5 நாட்களைக் கொண்ட 2016ஆம் ஆண்டுக்கான முரளி கிண்ண போட்டிகளின் 3ஆவது நாளிற்கான போட்டிகள் இன்று வட மாகாணங்களில் உள்ள நகரங்களான யாழ்ப்பாணம், ஒட்டுசுட்டான், மாங்குளம், மற்றும் கிளிநொச்சியில் அமைந்துள்ள 5 மைதானங்களில் நடைபெற்றன.

இன்று நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள்

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி எதிர் கொழும்பு சாஹிரா கல்லூரி

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் கொழும்பு சாஹிரா கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு ஹிரா கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு  சாஹிரா கல்லூரி – 115/8 (20) சஜித் சமீர 41, முஹமத் காலித் 19, முஹமத் ஷஹதுல்லாஹ் 17, ஹரின் குரே 11/2, ருச்சிர ஏக்கநாயக்க 22/1

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி – 117/3 (15.1) செவன் பொன்சேகா 54, தினெத் மதுருவெல 39*, தஷான் பெரேரா 13*, சஜித் சமீர 22/1, ஹுசைன் சப்ரி ஹுசைன் அன்பாஸ் 21/1

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி  7 விக்கெட்டுகளால் வெற்றி


மாத்தளை பெண்கள் அணி எதிர் பொலன்னறுவை பெண்கள் அணி

மாத்தளை பெண்கள் அணி மற்றும் பொலன்னறுவை பெண்கள் அணிகளுக்கு இடையிலான போட்டி மாங்குளம் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பொலன்னறுவை பெண்கள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

பொலன்னறுவை பெண்கள் அணி – 93/5 (15) சி. அத்தனதெனிய 34, மதுஷானி சசிகலா 22*, நிர்மலா விஜேரத்ன 11, டில்ருக்ஷி அரம்பேகொட 15/2, சந்தமினி லங்கா 19/2

மாத்தளை பெண்கள் அணி – 97/3 (11.3) லக்மினி கொஸ்வத்த 26, சமலி புசெல்ல 24, ரபி ரஜிந்த 15, சி. அத்தனதெனிய 19/2, மதுஷானி சசிகலா 21/1

மாத்தளை பெண்கள் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி


கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி எதிர் திருகோணமலை / பட்டி இணைந்த கல்லூரிகள்

கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி மற்றும் திருகோணமலை / பட்டி இணைந்த கல்லூரிகள் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற திருகோணமலை / பட்டி இணைந்த கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

திருகோணமலை / பட்டி இணைந்த கல்லூரிகள் – 113/7 (20) சுஜாத் முஹமத் 16, அவிஷ்க ஷெஹான் 18, எம். சருஹன் 21*, யசோத் கவிந்த 15/2, ஜனித் தென்னகோன் 20/2

கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி – 115/8 (18.3) ருவந்த ஹத்துருசிங்ஹ 33, விமுக்தி விஜேசிறிவர்தன 16*, டில்ஷான் வலிசுந்தர 16, முஹமத் பாஹிம் 18/2, எம். சருஹன் 23/2

கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி


கொழும்பு நாலந்த கல்லூரி  எதிர் இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரி

கொழும்பு நாலந்த கல்லூரி மற்றும் இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டி  கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு நாலந்த கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு நாலந்த கல்லூரி – 175/5 (20) சச்சின்த மதுமல் 47, லக்ஷித மனசிங்ஹ 36*, எரங்க ஜயசிங்ஹ 32*, ரஜித நிர்மல் 34/3, டிலன் ஹரிஸ்சந்திர 22/1

இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரி – 102/7 (20) ரஜித நிர்மல் 20, ஷகில ப்ரபஸ்வர 23, திமிர காஸ்யப்ப 14, தினிது விஜேவர்தன 20/2, சச்சின்த மதுமல் 20/2

கொழும்பு நாலந்த கல்லூரி அணி 73 ஓட்டங்களால் வெற்றி


கொழும்பு றோயல் கல்லூரி எதிர் மலையக இணைந்த கல்லூரிகள்

கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் மலையக இணைந்த கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டி யாழ்ப்பாணம் புனித பெட்ரிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு றோயல் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு றோயல் கல்லூரி – 159/6 (20) கே. ரவீந்தரநாதன் 43, பசிந்து சூரியபண்டார 42*, றோனுக ஜயவர்தன 26, சமோத் பண்டார 28/1, கே. அகலன்க 25/1

மலையக இணைந்த கல்லூரி – 89/9 (20) கே. அகலன்க  25*, ஜி. சனுக 15, தினுக டி சில்வா 17, சறுக்க ஹதரசிங்ஹ 15/4, ஹெலித்த விதானகே 17/3

கொழும்பு றோயல் கல்லூரி 70 ஓட்டங்களால் வெற்றி


சீனிகம பெண்கள் அணி எதிர் மொனராகல பெண்கள் எகடமி அணி

சீனிகம பெண்கள் அணி மற்றும் மொனராகல பெண்கள் எகடமி அணிகளுக்கு இடையிலான போட்டி  மாங்குளம் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சீனிகம பெண்கள் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

மொனராகல பெண்கள் எகடமி அணி – 99/5 (15) பேசல ரனஹன்சி 50, நிரோஷா சஞ்சீவனி 23, லக்ஸ்மி சந்தலங்கா 08, சிக்கரி நுவந்த 23/1, சத்யா சந்தீபனி 16/1

சீனிகம பெண்கள் அணி – 102/5 (11.1) சத்யா சந்தீபனி 50*, பூஜா ரஞ்சனா 14, இமேஷா துலனி 13*, மொனிக்கா சந்தனி 16/3, பேசல ரனஹன்சி  15/1

