தொடரில் வீரர்களுக்கு குடிபானங்கள் வழங்கும் வேலையினை மாத்திரமே தனன்ஞய டி சில்வா செய்திருந்தார்.  எனினும், இங்கிலாந்தில் நடைபெறும் தொடரில் சரியான வலது கை துடுப்பாட்ட வீரரான இவரினை இலங்கை தேர்வாளர்கள் தேர்வு செய்வதும், ஆரம்ப வீரராக வாய்ப்பு வழங்குவதையும் வரும் நாட்களிலேயே எம்மால் அறிய முடியும்.

சதீர சமரவிக்ரம

வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவரான சதீர சமரவிக்ரம, சிறந்த வலது  கைSadeera Samarawickrama
துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராய் இருப்பதோடு விக்கெட் காப்பாளராகவும் செயற்படக் கூடிய ஒருவர்.

கடந்த ஆறு மாதங்களாக அதி சிறப்பான ஆட்டத்தினை காண்பித்து வரும் சதீர, நடைபெற்று முடிந்த நான்கு நாட்கள் கொண்ட உள்ளூர் போட்டி தொடரில் அதிக ஓட்டங்களினை குவித்த வீரராவர். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக இலங்கை A அணியில் விளையாடிய இவர், அத்தொடரில் அபார ஆட்டத்தினை வெளிக்கொணர்ந்திருந்தார். அத்துடன், அண்மையில் இலங்கை இளையோர் அணி ஆசிய கிண்ணத்தினை கைப்பற்றுவதற்கும் இவர் பெரும்பாங்கற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

21 வயது மாத்திரமே பூர்த்தியான முன்னாள் ஜோசப் கல்லூரி மாணவரான சதீர சமரவிக்ரம, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் தற்போது நடைபெற்று வரும் மாகாண ரீதியிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டியிலும் அபார சதம் ஒன்றினை விளாசியிருந்தார். இப்படியான அபார துடுப்பாட்ட வீரர் ஒருவர் அணியில் இருப்பது எதிரணிப் பந்து வீச்சினை சமாளிக்க இலங்கை அணிக்கு அதி இலகுவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.  

காலிறுதிக்கு முன்னைய சுற்றில் சௌண்டர்ஸ், ராணுவப்படை மற்றும் கிறிஸ்டல் பெலஸ் அணிகள்

இலங்கைத் தேர்வுக்குழாம், குறித்த தொடரில் விளையாடவிருக்கும் வீரர்கள் பற்றிய அறிவிப்பினை மேற்கொள்வதற்கு மாகாண அணிகளுக்கு இடையிலான இன்னும் இரண்டு போட்டிகளே எஞ்சியிருக்கும் இத்தருணத்தில் முதல் தடவையாக இலங்கை அணியில் இடம்பெற்று தனது கன்னி தொடரில் சாதிக்க சதீர சமரவிக்ரமவிற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் வாய்ப்பளிக்குமா? எதிர்ப்பார்த்து இருப்போம்.

மேலே நாம் காட்டிய இந்த வீரர்களில் இலங்கை அணியின் ஆரம்ப வீரர்களாக இவ்வருட சம்பியன்ஸ் கிண்ணத்தில் செயற்படும் தகுதி யாருக்கு உள்ளது?

உங்களது கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்