பங்களாதேஷுடன் மோதும் இலங்கை கிரிக்கெட் வாரிய அணியின் தலைவராக மிலிந்த சிறிவர்தன

618
Milinda Siriwardena

நடைபெற்று முடிந்திருக்கும் டெஸ்ட் தொடரினை அடுத்து சுற்றுலா பங்களாதேஷ் அணி, இலங்கையுடன் மோதவுள்ள ஒரு நாள் தொடரிற்கு முன்பாக விளையாடவுள்ள ஒரு நாள் பயிற்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதினொருவர் அணியை தலைமை தாங்க மிலிந்த சிறிவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாளை (22) கொழும்பு கிரிக்கெட் கழக (CCC) மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் இலங்கை சார்பாக விளையாட இருக்கும் வாரியத் தலைவர் பதினொருவர் அணியில் உள்வாங்கப்படும் 12 பேர் கொண்ட வீரர்கள் குழாத்தினை தேசிய அணியின் தேர்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

முதல் நாளில் ஆதிக்கத்தினை தமதாக்கியிருக்கும் லும்பினி கல்லூரி

“நீல மற்றும் பச்சை வர்ணங்களின் சமர்” என அழைக்கப்படும் லும்பினி கல்லூரி மற்றும் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி அணிகளுக்கு இடையிலான..

இம்மாதம் 25ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமாகவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கு முன்பாக, நாளை ஆரம்பமாகவுள்ள போட்டியில், பங்களாதேஷிற்கு எதிரான ஒரு நாள் குழாத்தில் விளையாட பெயரிடப்பட்டிருக்கும் குசல் ஜனித் பெரேரா, சஜித் பத்திரன, திசர பெரேரா மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கும் அந்த நான்கு வீரர்களும் பங்களாதேஷிற்கு எதிராக போதியளவான பயிற்சியினைப் பெற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் காயத்தில் இருந்து மீண்டிருக்கும் இடது கை இளம் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்ணாந்து அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், சுழல் வீரர் அகில தனன்ஞய டி சில்வாவும் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதினொருவர் அணி

மிலிந்த சிறிவர்தன (தலைவர்), குசல் ஜனித் பெரேரா, தில்ஷான் முனவீர, சந்துன் வீரக்கொடி, தனன்ஞய டி சில்வா, சத்துரங்க டி சில்வா, திசர பெரேரா, லஹிரு மதுசன்க, தசுன் சானக்க, அகில தனன்ஞய, சஜித் பத்திரன, பினுர பெர்ணாந்து