சீனிகம பெண்கள் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி


யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி எதிர் மொனராகல இணைந்த கல்லூரிகள்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் மொனராகல இணைந்த கல்லூரிகள் அணிகளுக்கு இடையிலான போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத்  தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி – 144/8 (20) எஸ். கௌதமன் 26, எஸ் அலன்ராஜ் 24, கே. தீபன்ராஜ் 16*, நிரந்த டி சில்வா 16/3, திலீப சந்தருவன் 26/1

மொனராகல இணைந்த கல்லூரிகள் – 143/7 (20) அஞ்சுல ப்ரசஞ்சித் 53, நிரந்த டி சில்வா 20*,  திலீப சந்தருவன் 17, எண்டன் அனஸ்ராஜ் 20/3, எஸ். தசோபன் 24/1

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 1 ஓட்டத்தால் வெற்றி

 Photos: Murali Harmony Cup 2016 – Day 3 


கிளிநொச்சிமுல்லைத்தீவு இணைந்த கல்லூரிகள் எதிர் களுத்துறை வித்தியாலயம்

கிளிநொச்சிமுல்லைத்தீவு இணைந்த கல்லூரிகள் மற்றும் களுத்துறை வித்தியாலய அணிகளுக்கு இடையிலான போட்டி  கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற முல்லைத்தீவு இணைந்த கல்லூரி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

களுத்துறை வித்தியாலயம்   – 140/7 (20) நதீர ஜயவர்தன 51, சத்துமின சில்வா 26, தெஹான் தினுக் 15*, சுரேந்திரன் தனிஜல் 9/3, அருணாச்சல அகிலன் 25/2

கிளிநொச்சிமுல்லைத்தீவு இணைந்த கல்லூரி – 116/10 (18.2) ரகுநாதன் ரஜீவன் 27, வி. தனப்ரியன் 21, . அனுக்ஷன் 17, மதுவிந்த சிறிவர்தன 19/3, டிஷான் லக்ஷித 15/2, சனுக்க லக்ஷன் 21/2

களுத்துறை வித்தியாலய அணி  24 ஓட்டங்களால் வெற்றி


மன்னார்வவுனியா இணைந்த கல்லூரிகள் எதிர் காலி மஹிந்த கல்லூரி

மன்னார்வவுனியா இணைந்த கல்லூரிகள் மற்றும் காலி மஹிந்த கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டி  ஒட்டுசுட்டான் மகா வித்தியால மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மன்னார்வவுனியா இணைந்த கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

மன்னார்வவுனியா இணைந்த கல்லூரி – 80/10 (19.4) குணராஜா போல்ராஜ் 29, எஸ். ருஸாந்தன் 15, கவிந்து எதிரிவீர 19/4, கே. கவின் 7/2

காலி மஹிந்த கல்லூரி – 84/3 (10) ரவிந்து வெலிஹிந்த 28*, ரேஷன் கவிந்த 17, வினுர துல்சற 15, திருப்பதிபிள்ளை சூரியகாந்தன் 20/1

காலி மஹிந்த கல்லூரி 7 விக்கெட்டுகளால் வெற்றி


யாழ்ப்பாணம் இணைந்த கல்லூரிகள் எதிர் சீனிகம இணைந்த கல்லூரிகள்

யாழ்ப்பாணம் இணைந்த கல்லூரிகள் மற்றும் சீனிகம இணைந்த கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டி  யாழ்ப்பாணம் புனித பெட்ரிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சீனிகம இணைந்த கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

சீனிகம இணைந்த கல்லூரிகள் – 133/10 (19.2) சத்துர மிலன் 41, நிலங்க ருக்ஷித 36*, நிமேஷ் மெண்டிஸ் 13, லோகேந்திரன் சிவலக்ஷன் 24/3, வசந்தன் ஜதுஷன் 20/3, கனகரத்தினம் கபில்ராஜ் 19/2

யாழ்ப்பாணம் இணைந்த கல்லூரி – 74/9 (20) ஜென்னி பிளமிங் 29, ஜி. ரதீஷன் 8, உஷான் இமன்த 14/4,  நிமேஷ் மெண்டிஸ் 13/2, நிலங்க ருக்ஷித 16/2

சீனிகம இணைந்த கல்லூரி அணி 59 ஓட்டங்களால் வெற்றி


சக்தி பெண்கள் அணி எதிர் பதுளை பெண்கள் அணி

சக்தி பெண்கள் அணி மற்றும் பதுளை பெண்கள் அணிகளுக்கு இடையிலான போட்டி  மாங்குளம் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பதுளை பெண்கள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

பதுளை பெண்கள் அணி – 90/9 (15) சி. ரத்நாயக்க 20, துணுக்ஷி 17, சந்துணி ருவந்திகா 10, சச்சினி செவ்வந்தி 7/4, திலினி லக்ஷிக 18/2

சக்தி பெண்கள் அணி – 92/6 (12.5) திலினி யசாரா 25, சுகந்திகா கிம்ஹானி 25*, சச்சினி உத்தர 15/3

சக்தி பெண்கள் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி


முரளி நல்லிணக்க கிண்ணத்தின் 5ஆவது அத்தியாயத்தின் ஆண்களுக்கான  குழு நிலைப் போட்டிகள் இன்றோடு நிறைவுக்கு வந்துள்ள நிலையில் நாளை அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

1ஆவது அரையிறுதிப் போட்டி (ஆண்கள்) – சீனிகம இணைந்த கல்லூரிகள் எதிர் காலி மஹிந்த கல்லூரி (முல்லைத்தீவில்)

2ஆவது அரையிறுதிப் போட்டி (ஆண்கள்) – கொழும்பு புனித ஜோசப் கல்லூரி எதிர் கொழும்பு நாலந்த கல்லூரி (முல்லைத்தீவில்)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்