மைலோ இறுதி மோதலில் புனித பத்திரிசியார், மணற்காடு, புனித ஹென்றியரசர் அணிகள்

473
Milo cup Jaffna Schools

தற்பொழுது நடைபெற்று வரும் 5ஆவது மைலோ கிண்ண கால்பந்து போட்டிகளின் ஓர் அங்கமாக 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட யாழ், கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான மோதலின் இறுதி ஆட்டங்களுக்கு புனித பத்திரிசியார், மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, புனித ஹென்றியரசர் அணிகள் தெரிவாகியுள்ளன.

யாழ், கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான குறித்த சுற்றுத்தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்றையதினம் (01) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றன.   

14 வயதிற்குட்பட்டோர் பிரிவு

தெரிவுச்சுற்று மற்றும் காலிறுதிப் போட்டிகள்

முதலாவது காலிறுதிப் போட்டியாக அமைந்திருந்த யாழ். மத்திய கல்லூரி மற்றும் மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணிகளுக்கிடையிலான போட்டி 01:01 என சமநிலையடைய, சமநிலை தவிர்ப்பு உதையில் (பெனால்டி) 04:02 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது மணற்காடு றோ....பா அணி.

மாலைதீவுடனான விறுவிறுப்பான ஆட்டத்தை சமப்படுத்திய இலங்கை

2018ஆம் ஆண்டிற்கான 19 வயதுக்குட்பட்ட ஆசிய..

இரண்டாவது காலிறுதிப் போட்டிக்காக இடம்பெற்ற தெரிவுப் போட்டியில் வட்டக்கச்சி மகா வித்தியாலய அணியினை 01:00 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற நாவாந்துறை றோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணி, காலிறுதிப் போட்டியில் புனித ஹென்றியரசர் கல்லூரி அணியினை எதிர்த்து மோதியது. போட்டியில் 01:00 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதியில் தமது இடத்தினை உறுதி செய்தது புனித ஹென்றியரசர் கல்லூரி அணி.   

மூன்றாவது காலிறுதிக்கான தெரிவுப் போட்டியில் அச்செழு சைவப்பிரகாச வித்தியாலய அணியினை 05:00 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி, காலிறுதியில் வலைப்பாடு றோ... பாடசாலை அணியினை 01:00 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.  

கொற்றாவத்தை அமெரிக்கன் மிசன் கல்லூரி அணியினை 04:00 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்று அரையிறுதியில் தடம் பதித்தது புனித பத்திரிசியார் கல்லூரி.

முதலாவது அரையிறுதி

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிபுனித பத்திரிசியார் கல்லூரி ஆகிய அணிகள் மோதியிருந்த இப்போட்டியில் ஆரம்பத்திலேயே சென். ஜோன்ஸ் கல்லூரியின் கோல் பரப்பினை ஆக்கிரமித்த புனித பத்திரிசியார் கல்லூரி 6ஆவது நிமிடத்தில் லியோ மூலமாகவும், 10ஆவது நிமிடத்தில் டினியோ மூலமாகவும் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் பெற்றது.  இதனால் முதற் பாதியிலேயே இரண்டு கோல்களினால் புனித பத்திரிசியார் கல்லூரி முன்னிலை பெற்றது.

இளையோர் உலகக் கிண்ணம் இங்கிலாந்து வசம்

இந்தியாவில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்ட FIFA உலகக்…

இரண்டாவது பாதியில் சென். ஜோன்ஸ் கல்லூரி கோல் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதும், ஆட்ட நேர நிறைவில் 02:00 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற புனித பத்திரிசியார் கல்லூரி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

கோல் பெற்றவர்கள்

புனித பத்திரிசியார் கல்லூரி –  லியோ 6’ டினியோ 10


இரண்டாவது அரையிறுதி

இந்த ஆட்டத்தில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியினை எதிர்த்து மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணி மோதியது. போட்டி ஆரம்பமான நொடி முதல் இரு அணிகளும் கோல் பெறுவதற்கு போராடிக்கொண்டிருந்தன.  

