மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த இலங்கை கிரிக்கெட் அணியினர்

806
Sri lanka Cricketers visit with the victims

இலங்கை தேசிய அணி வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல, சஜித் பத்திரன, திசர பெரேரா மற்றும் டில்ஷான் முனவீர ஆகியோர், மூத்த கிரிக்கெட் வீரரான ரங்கன ஹேரத்தின் தலைமையில், மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததனால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தினால் பாதிப்புக்குள்ளாகிய மக்கள், தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள கொலன்னாவ டர்ரன்ஸ் டி சில்வா பாடசாலைக்கு சென்ற இலங்கை அணி வீரர்கள், அங்குள்ள மக்களுடன் சில மணி நேரத்தை செலவிட்டு, அவர்கள் நிலைமை குறித்து விசாரித்தனர். அதற்கு மேலதிகமாக, அங்குள்ள சிறுவர்களுடன் சற்று நேரம் கிரிக்கெட் விளையாடி அவர்களை உற்சாகப்படுதினர்.

ICC யின் தொலைக்காட்சி வர்ணனையாளராக குமார் சங்கக்கார

அதேநேரம், நேரடி ஒளிபரப்பிற்கான வரைபு திட்டங்களை சர்வதேச கிரிக்கெட் சபை முதல் தடவையாக வெளியிட்டுள்ள நிலையில், வீரர்களை கண்காணிக்கும் புகைப்படக் கருவி (Camera) தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படவுள்ளது.

இதன்போது, பாதிக்கப்பட்ட மக்களை, மன வேதனை மற்றும் மன அழுத்தத்திலிருந்து மீட்டெடுக்கும் நோக்கிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் குறித்த நிவாரண முகாமிற்கு 40 அங்குள தொலைக்காட்சி மற்றும் டிடிவி இணைப்புக்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

இந்த விஜயத்தின் போது, பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்து பேசிய ரங்கன ஹேரத், தேசிய கிரிக்கெட் வீரர்களின் மனநிலையை இவ்வாறு வெளிப்படுத்தினார்,

நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என அனைவரும் ஆதரவு வழங்குகின்றனர். ஒவ்வொரு கொடியையும் நீங்கள் அசைக்கும் போதும், இலங்கை அணியின் ஒவ்வொரு டிசேர்ட்டையும் நீங்கள் அணியும் பொழுதும், அது எங்களுக்கு சக்தியை கொடுத்து எங்களை பலப்படுத்தும்.

அதனால், நாங்கள் இங்கே இருப்பதற்கு நீங்களே காரணம். நாம் உங்களுடன் எப்போதும் இருப்போம். உங்கள் வலி எங்களின் வலி. நீங்கள் எங்களுக்கு எவ்வாறு ஆதரவு தருகின்றீர்களோ அவ்வாறே, நாமும் உங்களுக்கு ஆதரவு தருவோம்.

சற்று நேரத்துக்கு தொலைகாட்சியை பார்த்து இளைப்பாறுங்கள். உங்களுக்கு விருப்பமான கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவியுங்கள் அல்லது விருப்பமான படம், நாடகங்களை பாருங்கள். அல்லது சிறுவர்களுக்கு கார்ட்டூன் பார்க்க சந்தர்ப்பம் கொடுங்கள். நடந்த அனர்த்தத்தினை சற்று நேரத்திற்காவது மறந்து மகிழ்வுரட்டும். குறைந்த பட்சம் சில நிமிடங்களுக்காவது கவலைகளை மறந்து சந்தோசமாக இருங்கள் ” என்று கூறினார்.

சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் யார்?

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் திருவிழாவாக அமையவிருக்கும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆரம்பமாகும் 2017ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஸ் கிண்ணத்தில்…

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் கௌரவ திலங்க சுமதிபாலவின் ஆரம்ப முயற்சியாக, கிரிக்கெட் நிவாரண பிரிவினூடாகவே குறித்த மக்களுக்கான நன்கொடைகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு கருத்து தெரிவித்த திலங்க சுமதிபால, ”நாங்கள் ஒரு அணி ஒரு நாடு. இங்கு, உள்நாட்டுப் போர், சுனாமி, வறட்சி, வெள்ளப்பெருக்கு என பல்வேறான இயற்கை அனர்த்தங்கள் இடம்பெற்றிருந்த போதிலும், எமது மக்கள் அதனோடு பயணித்து புன்னகைத்தனர். அவர்களுக்கு இன்னும் வாழ முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. சிறிய தீவில் பெரிய இதயம் உள்ளவர்கள் நாங்கள். இலங்கை கிரிக்கெட் சபை என்ற வகையில், எங்களுக்கு ஆதரவு தரும் மக்களுக்கு நாமும் எங்களுடைய கடமையை செய்ய வேண்டும். அதுவே, இலங்கை கிரிக்கெட் நிவாரண பிரிவின் நோக்கமாகும்” என்றார்.