சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 25 ஆவது தடவையாக பிரிவு A (டிவிஷன் A) வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலும், பெயர் என்ட் லவ்லி மெனின் அனுசரணையோடு பிரிவு B (டிவிஷன் B) வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலும் இடம்பெறும் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற அனைத்து போட்டிகளும் கடும் மழை காரணமாக கைவிடப்பட்டன.  

திமுத் கருணாரத்னவின் சிறப்பாட்டத்தினால் ஜோன் கீல்ஸ் இலகு வெற்றி

இன்றைய நாளில் பிரிவு A (டிவிஷன் A) வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட..

இன்று நடைபெற்ற போட்டிகளில் இரண்டில் மாத்திரமே முதல் இன்னிங்ஸ் முழுமையாக நிறைவடைந்திருந்தது. இதில் பிரிவு B (டிவிஷன் B) போட்டியொன்றில் மாஸ் சிலுயேட்டா அணிக்காக சகல துறை ஆட்டக்காரரான நிமந்த மதுசங்க அபார சதம் ஒன்றினை கடந்திருந்தார். கைவிடப்பட்ட அனைத்து போட்டிகளிலும் பங்கேற்ற அணிகளிற்கு புள்ளிகள் சம அளவில் பிரித்து வழங்கப்பட்டன.

நடைபெற்ற போட்டிகளின் ஸ்கோர் விபரம் சுருக்கமாக

பிரிவு A

எல்.பி பினான்ஸ் எதிர் ஹட்டன் நஷனல் வங்கி (A) – FTZ மைதானம்

எல்.பி பினான்ஸ் (A) – 204/7 (39.3) சதீர சமரவிக்ரம 42, அஞ்சலோ பெரேரா 41, சஹன் ஆராச்சிகே 26*

 ஹேலிஸ் எதிர் மாஸ் (ஹோல்டிங்) யுனிச்செல்லா – MCA மைதானம்

ஹேலிஸ் – 33/1 (4.3)

டிமோ எதிர் கொமர்ஷல் கிரடிட் –  கொல்ட்ஸ் மைதானம்

டிமோ – 123/3 (26.2) ஹஷான் துமிந்து 36, திக்ஷில டி சில்வா 36

 பிரிவு B

மாஸ் சிலுயேட்டா எதிர் மொபிடல் டி சொய்ஸா மைதானம், மொரட்டுவ

மாஸ் சிலுயேட்டா – 281/5 (50) நிமந்த மதுசங்க 100*, சலிந்த உஷான் 77, கோஷான் ஜயவிக்ரம 2/25

 ஜோன் கீல்ஸ் (B) ஹோல்டிங் எதிர் DHT சீமெந்து – BRC மைதானம்

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங் (B) – 168 (41) கவின் பண்டார 76, ரவிந்து கொடித்துவக்கு 32, திலான் சந்தீம 3/6, சந்தகன் பத்திரன 3/21, மதுர மதுசங்க 3/32

 யுனிலிவர் எதிர் சிங்கர்

யுனிலிவர் – 65/4 (15)