வர்த்தக நிறுவன கிரிக்கெட்டில் பிரகாசிக்கும் தேசிய அணி வீரர்கள்

675

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 26 ஆவது சிங்கர் பிரீமியர் லீக் ஒருநாள் தொடரின் மேலும் ஐந்து போட்டிகள் இன்று (23) நடைபெற்றன. இதில் உபுல் தரங்க, தசுன் ஷானக்க மற்றும் மனோஜ் சரத்சந்திர அபார சதம் பெற்றதோடு எல்.பி. பினான்ஸ் தொடர்ந்து ஐந்தாவது வெற்றியை பெற்றுக் கொண்டது.     

எல்.பி. பினான்ஸ் எதிர் மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிச்செலா

தனஞ்சய டி சில்வாவின் சிறப்பான துடுப்பாட்டம் மற்றும் சரித் சுதாரக்கவின் அதரடி பந்துவீச்சு மூலம் யுனிச்செலா அணிக்கு எதிரான போட்டியில் எல்.பி. பினான்ஸ் அணி மற்றுமொரு வெற்றியை சுவைத்தது.

வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து

மக்கொன சரே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் எல்.பி. பினான்ஸ் அணி 293 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்ததோடு யுனிச்செலா அணி சிறப்பாக ஆடி வெற்றியை நெருங்கியது. எனினும் சுழல் பந்து வீச்சாளர்களான சரித் சுதாரக்க மற்றும் ஷெஹான் ஜயசூரிய முறையே 4 மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி யுனிச்செலா அணியை 281 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தினர்.

இதன் போது எல்.பி. பினான்ஸ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் தனஞ்சய டி சில்வா 89 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

எல்.பி. பினான்ஸ் – 292 (49.2) – தனஞ்சய டி சில்வா 89, சரித் அசலங்க 60, ஷெஹான் ஜயசூரிய 28, குசல் மெண்டிஸ் 26, கமிந்து மெண்டிஸ் 3/53, தம்மிக்க பிரஸாத் 3/57, ஷெஹான் மதுஷங்க 2/60, அனுக் பெர்னாண்டோ 2/46

மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிச்செலா – 281 (45.5) – கமிந்து மெண்டிஸ் 74*, சாமர சில்வா 61, டீ.என். சம்பத் 57, நிரோஷன் திக்வெல்ல 21, சரித் சுதாரக்க 4/36, ஷெஹான் ஜயசூரிய 3/65, சரித் அசலங்க 2/58

முடிவு –  எல்.பி. பினான்ஸ் 11 ஓட்டங்களால் வெற்றி


ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் எதிர் ஹேலீஸ்

மழை குறுக்கிட்ட கொழும்பு கோல்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஹேலீஸ் அணிக்கு எதிராக இமாலய ஓட்டங்களை பெற்ற ஜோன் கீல்ஸ் அணி டக்வத் லுவிஸ் முறையில் 110 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய ஜோன் கீல்ஸ் அணிக்கு மனோஜ் சரத்சந்திர (108) சதம் பெற்றதோடு திமுத் கருணாரத்ன (91) ஒன்பது ஓட்டங்களால் சதத்தை தவறவிட்டார். இதன் மூலம் ஜோன் கீல்ஸ் அணி 50 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 319 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் போட்டியில் மழை குறுக்கிட ஹேலீஸ் அணிக்கு கடைசியில் 35 ஓவர்களுக்கு 306 ஓட்டங்களை பெற வேண்டி ஏற்பட்டது. எனினும் அந்த அணி குறித்த ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களையே எடுத்தது. ஜெப்ரி வன்டர்சே ஐந்து விக்கெட்டுகளை பதம்பார்த்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங் –  319/7 (50) –  மனோஜ் சரத்சந்திர 108, திமுத் கருணாரத்ன 91, ஜெஹான் டானியல் 41, மனெல்கார் டி சில்வா 20, லஹிரு சமரகோன் 3/56, பினுர பெர்னாண்டோ 2/47

ஹேலீஸ் – 196/9 (35) – ரொன் சந்திரகுப்தா 30, சந்தருவன் பெர்னாண்டோ 28, மதுரங்க சொய்சா 29, அண்டி சொலமன் 38, ஜெப்ரி வன்டர்சே 5/48, இஷான் ஜயரத்ன 1/32, சச்சிந்த பீரிஸ் 2/26

முடிவு – ஜோன் கீல்ஸ் 110 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லுவிஸ் முறை)


கொமர்சியல் கிரெடிட் எதிர் டிமோ

இலங்கையின் அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க பெற்ற அதிரடி சதத்தின் மூலம் கொமர்சியல் கிரெடிட் அணி 41 ஓட்டங்களால் வென்றது.

