தேசிய மட்ட வீரர்களுக்கு விளையாட்டு அமைச்சினால் கொடுப்பனவு மழை

135

இவ்வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆசிய விளையாட்டு விழா ஆகியவற்றில் 5 விளையாட்டுகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாமில் இடம்பெற்றுள்ள 111 தேசிய மட்ட வீரர்களுக்கு விளையாட்டு நிதியத்திலிருந்து 4 மில்லியன் ரூபா பெறுமதியிலான போசனக் கொடுப்பனவு உத்தியோகபூர்வமாக நேற்று(17) கையளிக்கப்பட்டது.

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தலைமையில் விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய மட்ட விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், முன்னாள் வீரர்கள், விளையாட்டு சங்கங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் சுரேஷ் சுப்ரமணியம் போட்டி

முன்னாள் டென்னிஸ் வீரரும், இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தின் ……………

இதன்போது, மெய்வல்லுனர், ரக்பி, பளுதூக்கல், கராத்தே மற்றும் ஜுடோ உள்ளிட்ட 5 விளையாட்டுகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள 111 வீரர்களுக்கும், 38 பயிற்றுவிப்பாளர்களுக்கும் நாற்பத்து ஆறு இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பணம், விளையாட்டு நிதியத்திலிருந்து பகிர்ந்தளிக்கப்பட்டது.

அத்துடன், குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும், தமது கடந்த கால முன்னேற்றங்கள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு தெளிவுபடுத்தியதுடன், தமது பதக்க எதிர்பார்ப்புகள் குறித்தும் கருத்து வெளியிட்டனர்.

இந்நிகழ்வில், விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் சமன் பண்டார கருத்து வெளியிடுகையில், ”மெய்வல்லுனர் விளையாட்டில் 21 வீரர்கள் மற்றும் 12 பயிற்சியாளர்களுக்கும், கராத்தே விளையாட்டில் 4 வீரர்களுக்கும், பளுதூக்கல் விளையாட்டில் 15 வீரர்கள் மற்றும் 6 பயிற்சியாளர்களுக்கும், கனிஷ்ட மெய்வல்லுனரில் 27 வீரர்களுக்கும், 13 பயிற்சியாளர்களுக்கும், ரக்பி வீரர்கள் 36 பேருக்கும் இவ்வாறு போசனைக் கொடுப்பனவு வழங்கிவைக்கப்பட்டுள்ளன” என்றார்.

இதேவேளை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கருத்து வெளியிடுகையில், ”நாட்டிலுள்ள ஒவ்வொரு விளையாட்டு சங்கத்திற்கும் பொறுப்புக் கூறுகின்ற அமைச்சாக அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொடுக்க தயாராகவுள்ளோம். அதேபோல அவ்வாறு உதவிகளைப் பெற்றுக்கொள்கின்ற வீரர்கள், அதன் பெறுமதியை உணர்ந்து திறமைகளை வெளிப்படுத்தி நாட்டிற்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

4ஆவது தடவையாகவும் மரதனில் சாதனை படைத்த இலங்கை வீராங்கனை

கொழும்பு ஸ்போர்ட்ஸ் ரைஸன் அமைப்பு… முன்னதாக , கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம்…….

அத்துடன், பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளுக்காக மேலதிகமான வீரர்களை அழைத்துச் செல்வதற்கு நான் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டேன். எனினும், அடைவுமட்டத்தைப் பூர்த்தி செய்த அனைத்து வீரர்களும் இதற்காக தீவிர பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். எனக்கு சிறந்த பெறுபேறுகள் மட்டும் வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் எமது முயற்சிக்கு எந்தவொரு பிரதிபலனும் கிடைக்காது என சுட்டிக்காட்டிய அமைச்சர், பதக்கம் வெல்கின்ற மற்றும் சாதனை படைக்கின்ற வீரர்கள், திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களுக்கும் அவர்களுடைய பயிற்சியாளர்களுக்கும் மேலும் பல நிதி உதவிகளை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், சுகதாஸ சுவட்டு மைதானத்தின் நிர்மானப் பணிகள் அடுத்த மாதம் நிறைவுக்கு வரவுள்ளது. எனவே, எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள போட்டித் தொடர்களுக்கு அனைத்துவித ஒத்துழைப்பினையும் வழங்கத் தயாராகவுள்ளதாகவும், வெளிநாடுகளில் பயிற்சிகளை மேற்கொள்ளத் தேவையான வசதிகளையும் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேநேரம், தொழில் வாய்ப்புகள் இல்லாமல் தேசிய குழாமில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் அரச நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை சமர்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.