உருகுவேவிற்கு அதிர்ச்சி தோல்வி

283
Mexico down Uruguay after anthem blunder

உலக கோப்பை, ஐரோப்பிய கோப்பை ஆகியவற்றுக்கு அடுத்த பிரபலமான கால்பந்து ஆட்டம் கோபா அமெரிக்கா போட்டியாகும்.

தென்அமெரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்கும் 45ஆவது கோபா அமெரிக்க கால்பந்துப் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இதன் தொடக்க ஆட்டத்தில் கொலம்பியா 2-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை (‘ஏ’ பிரிவு) வீழ்த்தியது.

பிரேசில்- ஈகுவடார் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவு

அதைத் தொடர்ந்து நடைபெற்ற கோஸ்டாரிக்கா -பராகுவே (‘ஏ’ பிரிவு), பிரேசில்-ஈக்வடார் (‘பி’ பிரிவு) ஆட்டம் கோல்கள் எதுவுமின்றி சமநிலையில் முடிவுற்றது. பேரு அணி 1-0 என்ற கணக்கில் ஹெய்தியை வீழ்த்தி (‘பி’பிரிவு) இருந்தது.

இன்று அதிகாலை நடந்த ஒரு ஆட்டத்தில் வெனிசூலா- ஜமைக்கா (‘சி’பிரிவு) அணிகள் மோதின. இதில் வெனிசூலா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. 15ஆவது நிமிடத்தில் வெனிசூலா அணிக்காக மார்ட்டினஸ் இந்த வெற்றி கோலை அடித்தார்.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் மெக்சிகோ-உருகுவே அணிகள் மோதின. இதில் மெக்சிகோ 3-1 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த உருகுவேயை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. மெக்சிகோ அணியில் ரபெல் மார்கஸ் ஹீரரா ஆகியோரும், உருகுவே அணியில் காடினும் கோல் அடித்தனர். ஆட்டத்தின் 4ஆவது நிமிடத்தில் உருகுவே வீரர் அல்வாரா பெரைரா சுயகோல் (சேம்சைடு) அடித்தார்.

நாளை நடைபெறும் ஆட்டங்களில் ‘டி’ பிரிவில் உள்ள ஆர்ஜென்டினா- சிலி, பொலிவியா-பனாமா ஆகிய அணிகள் மோதுகின்றன.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்