வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான றக்பி செவன்ஸ் சம்பியனாக மாஸ் ஹோல்டிங்ஸ்  

113
MAS regains the Mercantile 7s title from Access

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 47ஆவது றக்பி செவன்ஸ் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் எக்சஸ் அணியை வீழ்த்திய மாஸ் ஹோல்டிங்ஸ் அணி இவ்வருடத்திற்கான சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது.  

ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் எக்சஸ் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், இரண்டாம் பாதி முடிவில் இரு அணிகளும் 14 புள்ளிகளைப் பெற்று சமநிலையில் இருந்தது. எனினும், வெற்றியாளர்களை தீர்மானிக்க இரண்டாம் பாதிக்குப் பின்னர் வழங்கப்பட்ட மேலதிக நேரத்தில் 19-14 என்ற புள்ளிகள் அடிப்படையில் மாஸ் ஹோல்டிங்ஸ் முன்னிலை பெற்று போட்டியின் வெற்றியாளர்களாக மாறினர்.

அதேநேரம், பிளேட் (Plate) சம்பியன்ஷிப் போட்டிக்காக மோதிக்கொண்ட கான்றிச் பினான்ஸ் மற்றும் CDB ‘A’ அணிகளுக்கு இடையிலான போட்டி பலத்த போராட்டத்திற்கு மத்தியில் வழங்கப்பட்டிருந்த மேலதிக நேரத்தின் போதே, கான்றிச் பினான்ஸ் 12-07 புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்று வெற்றியீட்டியது.

மூன்றாம் இடத்திற்காக போட்டியிட்ட கிளாசிக் ட்ரவல்ஸ் மற்றும் புதிய வரவான க்லோவ்டெல் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 21-14 என்ற புள்ளிகள் அடிப்படையில், கிளாசிக் ட்ரவல்ஸ் வெற்றியை பதிவு செய்தது. அதேநேரம், CDB ‘B’ மற்றும் மற்றுமொரு புதிய அணியான பெயார்பெஸ்ட் இன்சூரன்ஸ் அணிகளுக்கு இடையிலான நான்காவது இடத்துக்கான போட்டியில் பெயார்பெஸ்ட் இன்சூரன்ஸ் அணியை 21-14 புள்ளிகள் அடிப்படையில் CDB ‘B’ அணி வெற்றியீட்டியது.

20 வயதுக்கு உட்பட்ட ஆசிய எழுவர் ரக்பி தொடருக்கான இலங்கை குழாம் இதுதான்

இலங்கை ரக்பி அணியின் தேர்வாளர்கள், அடுத்த மாதம் ஹொங்கொங்கில் நடைபெறவுள்ள 20 வயதுக்கு உட்பட்ட ஆசிய எழுவர் (Sevens) ரக்பி தொடரில்…

மகளிர் பிரிவுக்கான றக்பி செவன்ஸ் போட்டியில் CDB மற்றும் சிலோன் டொபாக்கோ (Ceylon Tobacco) அணிகளுக்கு இடையிலான மோதலில், 25-00 என்ற புள்ளிகள் அடிப்படையில் CDB அணி இலகுவான வெற்றியைப் பதிவு செய்தது.

மூன்றாவது இடத்துக்கான காலிறுதிப் போட்டிகளில், க்லோவ்டெல் (Clovetel), கிளாசிக் ட்ரவல்ஸ், கந்துரட்ட அம்ப்ரெல்லா (Kandurata Umbrella) மற்றும்  ப்ரொஸ்பெraஸ் கெப்பிடல் (Prosperous Capital) ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தெரிவாகின.

க்லோவ்டெல் 24 00 ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ்
கிளாசிக் ட்ரவல்ஸ் 19 12 ஹெலா க்லோத்திங்
கந்துரட்ட அம்ப்ரெல்லா 24 17 ப்ராண்டிக்ஸ்
ப்ரொஸ்பெக்டஸ் கெப்பிடல் 19 14 சம்பத் வங்கி

நான்காவது இடத்துக்கான அரையிறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய CDB மற்றும்  பெயார்பெஸ்ட் இன்சூரன்ஸ் (Fairfirst Insurance) அணிகள் இறுதி போட்டிக்குத் தெரிவாகின.

