மாஸ் சிலுவேட்டா அணிக்கெதிராக டிமோ அணி இலகு வெற்றி

8

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு பிரிவு A வர்த்தக நிறுவனங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய (18) போட்டியொன்றில் டிமோ அணி மாஸ் சிலுவேட்டா அணியினை 44 ஓட்டங்களால் இலகுவாக தோற்கடித்துள்ளது.

தேசிய அணி வீரர்களின் பங்களிப்போடு மாஸ் யுனிச்செலா, ஹேய்லஸ் அணிகளுக்கு வெற்றி

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு பிரிவு…

கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டிமோ அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து கொண்டது.  

அதன்படி, அவ்வணி வீரர்கள் 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 210 ஓட்டங்களை குவித்தனர். டிமோ அணியின் துடுப்பாட்டம் சார்பாக நிப்புன் கருணாநாயக்க 37 ஓட்டங்களையும், பதும் மதுசங்க 34 ஓட்டங்களினையும் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் மாஸ் சிலுவேட்டா அணியின் பந்துவீச்சு சார்பாக துஷான் ஹேமன்த 57 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், புத்திக்க சஞ்சீவ 3 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 211 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மாஸ் சிலுவேட்டா அணி 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

மத்திய வரிசை துடுப்பாட்டம் அணிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது – டிக்வெல்ல

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது….

மாஸ் சிலுவேட்டா அணியின் துடுப்பாட்டம் சார்பாக தனன்ஜய லக்ஷான் 38 ஓட்டங்களினை பெற மறுமுனையில் மதீஷ பெரேரா 3 விக்கெட்டுக்களையும், கவிஷ்க அஞ்சுல 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின்  சுருக்கம்

டிமோ – 210 (48.5) நிப்புன் கருணாநாயக்க 37, பத்தும் மதுசங்க 34, துஷான் ஹேமன்த 4/57, புத்திக்க சஞ்சீவ 3/47

மாஸ் சிலுவேட்டா – 166 (42.2) தனன்ஜய லக்ஷான் 38, இரோஷ் சமரசூரிய 26, மதீஷ பெரேரா 3/34, கவிஷ்க அஞ்சுல 2/16

முடிவு – டிமோ அணி 44 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<