போட்டியின் 13ஆவது நிமிடத்தில் மணற்காடு அணியின் மிதுஸன் கோலினைப் போட்டு எதிரணிக்கு அதிர்ச்சியளித்தார். இரண்டாவது பாதியிலும் மணற்காடு றோ... பாடசாலையின் முன்னிலை தொடர்ந்தது.

மீண்டும் 34ஆவது நிமிடத்தில் ஹென்றிஸின் ஜோசப் கோல் ஒன்றினைப் போட்டு கோல் கணக்கினை சமன் செய்தார். எனினும், அதற்கு அடுத்த நிமிடத்தில் பதில் கோலினைப் பெற்று தமது முன்னிலையை மீண்டும் உறுதி செய்தார் மிதுஸன்.

எனவே, ஆட்ட நேர நிறைவில் யாழின் உதைப்பந்தாட்ட பலவான்களான ஹென்றிசியர் கல்லூரியினை வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் தமது இடத்தினை உறுதிசெய்தது மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை.

கோல் பெற்றவர்கள்

மணற்காடு றோ.க.த.க பாடசாலை –மிதுஸன் 13’ & 35’
புனித ஹென்றியரசர் கல்லூரி – ஜோசப் 34’


16 வயதிற்குட்பட்டோர் பிரிவு

தெரிவுச்சுற்று மற்றும் காலிறுதிப் போட்டிகள்

முதலாவது காலிறுதிப் போட்டியாக இடம்பெற்ற முழங்காவில் மகா வித்தியாலயம், கொற்றாவத்தை அமெரிக்க மிசன் கல்லூரி அணிகளுக்கிடையிலான போட்டி கோலேதுமின்றி நிறைவிற்குவர, சமநிலை தவிர்ப்பு உதையில் 03:01 என்ற கோல்கள் கணக்கில் கொற்றாவத்தை அமெரிக்க மிசன் கல்லூரி வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.  

தெரிவுப் போட்டியில் மாதகல் சென். தோமஸ் கல்லூரியினை 02:00 என வெற்றிபெற்ற புனித ஹென்றியரசர் கல்லூரி, காலிறுதியில் சென். ஜோன்ஸ் கல்லூரியினை 03:00 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.  

மூன்றாவது காலிறுதிக்காக இடம்பெற்ற தெரிவுப் போட்டியில் சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியினை 04:01 என வெற்றிபெற்ற மணற்காடு றோ... பாடசாலை அணியினை காலிறுதியில் 06:02 என்ற கோல் கணக்கில் புனித பத்திரிசியார் கல்லூரி வெற்றிபெற்றது.

சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியினை 01:00 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற நாவாந்துறை றோ.... பாடசாலை நான்காவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.  

முதலாவது அரையிறுதி

மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பமான புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் நாவாந்துறை றோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணிகள் மோதியிருந்த இப்போட்டியில், 16ஆவது நிமிடத்தில் வலது பக்க மூலையிலிருந்து பத்திரிசியாரின் டைனியஸ் கைலினை நோக்கி உதைந்த பந்து கோல் காப்பாளரின் கைகளில் பட்டு நழுவவிடப்பட முதல் கோலினைப் பதிவு செய்தது புனித பத்திரிசியார் கல்லூரி. அந்த ஒரு கோலுடன் நிறைவிற்கு வந்தது முதற் பாதி.

இரண்டாவது பாதியில் தமது முதல் கோலிற்காக நாவாந்துறை அணியும், தமது அடுத்த கோலிற்காக பத்திரிசியார் கல்லூரியும் போராடிக் கொண்டிருந்தன. அதன் பலனாக 33ஆவது நிமிடத்தில் பத்திரிசியாரின் டிலக்சன் முன்னிலையினை இரட்டிப்பாக்கினார்.  

