ஜோன் கீல்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி

98

பெயார் அன்ட் லவ்லி மென் அனுசரணையில் நடைபெறும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான B பிரிவு ஒருநாள் தொடரில் ஹட்டன் நெசனல் வங்கியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜோன் கீல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஜோ ரூட்டின் சதத்தையும் தாண்டி சுழல் பந்துவீச்சால் மிரட்டிய அகில தன்னஜய

கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய…

கொழும்பு, BRC மைதானத்தில் இன்று (16) நடைபெற்ற இந்தப் போட்டியில் ஹட்டன் நெசனல் வங்கியை குறைந்த ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்திய ஜோன் கீல்ஸ் அணி ஆரம்ப வீரர் ரவிந்து கொடிதுவக்குவின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் வெற்றியை உறுதி செய்து கொண்டது.

தொடரின் இறுதிப் போட்டிக்கான இருண்டாவது தகுதிகாண் ஆட்டமாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜோன் கீல்ஸ் ஹொல்டிங்ஸ் B அணி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய ஹட்டன் நெசனல் வங்கி 17 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

எனினும், முதல் வரிசையில் வந்த 19 வயதுடைய பிரபாத் சிறப்பாக ஆடி அரைச்சதம் ஒன்றை எட்டினார். 78 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 5 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 59 ஓட்டங்களை பெற்றார். எனினும் அந்த அணியின் ஏனைய வீரர்கள் கைகொடுக்க தவறினர். குறிப்பாக மத்திய வரிசையில் அணித்தலைவர் மாதவ வர்ணபுர (32), தமித்த ஹுனுகும்புர (30) வெற்றி ஓட்டங்களை நோக்கி முன்னேறியபோதும் அவர்களால் அந்த ஓட்டங்களை அதிகரிக்க முடியாமல் போனது.

இதனால், ஹட்டன் நெசனல் வங்கி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த 213 ஓட்டங்களை பெற்றது.

சச்சித் பத்திரன, கமிந்து மெண்டிஸ் ஆகியோருடன் சதம் குவித்த இளம் வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான மேஜர் எமர்ஜிங்…

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய ஜோன் கீல்ஸ் அணிக்கு ரவிந்து கொடிதுவக்கு சிறந்த ஆரம்பம் ஒன்றை பெற்றுக்கொடுத்தார். 102 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 8 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிஸருடன் 75 ஓட்டங்களை பெற்றார். அதேபோன்று ரொஸ்கோ தட்டில் ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களை பெற்று ஜோன் கில்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதன்மூலம் ஜோன் கீல்ஸ் அணி 47.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 214 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

போட்டியின் சுருக்கம்

ஹட்டன் நெசனல் வங்கி – 213 (50) – சவன் பிரபாஷ் 59, மாதவ வர்ணபுர 32, தமித் ஹுனுகும்புர 30, டேஷான் டயஸ் 27, சச்சித்த ஜயதிலக்க 2/23, மாலிங்க அமரசிங்க 2/28, தரிந்து ரத்னாயக்க 2/44

ஜோன் கில்ஸ் – B – 214/7 (47.3) – ரவிந்து கொடிதுவக்கு 76, ரொஸ்கோ தட்டில் 48*, மாலிங்க அமரசிங்க 40, விமுக்தி பெரேரா 2/27

முடிவு – ஜோன் கீல்ஸ் 3 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<