ஜனசக்தி 21 36 CDB ‘B’
NTB 21 24 பெயார்பெஸ்ட் இன்சூரன்ஸ்

அதேநேரம் முதல் தடவையாக இந்த போட்டிகளில் பங்குபற்றிய க்லோவ்டெல் மற்றும் கிளாசிக் ட்ரவல்ஸ் ஆகிய அணிகள் மூன்றாவது இடத்துக்கான இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுக்கொண்டன.

க்லோவ்டெல் 15 05 கந்துரட்ட அம்ப்ரெல்லா
கிளாசிக் ட்ரவல்ஸ் 24 17 ப்ரொஸ்பெரஸ் கெப்பிடல்

கிண்ணத்துக்கான மற்றும் இரண்டாம் இடத்துக்கான அரையிறுதி போட்டியில் AMW ‘A’ அணிக்கு எதிரான போட்டியில் 22-12 என்ற புள்ளிகள் அடிப்படையில், CDB ‘A’ அணி வெற்றியீட்டிய அதேநேரம், பானுக்க நாணயக்கார மற்றும் சந்தேஷ் ஜயவிக்கரம ஆகியோரின் ட்ரைகளின் மூலம் முதல் பாதி நேரத்தில், AMW ‘B’ திறமைகளை  வெளிப்படுத்தியிருந்த போதிலும் CDB ‘B’ அணி வெற்றியை உறுதி செய்தனர்.

வரலாற்று வெற்றியை தவறவிட்ட இலங்கை ரக்பி அணி

மேற்கிந்திய தீவுகளின் பஹாமாஸ் தீவுகளில் தற்போது நடைபெற்று வருகின்ற 6ஆவது பொதுநலவாய நாடுகளின் இளையோர் விளையாட்டு…

கான்றிச் பினான்ஸ் மற்றும் மொபிடெல் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியில் கான்றிச் பினான்ஸ் வோக் ஓவர் முறையில் (Walk Over) தகுதி பெற்றுக்கொண்டது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிண்ணத்துக்கான முதலாவது அரையிறுதிப் போட்டியில் எக்ஸ்சஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. முதல் பாதி நேரத்தில் திலின விஜேசிங்க மற்றும் ஹிரந்த பெரேராவின் அதிரடி ட்ரைளின் உதவியுடன் முன்னிலை பெற்றிருந்தது. எனினும், இரண்டாம் பாதியில் மீண்டெழுந்த எக்ஸ்சஸ் அணி, புவனேகா உதங்கமுவ, லவங்க பெரேரா மற்றும் அணித்தலைவர் தனுஷ்க ரஞ்சன் ஆகியோரின்  அற்புதமான ட்ரைளின் மூலம் 20-10 என்ற புள்ளிகள் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பினை தக்க வைத்துக்கொண்டது.

விறுவிறுப்பான மாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டயலொக் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், 14-10 என்ற புள்ளிகள் அடிப்படையில் மாஸ் ஹோல்டிங்ஸ் அணி வெற்றியீட்டியது. மாஸ் ஹோல்ட்டிங்ஸ் அணி சார்பாக அனுராத வில்வர மற்றும் சந்துன் ஹேரத் இரண்டு ட்ரைகளை பெற்றனர். அதேநேரம் மொஹமட் அட்ஸால் டயலாக் சார்பாக இரண்டு ட்ரைகளை வைத்திருந்தார். டயலொக் அணிக்கு வெற்றியீட்டுவதற்கு பல வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும் இறுதிவரை ட்ரை கோட்டை அவர்களால் தொட முடியவில்லை.

நான்காவது இடத்துக்கான போட்டி

பெயார்பெஸ்ட் இன்சூரன்ஸ் அணிக்கு எதிரான நான்காவது இடத்துக்கான விறுவிறுப்பான போட்டியில் CDB ‘B’  வெற்றியை தனதாக்கிக்கிக்கொண்டது. அவிஷ்க லீ இரண்டு ட்ரைகளையும் தனுக ரத்நாயக்க ஒரு ட்ரையினையும் வெற்றிக்கான இறுதி ட்ரை ஹேஷான் ஜான்சென்னாலும் வைக்கப்பட்டது. அதேநேரம் பெயார்பெஸ்ட் இன்சூரன்ஸ் அணி சார்பாக எம்.எ.எஸ்.  பெர்னாண்டோவின் இரண்டு ட்ரைகளை பதிவு செய்தார். அந்த வகையில் போட்டியில் முடிவு 20-14 புள்ளிகள் அடிப்படையில் CDB  ‘B’ அணிக்கு சார்பானதாக அமைந்திருந்தது.

