இம்மாதம் ஆரம்பமாகவுள்ள மன்னார் சுப்பர் லீக் டி20

338

மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்கமானது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக மன்னார் சுப்பர் லீக் எனும் பெயரில் தொழில் முறையிலான மாபெரும் டி20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியை இம்மாதம் நடாத்தவுள்ளது.

இதன் முதல் கட்டமாக அதன் அங்குரார்ப்பன நிகழ்வானது நேற்று முன்தினம் (04) மாலை 6.00 மணிக்கு யூலி ஹொட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், அணி உரிமையாளர்கள், அனுசரணையாளர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் பங்குபற்றியிருந்தார்கள்.

Photo Album – Mannar Super League T20 Inauguration Ceremony 2018

இந்நிகழ்வில்

  1. சுற்றுப்போட்டி இலட்சினை அறிமுகம்
  2. சுற்றுக் கிண்ணம் அறிமுகம்
  3. www.mslt20.com இணையத்தளம் அறிமுகம்
  4. அணிகளின் சீருடை அறிமுகம்
  5. வீரர்களின் ஏலம் என்பனவும் நடைபெற்றது

மொத்தமாக நான்கு அணிகளைக் கொண்டு நடைபெறவுள்ள இந்த சுற்றுத்தொடரில் ஒவ்வொரு அணியையும் வெவ்வேறு உரிமையாளர்கள் கொள்வனவு செய்துள்ளார்கள். ஒவ்வொரு அணியிலும் உரிமையாளர் உட்பட 16 வீரர்கள் போட்டியில் பங்குபற்றவுள்ளனர். இதில் அணி உரிமையாளரோடு சேர்த்து பாடசாலை வீரர் ஒருவர், கழக வீரர் ஒருவருமாக மொத்தமாக 03 வீரர்கள் அணியில் உள்ளவாங்கப்பட்ட நிலையில் ஏனைய 13 வீரர்களுக்கான அதாவது நான்கு அணிக்கும் சேர்த்து 52 வீர்ர்களுக்கான ஏலம் நடைபெற்றது. இந்த 52 வீரர்களுக்காக மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 76 வீரர்கள் விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மன்னார் மாவட்ட கிரிக்கெட்டில் ஒரு புது உதயமாக வரும் ‘மன்னார் சுப்பர் லீக்’

அணி விபரம் மற்றும் வீரர்களின் விபரங்கள்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<