ஐ.பி.எல் தொடரில் மாலிங்க உள்ளிட்ட வீரர்களுக்கு விசேட விடுமுறை

150
IPL

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடி வருகின்ற வீரர்களுக்கு உலகக் கிண்ணத்தைக் கருத்தில் கொண்டு நான்கு நாட்கள் ஓய்வு வழங்குவதற்கு மும்பை அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

12ஆவது .பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது. இதன் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 12ஆம் திகதி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.

சென்னை இரசிகர்களுக்கு ஏமாற்றம்: IPL இறுதிப் போட்டி இடமாற்றம்

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் இறுதிப் ……..

இந்த நிலையில், உலக கிரிக்கெட் இரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மே 30ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. அதற்கு முன் மே மாதம் 24ஆம் திகதி பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

எனவே, இம்முறை உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ள பெரும்பாலான நாடுகள் தமது உத்தியோகபூர்வ குழாத்தை அறிவித்துவிட்டன. அதேபோல, அந்த அணிகளில் இடம்பெற்றுள்ள முன்னணி வீரர்கள் பலரும் தற்போது நடைபெற்று வருகின்ற .பி.எல் தொடரிலும் விளையாடி வருகின்றனர்.  

இந்த நிலையில், .பி.எல் தொடருக்கும் உலகக் கிண்ணத்துக்கும் இடையில் 12 நாட்கள் இடைவெளி இருப்பதால் வீரர்களுக்கு அதிக பனிச்சுமை ஏற்படும் என்ற விவாதம் எழும்பியது. அப்போது ஒவ்வொரு .பி.எல் அணிகளும் தங்களது வீரர்களுக்கு போதுமான ஓய்வு அளிப்போம் என்று தெரிவித்திருந்தன.  

இதனிடையே, இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள இம்முறை .பி.எல் தொடரில், ஹைதராபாத் அணியைத் தவிர்த்து மற்ற அனைத்து அணிகளும் 10 லீக் ஆட்டங்களில் விளையாடிவிட்டன.

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

அடுத்த மாதம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய ……

எனவே, முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து புள்ளிப்பட்டியலில் பின்தங்கிய நிலையில் இருந்த அணிகள் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

இது இவ்வாறிருக்க, புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி தமது அணியில் உள்ள வீரர்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (20) ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய மும்பை அணி, இன்னும் 6 நாட்கள் கழித்து அதாவது எதிர்வரும் வெள்ளிக்கிழமை (26) சென்னை அணியுடன் மோதவுள்ளது. இந்த இடைவெளியை வீரர்களின் பணிச் சுமையைக் குறைக்க கவனம் செலுத்திய மும்பை அணி நிர்வாகம், அந்த அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு நான்கு நாட்கள் பயிற்சியிலிருந்து ஓய்வு வழங்கியுள்ளது.

இந்த நான்கு நாட்களில் குடும்பத்தினரைப் பார்க்கச் செல்லலாம், சுற்றலாப் பயணங்கள் செல்ல முடியும். ஆனால் துடுப்பு மட்டையையோ அல்லது பந்தையோ தொடவே கூடாது என வீரர்களுக்குச் அன்பான உத்தரவொன்றையும் மும்பை அணி நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

ஐ.பி.எல் அரங்கில் இரட்டை சாதனை படைத்த டோனி

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பெங்களூர் …..

இதன்படி, இம்முறை உலகக் கிண்ணத்தில் இடம்பிடித்து மும்பை அணிக்காக விளையாடி வருகின்ற ரோஹித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, குயிண்டன் டி கொக், லசித் மாலிங்க உள்ளிட்ட முன்னணி வீரர்களை அணியில் இருந்து விடுவிப்பதற்கு மும்பை அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பில் கிரிக்கெட் நெக்ஸ்ட் இணையத்தளத்துக்கு மும்பை அணியின் நிர்வாகி ஒருவர் கருத்து வெளியிட்ட போது, வீரர்கள் நலன்தான் எங்களுக்கு எப்போதும் முக்கியம். அதற்குத்தான் முக்கியத்துவம் அளிப்போம். இந்த நான்கு நாட்களும் துடுப்பு மட்டை மற்றும் பந்தை தொடாமல் அவர்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ள முடியும் என தெரியப்படுத்தியுள்ளோம். அத்துடன், உலகக் கிண்ணத் தொடரை மனதில் வைத்துத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

இதன்படி, மும்பை அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் தமது சொந்த ஊர்களுக்கும், வெளிநாட்டு வீரர்கள் தமது குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்று சுற்றுலாப் பயணங்கள் மேற்கொண்டுள்ளதாகவும் மும்பை அணி வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<