வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து பிரகாசிக்கும் சதீர

897

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 26 ஆவது சிங்கர் பிரீமியர் லீக் ஒருநாள் தொடரின் மேலும் ஐந்து போட்டிகள் இன்று (22) நடைபெற்றன. இதில் எல்.பி. பினான்ஸ் அணி சதீர சமரவிக்ரமவின் சிறப்பாட்டத்தின் மூலம் தொடர்ச்சியாக நான்காவது வெற்றியை பெற்றுக்கொண்டது.

எல்.பி. பினான்ஸ் எதிர் டீஜே லங்கா

இளம் வீரர் சதீர சமரவிக்ரம தொடர்ச்சியாக நான்காவது போட்டியிலும் தனது அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் டீஜே லங்கா அணிக்கு எதிரான போட்டியில் எல்.பி. பினான்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

திரிமான்னவின் துடுப்பாட்டத்தை வீணாக்கிய சதீரவின் அபார துடுப்பாட்டம்

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 26ஆவது சிங்கர் பிரீமியர் லீக் ஒருநாள் தொடரின் மேலும் நான்கு போட்டிகள் …

இம்முறை தொடரில் எல்.பி. பினான்ஸ் அணி தோல்வியுறாத அணியாக இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றியீட்டி முதலிடத்தில் உள்ளது. இதில் இலங்கை அணியில் அரைச்சதம் ஒன்றை பெற தடுமாறி வரும் குசல் மெண்டிஸ் இந்தப் போட்டியில் எல்.பி. பினான்ஸ் அணிக்காக அரைச்சதம் ஒன்றை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க, சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட டீஜே லங்கா அணிக்கு ஷிரான் பெர்னாண்டோ பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்தார். இதனால் டீஜே லங்கா அணி 229 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

எனினும் மினோத் பானுக்கு (61), சச்சித்ர சேரசிங்க (56) மற்றும் மிலிந்த சிறிவர்தன (51) அரைச்சதங்களை பெற்றனர். எல்.பி. பினான்ஸ் அணிசார்பாக பந்துவீச்சில் வலதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷிரான் பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய எல்.பி. பினான்ஸ் அணிக்கு சதீர சமரவிக்ரம மீண்டும் கைகொடுத்தார். அவர் அந்த அணியின் வெற்றி  வரை களத்தில் இருந்து ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களை பெற்றார். அதேபோன்று ஆசிய கிண்ணத்தின் இரண்டு போட்டிகளிலும் ஓட்டமேதுமின்றி வெளியேறிய குசல் மெண்டிஸ் 52 ஓட்டங்களை பெற்றார்.

இதன் மூலம் எல்.பி. பினான்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மாத்திரம்  இழந்து 231 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. இதில் சதீர சமரவிக்ரம தொடரின் முதல் இரு போட்டிகளிலும் சதம் பெற்றதோடு அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் அரைச்சதம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

டீஜே லங்கா – 229 (48.1) – மினோத் பானுக்க 61, சச்சித்ர சேரசிங்க 56, மிலிந்த சிறிவர்தன 51, ஷிரான் பெர்னாண்டோ 4/38, இசுரு உதான 2/41, ரஜீவ வீரசிங்க 2/46

எல்.பி. பினான்ஸ் – 231/4 (36.5) – சதீர சமரவிக்ரம 71*, குசல் மெண்டிஸ் 52, தனஞ்சய டி சில்வா 37*, அஞ்செலோ பெரேரா 28*, ஷெஹான் ஜயசூரிய 21, லசித் குரூஸ்புள்ளே 2/41

முடிவு – எல்.பி. பினான்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி  

டிமோ எதிர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ்

கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான இப்போட்டியில் டிமோ அணிக்கு எதிராக கடைசி பந்து வரை போராடிய ஜோன் கீல்ஸ் அணி 9 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்து.

இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள 2019 கிரிக்கெட் உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணம்

சர்வதேச நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படும் 2019ஆம் ஆண்டுக்கான ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண வெற்றிக்…

முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட டிமோ அணி 50 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 222 ஓட்டங்களை பெற்றது. எனினும் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜோன் கீல்ஸ் அணி முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை  பறிகொடுத்ததால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களை பெற்று தோல்வியை சந்தித்தது.

