பிக் பேஷ் லீக்கில் ஸ்டீபன் பிளமிங்குடன் கைக்கோர்க்கும் பிராவோ

162
Image Courtesy - www.zimbio.com

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் சகலறை வீரர் டுவைன் பிராவோ, அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள பிக் பேஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

டுவைன் பிராவோ கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார். எனினும், இந்தியன் ப்ரீமியர் லீக் மற்றும் ஏனைய உள்ளூர் T20 தொடர்களில் தொடர்ந்தும் விளையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு திடீர் ஓய்வை அறிவித்த பிராவோ

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னணி..

இந்நிலையில், இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் டுவைன் பிராவோ விளையாடிய  சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு பயிற்றுவித்த ஸ்டீபன் பிளமிங், பயிற்றுவிக்கவுள்ள மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக பிராவோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பிராவோ ஏற்கனவே பிக் பேஷ் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரினகட்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். எனவே, தற்பொழுது அவர் முதன்முறையாக மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருடன் வெளிநாட்டு இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களான நேபாள அணியின் சந்தீப் லெமைச்சேன் மற்றும் இங்கிலாந்தின் இளம் வீரர் மெட் பர்கின்சன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.  

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக டுவைன் பிராவோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை குறித்து ஸ்டீபன் பிளமிங் கருத்து வெளியிடுகையில்,

.பி.எல். தொடரின் பல போட்டிகளில் டுவைன் பிராவோவுடன் இணைந்து பணிபுரிந்துள்ளேன். அவரைப் போன்ற வீரர் ஒருவர் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் உடைமாற்றும் அறையை பகிர்ந்துக்கொள்வது அணிக்கு சிறந்த பலத்தை கொடுக்கும்.

அத்துடன், பிராவோ போன்ற வீரர் ஒருவர் விளையாடுவது ரசிகர்கள் மற்றும் சக வீரர்களிடத்தில் உற்சாகத்தை அதிகரிக்கும். அதேநேரம் இறுதி நேரங்களில் அவர் பந்துவீசும் விதம் மற்றும் மத்தியவரிசையில் வேகமாக ஓட்டங்களை பெற்றுக்கொடுக்கும் துடுப்பாட்டம் என்பன இம்முறை அணியின் முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறேன்என்றார்.

பிக் பேஷ் லீக்கில் முதன் முறையாக விளையாடவுள்ள நேபாள வீரர்

அவுஸ்திரேலியாவில் இவ்வருட இறுதியில் ஆரம்பமாகவுள்ள…

அதேவேளை மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் இணைந்தமை தொடர்பில் டுவைன் பிராவோ குறிப்பிடுகையில், “ஸ்டீபன் பிளமிங்கின் கீழ், நான் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளேன். அவர் ஒரு சிறந்த பயிற்றுவிப்பாளர். அவருடன் இணைந்து, மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்க முடியும் என நம்புகிறேன்” என்றார்.

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி கடந்த வருடம் 10 போட்டிகளில் விளையாடி, 2 வெற்றிகளை மாத்திரமே பெற்றிருந்தது. அதேவேளை, புள்ளிப்பட்டியலிலும் இறுதி இடத்தை பிடித்திருந்தது தோல்விக் கண்டது என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<