ஜோன் ராஜ் மேலும் ஒரு கோலினைப் போட, ஆட்ட நேர நிறைவில் 03:00 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற புனித பத்திரிசியார் கல்லூரி தமது இடத்தினை 16 வயதுப் பிரிவின் இறுதிப் போட்டியிலும் உறுதி செய்தது.  

கோல் பெற்றவர்கள்

புனித பத்திரிசியார் கல்லூரி – டைனியஸ் 16’, டிலக்சன் 33, ஜோன் ராஜ்


இரண்டாவது அரையிறுதி

கொற்றாவத்தை அமெரிக்க மிசன் கல்லூரி அணியினை எதிர்த்து மோதிய புனித ஹென்றியரசர் கல்லூரி 10ஆவது நிமிடத்தில் பிரசாந்த் மூலம் தமது கோல் கணக்கினை ஆரம்பித்தது. மீண்டும் 12ஆவது நிமிடத்தில் கிருசாந்தன் அடுத்த கோலினைப் போட்டு முன்னிலையினை இரட்டிப்பாக்கினார்.

கொற்றாவத்தை வீரர்கள் முன்களத்திலும், பின் களத்திலும் தமது போராட்டத்தினை வெளிப்படுத்திய போதும், இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் நிக்சன் றிவல்டோ பெற்ற அடுத்த கோலுடன் பலமிழந்தது கொற்றாவத்தை அணி. 22ஆவது நிமிடத்தில் பிரசாந்த் தனது இரண்டாவது கோலினைப் போட்டு அணியை 04 கோல்களால் முன்னிலைப்படுத்தினார்.

மீண்டும் முறையே 32ஆவது மற்றும் 35ஆவது நிமிடங்களில் ஜெலக்சன் மற்றும் அருள் ஜோசப் ஆகியோர் பெற்றுக்கொடுத்த மேலும் இரு கோல்களுடன், ஆட்ட நேர நிறைவில் 06:00 என்ற கோல்கள் கணக்கில் இலகு வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்தது புனித ஹென்றியரசர் கல்லூரி.

தேசிய மட்ட கூடைப்பந்தாட்ட தொடரில் புனித மைக்கல் கல்லூரிக்கு மூன்றாமிடம்

இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சங்கம்..

முதல் முறையாக யாழ் கிளிநொச்சி அணிகளினை உள்ளடக்கிய மைலோ கிண்ண தொடரின் அனைத்து சுற்றுக்களும் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் சனிக்கிழமை 4ஆம் திகதியன்று துரையப்பா விளையாட்டரங்கில் தொடரின் இறுதி நாள் நிகழ்வுகள் இடம்பெறவிருக்கின்றன.

குறித்த தினம் காலை 8.30 மணி முதல் 1500இற்கும் அதிகமான வீரர்களை உள்ளடக்கிய உதைப்பந்தாட்ட பயிற்சி இடம்பெறவிருக்கின்றது. அதனைத் தொடர்ந்து 11.30 முதல் மூன்றாம் இடத்திற்கான போட்டிகளும் இறுதிப் போட்டிகளும் இடம்பெறவிருக்கின்றன.

14 வயதிற்குட்பட்டோர் பிரிவு

மூன்றாவது இடத்திற்கான போட்டிசென். ஜோன்ஸ் கல்லூரி எதிர் புனித ஹென்றியரசர் கல்லூரி

இறுதிப் போட்டிபுனித பத்திரிசியார் கல்லூரி எதிர் சென். அன்ரனிஸ் மகா வித்தியாலயம்

16 வயதிற்குட்பட்டோர் பிரிவு

மூன்றாவது இடம்நாவாந்துறை றோமன் கத்தோலிக்க .. பாடசாலை எதிர் கொற்றாவத்தை .. பாடசாலை

இறுதிப் போட்டிபுனித ஹென்றியரசர் கல்லூரி எதிர் புனித பத்திரிசியார் கல்லூரி