போட்டியின் சுருக்கம்

டிமோ – 222/9 (50) – ரமேஷ் மெண்டிஸ் 58*, நிபுன் கருணாநாயக்க 37, நிசல தாரக்க 32, ஜெஹான் டானியல் 3/57, இஷான் ஜயரத்ன 2/51

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் – 213/9 (50) – மனோஜ் சரத்சந்திர 36, ரொஷேன் சில்வா 45, ஜெப்ரி வன்டர்சே 26, ஜெஹான் டானியல் 24, இஷான் ஜயரத்ன 23, திமுத் கருணாரத்ன 21, கவிஷ்க அஞ்சுல 4/43, ரமேஷ் மெண்டிஸ் 2/23

முடிவு – டிமோ 9 ஓட்டங்களால் வெற்றி

சம்பத் வங்கி எதிர் ஹேலிஸ் PLC

தசுன் ஷானக்கவின் சகலதுறை ஆட்டத்தின் உதவியோடு ஹேலிஸ் PLC அணிக்கு எதிரான போட்டியில் சம்பத் வங்கி 31 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

கொழும்பு MCA மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தசுன் ஷானக்க துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காது 35 ஓட்டங்களை பெற்றதோடு பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இதன் மூலம் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட சம்பத் வங்கி 259 ஓட்டங்களை பெற்றதோடு ஹேலிஸ் அணியை 228 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியது.

போட்டியின் சுருக்கம்

சம்பத் வங்கி – 259/9 (50) – கௌஷால் சில்வா 50, ஜீவன் மெண்டிஸ் 50, தசுன் ஷானக்க 35*, சமீன் கதனாரச்சி 31*, சரித் புத்திக்க 20, லஹிரு சமரகோன் 4/54, சானக்க ருவன்சிறி 2/42, பினுர பெர்னாண்டோ 2/48

ஹேலிஸ் PLC – 228 (43.5) – சானக்க ருவன்சிறி 37, சதருவன் பெர்னாண்டோ 37, அவிஷ்க பெர்னாண்டோ 36, அண்டி சொலமன் 33, பினுர பெர்னாண்டோ 22, துஷ்மன்த சமீர 2/29, தசுன் ஷானக்க 3/66

முடிவு – சம்பத் வங்கி 31 ஓட்டங்களால் வெற்றி

கொமர்சியல் கிரெடிட் எதிர் மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிசெல்லா

19 வயதுடைய இளம் வீரர் கமிந்து மெண்டிஸின் அதிரடி பந்துவீச்சு மூலம் கொமர்சியல் கிரெடிட் அணிக்கு எதிரான போட்டியில் மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிசெல்லா அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.  

கொழும்பு, பீ சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கொமர்சியல் கிரெடிட் அணி  164 ஓட்டங்களுக்கே சுருண்டது. கமிந்து மெண்டிஸ் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யுனிசெல்லா அணி 37.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இலங்கை அணி முன்னாள் விரர் திலகரத்ன டில்ஷான் அதிகபட்சமாக 32 ஓட்டங்களை பெற்றார்.

இந்திய மகளிர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஜெனிமாஹ் ரொட்ரிகஸ்

இலங்கை மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது T20 போட்டியில், இந்திய மகளிர் அணி ஜெனிமாஹ்….

போட்டியின் சுருக்கம்

கொமர்சியல் கிரெடிட் – 164 (40.5) – வனிது ஹசரங்க 40, மலிந்த புஷ்பகுமார 24, அஷான் பிரியஞ்சன் 23, கமிந்து மெண்டிஸ் 4/42, அனுக் பெர்னாண்டோ 3/30, தம்மிக்க பிரசாத் 2/17

மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிசெல்லா – 166/6 (37.4) – திலகரத்ன டில்ஷான் 32, நிரோஷன் திக்வெல்ல 29, கமிந்து மெண்டிஸ் 27*, ஹசித்த போயகொட 23*, சதுரங்க டி சில்வா 3/32

முடிவு – மாஸ் யுனிசெல்லா 4 விக்கெட்டுகளால் வெற்றி  

கான்ரிச் பினான்ஸ் எதிர் மாஸ் சிலுயேட்டா

மக்கொன, சர்ரே மைதானத்தில் நடைபெற்ற போட்டி மழை குறுக்கிட்ட நிலையில் கான்ரிச் பினான்ஸ் அணிக்கு எதிராக மாஸ் சிலுயேட்டா டக்வத் லுவிஸ் முறைப்படி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

ஓஷத பெர்னாண்டோ சிறப்பாக துடுப்பெடுத்தாடி 80 ஓட்டங்களை பெற்றபோதும் முதலில் துடுப்பெடுத்தாடிய கான்ரிச் பினான்ஸ் அணி 34.1 ஓவர்களில் 153 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

இந்நிலையில் மாஸ் சிலுயேட்டா நிர்ணயித்த வெற்றி இலக்கை 19 ஓவர்களில் எட்டியது.

போட்டியின் சுருக்கம்

கான்ரிச் பினான்ஸ் – 153/6 (34.1) – ஓஷத பொர்னாண்டோ 80, புத்திக்க சஞ்சீவ 3/16

மாஸ் சிலுயேட்டா – 127/6 (19) – சங்கீத் குரே 22, தெனுவன் ராஜகருணா 22, ஷாலிந்த உஷான் 24, பிரமோத் மதுஷான் 2/18

முடிவு – மாஸ் சிலுயேட்டா 4 விக்கெட்டுகளால் வெற்றி (டக்வத் லுவிஸ் முறை)   

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<