யுனிலிவர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான டிவிஷன் – B மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியில் மாஸ் சிலுவெட்டா அணி மற்றொரு வெற்றியை பெற்றதோடு பவர் டெக் சிமென்ட் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணிகளும் இன்றைய (01) லீக் போட்டிகளில் வெற்றியீட்டின.

 ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் Bஎதிர் மொபிடெல் A’ 

கொழும்பு MCA மைதானத்தில் நடைபெற்ற போட்டி சீரற்ற காலநிலையால் 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. நாணய சுழற்சியில் வென்ற மொபிடெல் அணி ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.

இதன்படி களமிறங்கிய ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கவின் பண்டாரவின் சிறப்பான ஆட்டத்தால் 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றது. 19 வயதுக்கு உட்பட இலங்கை அணியின் முன்னாள் வீரரான கவின் பண்டார 74 ஓட்டங்களைக் குவித்தார். இதன் மூலம் அவர் இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் இதுவரை மொத்தம் 212 ஓட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சில் மொபிடெல் சார்பில் சரித ஜயம்பதி மற்றும் லக்ஷான் ஜயசிங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் மழை காரணமாக வெற்றி இலக்கு 45 ஓவர்களுக்கு 210 என மாற்றப்பட்டது. எனினும் பதிலுக்கு துடுப்பாடிய மொபிடெல் அணி 40.4 ஓவர்களில் 171 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. மொபிடெல் அணி சார்பில் திமிர ஜயசிங்க அதிகபட்சமாக 47 ஓட்டங்களைக் குவித்தார். பந்து வீச்சில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் சார்பில் நுவன் துஷார 5 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இறுதியில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் டர்வத் லூவிஸ் முறையில் 38 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 போட்டியின் சுருக்கம்

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (B) – 213 (46.4) – கவின் பண்டார 74, சச்சித ஜயதிலக்க 37, சரித ஜயம்பதி 3/29, லக்ஷான் ஜயசிங்க 3/33 

மொபிடெல் (A) – 171 (40.4) – திமிர ஜயசிங்க 47, லக்ஷான் ஜயசிங்க 45, நுவன் துஷார 5/32, சமித் துஷாந்த 2/28

போட்டி முடிவு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் டக்வத் லூவிஸ் முறைப்படி 38 ஓட்டங்களால் வெற்றி

மாஸ் சிலுவெட்டா Aஎதிர் யுனிலிவர் சிறிலங்கா

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான டிவிஷன் – B தொடரில் தோற்காத அணியாக இருக்கும் மாஸ் சிலுவெட்டா, யுனிலிவர் சிறிலங்கா அணியுடனான போட்டியையும் 134 ஓட்டங்களால் இலகுவாக வென்றது. சீரற்ற காலநிலையால் டகவத் லூவிஸ் முறையிலேயே முடிவு தீர்மானிக்கப்பட்டது.

சாமர சில்வா மீதான தடை தற்காலிகமாக நீக்கம்

கிரிக்கெட் மகத்துவத்துக்கு கேடு விளைவித்த குற்றத்துக்காக இலங்கை அணியின் அனுபவமிக்க நட்சத்திர வீரர்களில்..

FTZ மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டி சீரற்ற காலநிலையால் 46 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மாஸ் சிலுவெட்டா அணி 46 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 287 ஓட்டங்களைக் குவித்தது.

மாஸ் சிலுவெட்டா அணி சார்பில் துடுப்பாட்டத்தில் தெனுவன் ராஜகருண (51) அரைச்சதம் ஒன்றை பெற்றதோடு ஷெஹான் பெர்னாண்டோ (43) மற்றும் நிமந்த மதுஷங்க (42) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பலம் சேர்த்தனர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பாடக் களமிறங்கிய யுனிலிவர் சிறிலங்கா அணி 27 ஓவர்களில் 109 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. மதுஷ ராஜரத்ன மாத்திரம் தனித்துப் போராடி 47 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. மாஸ் சிலுவெட்டா அணி சார்பில் பந்துவீச்சில் ருமேஷ் சில்வா 5 விக்கெட்டுகளையும் சரண நாணயக்கார 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 போட்டியின் சுருக்கம்

மாஸ் சிலுவெட்டா (A) – 287/7 (46) – தெனுவன் ராஜகருணா 51, ஷெஹான் பெர்னாண்டோ 43, நிமந்த மதுஷங்க 42, அசங்க சில்வா 2/26

யுனிலிவர் சிறிலங்கா 109 (27) – மதுஷ ராஜரத்ன 47, ருமேஷ் சில்வா 5/18, சரண நாணயக்கார 2/44

போட்டி முடிவு மாஸ் சிலுவெட்டா அணி டக்வத் லூவிஸ் முறைப்படி 134 ஓட்டங்களால் வெற்றி

கொமர்ஷியல் கிரெடிட் Bஎதிர் பவர் டெக் சிமென்ட்

பி. சரா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் கொமர்ஷியல் கிரெடிட் அணியை பவர் டெக் அணி 7 விக்கெட்டுகளால் இலகுவாக வென்றது.

முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கொமர்ஷியல் கிரெடிட் அணி 39.2 ஓவர்களில் 124 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஷலித டி சில்வா பெற்ற 30 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டமாகும். பந்துவீச்சில் பவர் டெக் சிமென்ட் அணிக்காக மதுர மதுஷங்க 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பாடிய பவர் டெக் சிமென்ட் அணி, போட்டி 49 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டபோதும் 13 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கான 125 ஓட்டங்களை எட்டியது. துடுப்பாட்டத்தில் தினெத் திமோத்ய ஆட்டமிழக்காது 77 ஓட்டங்களை விளாசினார்.

 போட்டியின் சுருக்கம்

கொமர்ஷியல் கிரெடிட் (B) – 124 (39.2) – ஷலித டி சில்வா 30, நிலுஷ உத்தமதாச 22, மதுர மதுஷங்க 4/23, கவின்து பண்டார 2/17

பவர் டெக் சிமென்ட் 125/3 (13) – தினெத் திமோத்ய 77*

போட்டி முடிவு பவர் டெக் சிமென்ட் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி