மாலிங்கவை விடுவித்துள்ள மும்பை அணி

7958
malinga

2018ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க விடுவிக்கப்பட்டுள்ளார்.

.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 10 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஒரேயொரு இலங்கை வீரரான மாலிங்கவை, தொடர் உபாதை மற்றும் சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமை உள்ளிட்ட காரணங்களால் அவ்வணியில் இருந்து விடுவிக்க மும்பை அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த பருவகாலத்தில் எதிரணிக்கு ஓட்டங்களை வாரிவழங்கிய மாலிங்க, வெறும் 11 விக்கெட்டுக்களை மாத்திரமே கைப்பற்றியிருந்தார்.

இலங்கை கிரிக்கெட்டுக்காக சேவை புரிய வந்திருக்கும் அவுஸ்திரேலிய உளவியலாளர்

அவுஸ்திரேலிய அணியின் பிரபல விளையாட்டு உளவியல்..

இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள வீரர்களுக்கான பொதுவான ஏலத்தில் மாலிங்கவிற்கு போட்டியிட வேண்டிய நிலை ஏற்படுட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு முதல் .பி.எல் போட்டிகளில் விளையாடி வருகின்ற மாலிங்க, 150 .பி.எல் விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை கடந்த வருடம் நிகழ்த்தியிருந்தார். முன்னதாக 2011ஆம் ஆண்டு டெல்லி அணிக்கு எதிராக தனது சிறந்த .பி.எல் பந்துவீச்சைப் பதிவு செய்த மாலிங்க, 13 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

11ஆவது .பி.எல் தொடர் எதிர்வரும் ஏப்ரல்மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கு முன் ஒவ்வொரு அணியும் ஐந்து வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை இருந்தது. தற்போது அனைத்து வீரர்களையும் மறு ஏலம் விடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் ஒவ்வொரு அணியும் மூன்று வீரர்களை நேரடியாக தக்க வைத்துக் கொள்ளலாம். ஏனைய இரண்டு பேரை ஏலத்தின்போது தக்கவைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இம்முறை ஒவ்வொரு அணியும் வீரர்கள் ஏலத்துக்காக 80 கோடி ரூபாவை செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன்படி, ஐபிஎல் தொடரில் தங்களது அணிகளில் தக்கவைக்கும் வீரர்களின் விபரங்களை 8 அணிகளும் நேற்று (04) அறிவித்தன.

இதன்படி, நடப்புச் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ரோஹித் சர்மாவை ரூ.15 கோடிக்கும், ஹர்திக் பாண்டியாவை ரூ.11 கோடிக்கும், ஜஸ்பிரித் பும்ராவை ரூ.7 கோடிக்கும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

தலைமைப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட திசர பெரேரா

இலங்கை கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள்..

.பி.எல். தொடங்கிய காலத்திலிருந்தே மும்பை அணிக்காக விளையாடி வரும் லசித் மலிங்கவையும், 2010 முதல் அவ்வணிக்காக விளையாடி வருகின்ற மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரரான கிரென் பொல்லார்ட்டையும் தக்கவைத்துக்கொள்ள அவ்வணி விரும்பவில்லை. இவர்களுடன், ஹர்பஜன் சிங்கையும், அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஜொன்சனையும் அவ்வணி விடுவித்துள்ளது.

இந்நிலையில், மாலிங்க விடுவிப்பு தொடர்பில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்தன டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

சூதாட்ட பிரச்சினையால் 2 ஆண்டு காலம் தடைக்குப் பின்னர் மீண்டும் களமிறங்கவுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் இந்த பருவகாலத்தில் போட்டியிடவுள்ளன. இதன்படி, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் டோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தக்கவைத்துக் கொண்டது. இவர்களில் அதிகபட்சமாக டோனியின் சம்பளம் ரூ.15 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெய்னா ரூ.11 கோடிக்கும், ஜடேஜா ரூ.7 கோடிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை மட்டும் ரூ.12.5 கோடிக்கு தக்கவைத்துக்கொண்டுள்ளது.

பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ், விராட் கோஹ்லியை ரூ.17 கோடிக்கும், டி வில்லியர்ஸை ரூ.11 கோடிக்கும், இளம் வீரரான சர்ப்ராஸ் கானை ரூ.3 கோடிக்கும் தக்கவைத்துள்ளது. அதேநேரம், அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்லை அவ்வணி விடுவித்துள்ளது.  

உலக நடுவர்களில் குமார் தர்மசேனவுக்கு 14ஆவது இடம்

இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்போது நடாத்தி வரும்..

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டேவிட் வோர்னரை ரூ.12.5 கோடிக்கும், புவனேஷ்வர் குமாரை ரூ.8.5 கோடிக்கும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

டெல்லி டேர் டெவில்ஸ் அணி, ரிஷப் பாண்டை ரூ.15 கோடிக்கும், தென்னாபிரிக்காவின் கிறிஸ் மோரிஸை ரூ.11கோடிக்கும், ஸ்ரேயர்ஸ் ஐயரை ரூ.7 கோடிக்கும் தக்கவைத்துள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அக்சர் படேலை மட்டும் ரூ.12.5 கோடிக்கு தக்கவைத்துக் கொண்டுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 2012 மற்றும் 2014இல் .பி.எல் கிண்ணத்தை வென்று கொடுத்த அதன் தலைவர் கௌதம் காம்பீரை விடுவித்துள்ள அதேநேரம், சுனில் நரேனை ரூ.12.5 கோடிக்கும், ஆன்ட்ரூ ரஸலை ரூ.8.5 கோடிக்கும் தக்கவைத்துள்ளது.