இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் குழாத்தை அறிவித்த நியூசிலாந்து

221
Image Courtesy - www.cricbuzz.com

இந்திய அணிக்கு எதிராக இம்மாதம் ஆரம்பமாகவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து குழாத்தில், ஓய்வளிக்கப்பட்டிருந்த டொம் லேத்தம் மற்றும் கொலின் டி கிரெண்டோம் ஆகியோர் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதுடன், உபாதையிலிருந்து மீண்டுள்ள சகலதுறை வீரர் மிச்சல் சென்ட்னர் 10 மாதங்களுக்கு பின்னர் ஒரு நாள் குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.

இங்கிலாந்துடன் மோதும் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள…

நியூசிலாந்துஇந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகிறது.  இந்த தொடருக்கான குழாத்தில், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்த டொம் லேத்தம் மற்றும் கொலின் டி கிரெண்டோம் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இவர்களுடன், உபாதையிலிருந்து மீண்டு இலங்கை அணிக்கு எதிரான T20I தொடரின் மூலம் சர்வதேச போட்டிகளுக்கு 10 மாதங்களுக்கு பின்னர் திரும்பிய சென்ட்னர் ஒருநாள் குழாத்திலும் இடம்பிடித்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று அதிரடியை வெளிப்படுத்தியிருந்த ஜேம்ஸ் நீஷம், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தசைப்பிடிப்பு உபாதை காரணமாக இலங்கை அணிக்கு எதிரான T20I போட்டியிலிருந்து நீக்கப்பட்ட இவர், உபாதையிலிருந்து முழுமையாக குணமடையாததன் காரணமாகவே, இவ்வாறு ஒருநாள் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எனினும், நியூசிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான சுப்பர் ஸ்மேஸ் தொடரில் உடற்தகுதியை நிரூபிப்பாராயின், இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஜேம்ஸ் நீஷம் இணைக்கப்படலாம் என, நியூசிலாந்து கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் குழாத்தில் இணைக்கப்பட்டு, ஒரு போட்டியேனும் விளையாடாத டக் பிரெஸ்வெல் தொடர்ந்தும் குழாத்தில் தக்கவைக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான T20I போட்டியில் 46 ஓட்டங்களை விளாசியதுடன், ஒரு விக்கெட்டினை கைப்பற்றி, சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக இவர் அணிக்குள் நீடித்துள்ளார்.

மே.தீவுகளுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட், ஒரு நாள் குழாம் அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து…

இதேவேளை, இலங்கை தொடரில் விக்கெட் காப்பாளராக செயற்பட்ட டிம் செய்பர்ட் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். விக்கெட் காப்பாளரான டொம் லேத்தம் மீண்டும் குழாத்துக்கு திரும்பியுள்ளதால், செய்பர்ட் வாய்ப்பை இழந்துள்ளார்.

அதேநேரம், வேகப்பந்து துறையை ஸ்திரப்படுத்தும் முகமாக, அனுபவ பந்துவீச்சாளர்களான ட்ரென்ட் போல்ட் மற்றும் டிம் சௌதி பெயரிடப்பட்டுள்ளதுடன், மெட் ஹென்ரி மற்றும் லொக்கி பேர்கஸன் ஆகியோரும் குழாத்தில் இடம்பிடித்துள்ளனர். இவர்களுடன், அணியின் ஒரேயொரு சுழற்பந்து வீச்சாளராக இஸ் சோதி இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து ஒருநாள் குழாம்

கேன் வில்லியம்சன் (தலைவர்), ட்ரென்ட் போல்ட், டக் பிரெஸ்வெல், கொலின் டி கிரெண்டோம், லொக்கி பேர்கஸன், மார்டின் கப்டில், மெட் ஹென்ரி, டொம் லேத்தம், கொலின் மன்ரோ, ஹென்ரி நிக்கோலஸ், மிச்சல் சென்ட்னர், இஸ் சோதி, டிம் சௌதி, ரொஸ் டெய்லர்