மகளிர் இறுதி போட்டி

நடப்பு சம்பியனான சிலோன் டொபாக்கோ 25-00 என்ற புள்ளிகள் அடிப்படையில் CDB மகளிர் அணியை இலகுவாக வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.

மூன்றாவது இடம்

கிளாசிக் ட்ரவல்ஸ் மற்றும் க்லோவ்டெல் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சதுர செனவிரத்ன புள்ளிகளைப் பெற்று கிளாசிக் ட்ரவல்ஸ் அணியை முன்னிலைப்படுத்தினார், எனினும் குறித்த போட்டி நிறைவடைவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்னர் சம்மிக்க திவங்க மற்றும் பி. பஸ்நாயக்க அடுத்தடுத்து ட்ரைகளை வைத்து க்லோவ்டெல் அணியை மீட்டெடுத்தனர். எனினும் இறுதி நிமிடத்தில், நிரோஷ் உதயங்கவினால்  அடுத்தடுத்து தொடர்ச்சியாக பெற்றுக்கொண்ட ட்ரைக்ளின் மூலம்  கிளாசிக் ட்ரவல்ஸ் 21-14 புள்ளிகள் அடிப்படையில் மூன்றாவது இடத்துக்கான இறுதி போட்டியில் வெற்றியீட்டிக்கொண்டது

இரண்டாவது இடம்

கான்றிச் பினான்ஸ் மற்றும் CDB ‘A’ அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் திலின வீரசிங்க கான்றிச் சார்பாக  முதலாவது ட்ரையினை வைத்து அணியை முன்னிலைப்படுத்தினார், அதேநேரம் இரண்டாம் பாதி நேரத்தில், ரெஹான் தியாகராஜாவின்  ட்ரை ஒன்றின் மூலம்  பெறப்பட்ட உதையை வீரசிங்க நிறைவு செய்து புள்ளிகளை சமப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் வெற்றியை தீர்மானிப்பதற்காக  கொடுக்கப்பட்ட மேலதிக நேரத்தின் போது கான்றிச் அணி சார்பாக பபரசார ஹேவகேவின் அபார ட்ரை ஒன்றின் மூலம் 12-7 என்ற புள்ளிகள் அடிப்படையில் கான்ரிச் அணி வெற்றியை தக்கவைத்துக்கொண்டது.

கிண்ணத்துக்கான இறுதி போட்டி

மின்னொளியின் கீழ் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், ஸ்ரீநாத் சூரியபண்டாரவின் உதையுடன் போட்டி ஆரம்பித்தது. மூன்று பின்கள தடுப்பு வீர்ரகளை தன்பக்கம் இழுத்து மிகவும் அற்புதமாக அனுருத்த வில்வராவுக்கு கொடுக்கப்பட்ட பந்து நகர்த்தலினால் ட்ரை ஒன்றை வைத்து, முதல் பாதி நேரத்தில் மாஸ் ஹோல்டிங்ஸ் முன்னிலை பெற்றது. (மாஸ் ஹோல்ட்டிங்ஸ் 07-00 எக்ஸஸ்)

மீண்டும் கிடைக்கப் பெற்ற சந்தர்ப்பம் ஒன்றை பயன்படுத்திக்கொண்ட ஒமல்கா ட்ரை ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்கி நகர்த்திய பந்து அணியினரால்  தவறவிடப்பட்டது. இதனிடையே தவறவிடப்பட்ட பந்தினை பெற்றுக்கொண்ட ரிச்சர்ட் தர்மபால, அனுருத்த வில்வராவை ஊடறுத்துச் சென்று அதன்முலம் ட்ரை ஒன்றைப் பெற்று புள்ளிகளை சமப்படுத்தினார். (மாஸ் ஹோல்ட்டிங்ஸ் 07-07 எக்ஸஸ்)

