பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் இருந்து விடைபெற்ற மிஸ்பா உல் ஹக்

142
Misbah ul Haq
Image Courtesy - http://www.islamabadunited.com

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக், பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) தொடரிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

நியுஸிலாந்திற்கு எதிராக 2 ஓட்டங்களால் திரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்

விறுவிறுப்பாக நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும்..

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான மிஸ்பா உல் ஹக், கடந்த வருடம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

எனினும், தொடர்ந்து பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL), T20 தொடர்கள் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதாக தெரிவித்திருந்தார்.  இதன்படி, கடந்த மூன்று பருவகாலங்களிலும் இஸ்லாமாபாத் யுனைடட் அணிக்காக விளையாடியதுடன், அந்த அணி முதன்முறையாக இவரது தலைமையில் சம்பியனாகவும் முடிசூடியிருந்தது.

இந்தநிலையில் 44 வயதான மிஸ்பா உல் ஹக், நான்காவது முறையாக நடைபெறவுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் பங்கேற்க மாட்டார் என அணியிடம் தெரிவித்துள்ளதாக, இஸ்லாமாபாத் அணி நிர்வாகம் நேற்று (31) அறிக்கை வெளியிட்டது.

எவ்வாறாயினும் அவருக்கு அணி நிர்வாகப் பதவி ஒன்றினை வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், இஸ்லாமாபாத் அணி சுட்டிக்காட்டியுள்ளது.

உலகக் கிண்ணத்துக்காக இந்திய வீரர்களினால் விடுக்கப்பட்ட விசித்திர கோரிக்கை

உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் போது வாழைப்பழம்…

இதுதொடர்பில் இஸ்லாமாபாத் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அணி வீரர் மற்றும் அணித் தலைவர் என்ற ரீதியில் மிஸ்பா உல் ஹக்கின் மதிப்பினை அணி நிர்வாகம் அறிந்து வைத்துள்ளது. அவர் வீரராக இல்லாவிட்டாலும், அனுபவ வீரர் என்ற ரீதியில் இஸ்லாமாபாத் அணிக்கும், பாகிஸ்தான் தேசிய அணிக்கும் பங்களிப்பை வழங்க முடியும். நாம் அதற்கான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றோம். இந்த கலந்துரையாடல்கள் நிறைவில் அவர், அணி நிர்வாகத்துடன் இணைவார் என எதிர்பார்க்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு T20 மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடிவந்த மிஸ்பா உல் ஹக், தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் குழுவில் (PCB cricket committee) பெயரிடப்பட்டுள்ளதால், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்துள்ளார்.

அதேவேளை, இஸ்லாமாபாத் அணியின் உதவி பயிற்றுவிப்பாளர் தவுசீப் அஹமட் பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன், அவரது பதவி பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<