ரெட் புல் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை வெற்றியுடன் ஆரம்பித்த இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கொமர்சியல் கிரெடிட் சார்பில் தனித்து ஆடிய உபுல் தரங்க ஆட்டமிழக்காது 118 ஓட்டங்களை விளாசினார். இதன் மூலம் அந்த அணி 50 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 301 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் மழை குறிக்கிட்டதால் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டிமோ அணிக்கு 35 ஓவர்களில் 222 ஓட்டங்கள் எடுக்க வேண்டி ஏற்பட்டது. எனினும் அந்த அணி 35 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களையே பெற்றது.

போட்டியின் சுருக்கம்

கொமர்சியல் கிரெடிட் – 301/7 (50) – உபுல் தரங்க 118*, லஹிரு மதுஷங்க 34, டில்ஷான் முனவீர 22, அஷான் பிரியன்ஜன் 20, சதுரங்க டி சில்வா 23, வனிந்து ஹசரங்க 27, மதீஷ பெரேரா 2/29, கவிஷ்க அஞ்சுல 2/64

டிமோ – 181/6 (35) – சம்மு அஷான் 67, நிசல தாரக்க 37, ரமேஷ் மெண்டிஸ் 23*, நிபுன் கருணாநாயக்க 22, சுராஜ் ரந்திவ் 2/26

முடிவு – கொமர்சியல் கிரெடிட் 41 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லுவிஸ் முறை)


டீஜே லங்கா எதிர் மாஸ் சிலுயேட்டா

கொழும்பு MCA மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டீஜே லங்கா அணி 134 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மாஸ் சிலுயேட்டாவை இலகுவாக வென்றது.

சச்சித் பத்திரண பெற்ற 88 ஓட்டங்கள் மூலம் முதலில் துடுப்பெடுத்தாடிய டீஜே லங்கா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ஓட்டங்களை குவித்தது. எனினும் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மாஸ் சிலுயேட்டா 140 ஓட்டங்களுக்கே சுருண்டது. அதிரடியாக பந்து வீசிய லக்ஷான் சந்தகன் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

டீஜே லங்கா – 274/9 (50) – சச்சித் பத்திரண 88*, மினோத் பானுக்க 36, மிலிந்த சிறிவர்தன 35, சச்சித்ர சேரசிங்க 30, சச்சித்ர சேனநாயக்க 26, ருவிந்து குணசேகர 21, புத்திக்க சஞ்சீவ 2/54, மாலிங்க டி சில்வா 2/32, நிமந்த சுபசிங்க 2/47, நுவன் பிரதீப் 2/41

மாஸ் சிலுயேட்டா – 140 (33.2) – அஞ்செலோ எமானுவேல் 30, தினுவன் ராஜகருணா 28, நிமந்த சுபசிங்க 25, இரோஷ் சமரசூரிய 24, லக்ஷான் சந்தகன் 5/28, சலன டி சில்வா 2/32

முடிவு – டீஜே லங்கா 134 ஓட்டங்களால் வெற்றி


சம்பத் வங்கி எதிர் கான்ரிச் பினான்ஸ்

கொழும்பு பி சரா ஓவல் மைதானதில் நடைபெற்ற போட்டி சீரற்ற காலநிலையால் 45 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய சம்பத் வங்கி 45 ஓவர்களுக்கு 304 ஓட்டங்களை பேற்றதோடு அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய தசுன் ஷானக்க ஆட்டமிழக்காது 124 ஓட்டங்களை விளாசினார்.  

ஆசிய கிண்ண பங்களாதேஷ் குழாமில் இரு வீரர்கள் இணைப்பு

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கான்ரிச் பினான்ஸ் அணி 21.1 ஓவர்களில் 93 ஓட்டங்களுக்கு  5 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் சம்பத் வங்கி டக்வத் லுவிஸ் முறைப்படி 90 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியின் சுருக்கம்

சம்பத் வங்கி – 304/6 (45) – தசுன் ஷானக்க 124*, கௌஷால் சில்வா 43, ரொமேஷ் புத்திக்க 43, டிலேஷ் குணரத்ன 2/81, பிரமோத் மதுஷான் 2/60

கான்ரிச் பினான்ஸ் – 93/5 (21) – பதும் நிஸ்ஸங்க 31

முடிவு – சம்பத் வங்கி 90 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லுவிஸ் முறை)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<