சுப்பர் ஓவர் வெற்றியுடன் ப்ளே-ஓஃப் சுற்றில் மும்பை

183
iplt20.com

ஐ.பி.எல். தொடரில் நேற்று (02) நடைபெற்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சுப்பர் ஓவரின் மூலம் த்ரில் வெற்றியை பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

இம்ரான் தாஹிரின் சுழலால் வீழ்ந்த டெல்லி கெப்பிட்டல்ஸ்

சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில்…..

மும்பை வான்கடே மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், ஹைதராபாத் அணியின் மனிஷ் பாண்டேவின் அதிரடி துடுப்பாட்டத்தையும் தாண்டி, மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிக்கட்டத்தில் வெற்றியை தக்கவைத்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, ஆரம்பத்தில் தடுமாறிய போதும், குயிண்டன் டி கொக்கின் நிதான துடுப்பாட்டத்தின் உதவியுடன் 162 ஓட்டங்களை பெற்றது. குயிண்டன் டி கொக் ஆட்டமிழக்காமல் 58 பந்துகளில் 69 ஓட்டங்களை பெற்றதுடன், சூர்யகுமார் யாதவ் 23 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் கலீல் அஹமட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர், குறித்த மைதானத்தை பொருத்தவரை பெறக்கூடிய வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணி, மனிஷ் பாண்டேவின் அதிரடியுடன் வேகமாக ஓட்டங்களை குவித்தது. எனினும், மும்பை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் வருகையுடன், ஹைதராபாத் அணி விக்கெட்டுகளை பறிகொடுத்ததுடன், ஓட்ட வேகமும் கட்டுப்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், நிதானமாக ஆடிய சன்ரைஸர்ஸ் அணிக்கு, இறுதி ஓவருக்கு (ஹர்திக் பாண்டியா) 17 ஓட்டங்கள் என்ற நிலை ஏற்பட்டது. இந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் 9 ஓட்டங்கள் பெறப்பட்டது. 3வது பந்தில் சிக்ஸர் விளாசிய மொஹமட் நபி, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து 2 பந்துகளுக்கு 9 ஓட்டங்கள் என்ற நிலையில், மனிஷ் பாண்டே 5வது பந்தில் 2 ஓட்டங்களையும், 6வது பந்தில் சிக்ஸரையும் விளாசி போட்டியை சமப்படுத்தினார்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய மனிஷ் பாண்டே அதிகபட்சமாக 47 பந்துகளில் 71 ஓட்டங்களை விளாச, பந்து வீச்சில் குர்னால் பாண்டியா 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரண்டு அணிகளும் 162 ஓட்டங்களை பெற்று, போட்டி சமனிலையாகிய நிலையில், வெற்றியை தீர்மானிப்பதற்காக போட்டியில் சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி, பும்ராவின் முதல் 4 பந்துகளில் 8 ஓட்டங்களை பெற்று 2 விக்கெட்டுகளையும் இழந்தது.

ஐ.பி.எல் தொடரிலிருந்து அனைத்து ஆஸி. வீரர்களும் வெளியேற்றம்

உலகக்கிண்ண தொடருக்கான ஆஸி. குழாமில்……..

ஹைதராபாத் அணியின் ரஷீட் கான் வீசிய சுப்பர் ஓவரில் 9 என்ற வெற்றியிலக்கினை நோக்கி களமிறங்கிய மும்பை அணி, ஹர்திக் பாண்டியா மற்றும் கிரன் பொல்லார்ட் ஆகியோரின் உதவியுடன் 3 பந்துகளில் வெற்றியிலக்கை அடைந்தது. இதில், முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா சிக்ஸரை விளாசியிருந்தார்.

இதன் அடிப்படையில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில், 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், ப்ளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. ஏற்கனவே சென்னை மற்றும் டெல்லி அணிகள் தகுதிபெற்றிருந்த நிலையில், மூன்றாவது அணியாக மும்பை அணி இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் – 162/5 (20), குயிண்டன் டி கொக் 69 (58), சூர்யகுமார் யாதவ் 23 (17), கலீல் அஹமட் 42/3

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் – 162/5 (20), மனிஷ் பாண்டே 71 (47), விரிதிமன் சஹா 25 (15), குர்னால் பாண்டியா 22/2

முடிவு – மும்பை அணி சுப்பர் ஓவரின் மூலம் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<