தொடர்ந்து சிறப்பாட்டத்தை வெளிப்படுத்திய மாஸ் ஹோல்டிங்ஸ் சிறந்த பந்து நகர்த்தல்களின் ஊடாக மேலுமொரு ட்ரையை சந்துன் ஹேரத்தின் மூலம் பதிவு செய்தது. (மாஸ் ஹோல்ட்டிங்ஸ் 14-07 எக்ஸஸ்)

இறுதி நிமிடத்தில் ரிச்சர்ட் தர்மபால ட்ரை ஒன்றை பெற்றுக்கொண்டதால் இவ்விரு அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி சமநிலையில் முடிவுற்ற நிலையில் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக மேலதிக நேரம் வழங்கப்பட்டது. (மாஸ் ஹோல்ட்டிங்ஸ் 14-14 எக்ஸஸ்)

வழங்கப்பட்ட மேலதிக நேரத்தின் போது இரு அணிகளுக்கும் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றிருந்த போதும் அவை தவறவிடப்பட்டிருந்தன. எனினும் மாஸ் ஹோல்டிங்ஸ் அணித் தலைவர் ரொஷான் வீரரத்ன வெற்றிக்கான ட்ரையை வைத்து மாஸ் ஹோல்டிங்ஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரிக்க வழிவகுத்தார். (மாஸ் ஹோல்ட்டிங்ஸ் 19-14 எக்ஸஸ்)   

போட்டியின் சிறந்த வீரர்கள்

ஹேஷான் ஜான்சன்  (CDB  ‘B ’) – நான்காம் இடத்துக்கான சிறந்த வீரர்

கயான் விக்ரமரத்ன   (கிளாசிக் ட்ரவல்ஸ்) – மூன்றாம் இடத்துக்கான சிறந்த வீரர்

பபராசர ஹேவகே (கான்றிச் பினான்ஸ்) – இரண்டாம் இடத்துக்கான சிறந்த வீரர்

இஷானி ஒபேசேகற  (CDB) – மகளிர் பிரிவுக்கான போட்டிகளில் சிறந்த வீரர்

சந்துன் ஹேரத்  (மாஸ் ஹோல்டிங்ஸ்) – இறுதி போட்டியின் சிறந்த வீரர்

ரிச்சர்ட் தர்மபால போட்டித் தொடரின் சிறந்த வீரர்

சிறந்த போட்டி பண்புகளை கொண்ட  விருதினை மாஸ் ஹோல்டிங்ஸ் வென்றெடுத்தது.

இறுதிநாள் போட்டிகளின் முடிவுகள்

MATCH TEAM 01 SCORE SCORE TEAM 02
Shield QF 01 Janashakthi 35 10 HSBC
Shield QF 02 NTB 24 17 AMW ‘B’
Shield QF 03 CDB ‘B’ 15 12 Ceylon Knit Trend
Shield QF 04 Ceylon Tobacco 07 26 Fairfirst Insurance
Bowl QF 01 Clovetel 24 00 Sri lanka insurance
Bowl QF 02 Classic Travel 19 12 Hela Clothing
Bowl QF 03 Kandurata Umbrella 24 17 Brandix
Bowl QF 04 Prosperous Capital 19 14 SAMPATH BANK
Shield SF 01 Janashakthi 21 36 CDB ‘B’
Shield SF 02 NTB 21 24 Fairfirst Insurance
Bowl SF 01 Clovetel 15 05 Kandurata Umbrella
Bowl SF 02 Classic Travel 24 17 Prosperous Capital
Plate SF 01 Kanrich Finance Walk over
Plate SF 02 AMW ‘A’ 12 22 CDB ‘A’
Cup SF 01 Access 20 10 John Keells
Cup SF 02 MAS 14 10 Dialog
Shield Final CDB ‘B’ 20 14 Fairfirst Insurance
Ladies Final CDB 25 00 Ceylon Tobacco
Bowl Final Clovetel 14 21 Classic Travel
Plate Final Kanrich Finance 12 07 CDB ‘A’
Cup Final Access 14 19 MAS