முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு ஐ.பி.எல். போட்டிகளில் ஆடத் தடை

401

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து நட்சத்திரமான முஸ்தபிசுர் ரஹ்மான் 2019ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் (IPL) வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) விடுத்த தடை உத்தரவினை அடுத்தே முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு .பி.எல். வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்க முடியாமல் போயிருக்கின்றது. இதனால் முஸ்தபிசுர் ரஹ்மான் அடுத்த ஆண்டு இடம்பெறும் .பி.எல். தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளமை உறுதியாகியுள்ளது.

ஐ.பி.எல் ஏலத்தில் 1003 வீரர்கள் போட்டி; 28 இலங்கை வீரர்கள்

பங்களாதேஷின் கிரிக்கெட் சபை இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் தமது வேகப்பந்து வீச்சாளர்களை வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாட வைப்பதில்லை எனத் தீர்மானம் எடுத்திருந்தது. அடுத்த ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணம் ஆரம்பமாகுவதால் அதற்கு முன்னர் பங்களாதேஷின் வேகப்பந்து வீச்சாளர்கள் எவரும் உபாதைக்கு ஆளாகிவிடக் கூடாது என்கிற காரணத்தினாலேயே குறித்த தீர்மானம் பங்களாதேஷின் கிரிக்கெட் சபையினால்  எடுக்கப்பட்டிருந்தது.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் இந்த முடிவு பற்றி முஸ்தபிசுர் ரஹ்மான் முன்னதாக அறிவுறுத்தப்பட்டதோடு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வெளிநாட்டு T20 தொடர்களில் விளையாடக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தார்.  

.பி.எல் தொடரில் சன்ரைஸர்ஸ் அணிக்காக 2016ஆம் ஆண்டின் பருவகாலத்தில் ஆடிய ரஹ்மான் அதில் 16 போட்டிகளில் பங்கெடுத்து 17 விக்கெட்டுக்களுடன் தனது அணி சம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தார். அதற்கு பின்னர் 2017ஆம் ஆண்டின் பருவகாலத்தில் ஒரு போட்டியில் மட்டுமே சன்ரைஸர்ஸ் அணிக்காக ஆடிய அவர், இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியினால் கொள்வனவு செய்யப்பட்டிருந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 82 வருடகால சாதனையை முறியடித்த யசீர் ஷா

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முஸ்தபிசுர் ரஹ்மான் இந்த ஆண்டு வெறும் 7 போட்டிகளில் மட்டுமே ஆடிய வேளையில் காயம் காரணமாக தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறியிருந்தார். இதனை அடுத்து முஸ்தபிசுர் ரஹ்மானை மும்பை இந்தியன்ஸ் அணி தமது குழாத்தில் இருந்து ஏலத்திற்காக விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முஸ்தபிசுர் ரஹ்மான் இல்லாத போதிலும் இந்த ஆண்டுக்கான .பி.எல் வீரர்கள் ஏலத்தில் பங்களாதேஷின் ஏனைய வீரர்களான தமிம் இக்பால், மஹ்மதுல்லாஹ், செளம்யா சர்க்கார், சப்பிர் ரஹ்மான், இம்ருல் கைஸ், அபு ஹைதர், லிடன் தாஸ் மற்றும் நயீம் ஹசன் ஆகியோர் பங்கெடுக்கின்றனர்.

இதேநேரம், முஸ்தபிசுர் ரஹ்மான் போன்று பங்களாதேஷின் நட்சத்திர சகலதுறை வீரரான சகீப் அல் ஹசனுக்கும் அந்நாட்டு கிரிக்கெட் சபை இந்த ஆண்டுக்கான .பி.எல். வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்க தடை விதித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க