மாஸ் யுனிச்செல்லா அணிக்கு மற்றுமொரு இலகு வெற்றி

913

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 25 ஆவது தடவையாகவும் பிரிவு – A  வர்த்தக நிறுவனங்களுக்கு இடையில் நடைபெறும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய நாளில் நடைபெற்ற போட்டியொன்றில் மாஸ் யுனிச்செல்லா அணி கொமர்ஷல் கிரடிட் அணியினை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலகு வெற்றியினை சுவைத்துள்ளது.

கட்டுநாயக்க FTZ மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டி காலநிலை சீர்கேடு காரணமாக இன்னிங்சுக்கு 41 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

ஜோன் கீல்ஸ் அணியின் அபாரப் பந்துவீச்சினால் வீழ்ந்த DHT சீமெந்து

பெயார் என் லவ்லி மென் (Fair & Lovely Men)…

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற திலகரத்ன தில்ஷான் தலைமையிலான மாஸ் யுனிச்செல்லா அணி கொமர்ஷல் கிரடிட் வீரர்களுக்கு முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை வழங்கியிருந்தது.

இதன்படி களமிறங்கிய கொமர்ஷல் கிரடிட் நிறுவன வீரர்கள் மாஸ் யுனிச்செல்லாவின் இசார அமரசிங்க மற்றும் துவிந்து திலகரட்ன ஆகியோரின் அதிரடிப் பந்து வீச்சினால் 28.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 140 ஓட்டங்களுக்குள் சுருண்டு கொண்டனர்.  

மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய கொமர்ஷல் கிரடிட் அணிக்காக தனியொருவராக போராடியிருந்த திசர பெரேரா ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். அதேபோன்று பந்து வீச்சில் அசத்திய துவிந்து திலகரட்ன மற்றும் இசார அமரசிங்க ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் தம்மிடையே பங்குபோட்டிருந்தனர்.

தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட  141 ஓட்டங்களினைப் பெறுவதற்கு பதிலுக்கு ஆடிய மாஸ் யுனிச்செல்லா அணி, மஹேல உடவத்தவின் அரைச் சதத்துடன் 18 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கினை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

கொமர்ஷல் கிரடிட் 140 (28.2) – திசர பெரேரா 52*, அஷான் பிரியன்ஞன் 26, இசார அமரசிங்க 3/26, துவிந்து திலகரட்ன 3/49, செஹான் மதுசங்க 2/21

மாஸ் யுனிச்செல்லா – 142/3 (18) மஹேல உடவத்த 51*, தனுஷ்க குணத்திலக்க 32*, அசித்த பெர்னாந்து 2/25  


இன்று MCA மைதானத்தில் நடைபெற ருந்த ஜோன் கீல்ஸ் ஹொல்டிங் மற்றும் டீஜேய் லங்கா நிறுவன அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது.  

போட்டியின் சுருக்கம்

ஜோன் கீல்ஸ் ஹொல்டிங் – 141/9 (35) சந்துன் வீரக்கொடி 47, மதுக லியனபத்திரனகே 30, ஜெப்ரி வன்டர்சேய் 4/19

 மேலும் பல விளையாட்டுச் செய்திகளைப் படிக்க