மன்னாரில் ஆரம்பமாகும் மாபெரும் AA கால்பந்து சம்பியன்ஸ் கிண்ணம் – 2017

945
Mannar AA Sports football champions Trophy

மன்னார் மாவட்ட கால்பந்து லீக்கின் அனுமதியுடன் AA Sports வியாபார நிறுவனத்தினால் நடாத்தப்படும் மாபெரும் கால்பந்து சுற்றுப் போட்டியானது வியாழக்கிழமை (27ஆம் திகதி) மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

அணிக்கு 9 வீரர்களைக் கொண்டு, மன்னார் மாவட்டத்தின் பலம்பொருந்திய 40 அணிகள் மோதிக்கொள்ளும் இந்த சுற்றுப் போட்டியானது தொடர்ச்சியாக நான்கு நாட்கள் இடம்பெறவுள்ளன. இதன் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை மன்னார் அதே மைதானத்தில் நடைபெறும்.

பங்கு கொள்ளும் 40 அணிகளும் A, B என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதோடு, குழு B இற்கான போட்டிகள் வியாழக்கிழமையும், குழு A இற்கான போட்டிகள் வெள்ளிக்கிழமையும் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து அடுத்த சுற்றுக்கான போட்டிகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நடைபெறும்.

மன்னார் மண்ணில் மீண்டும் தனது பலத்தை நிரூபித்தது சென்.லூசியா

மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அணிக்கு 9 பேர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்…

சுற்றுத் தொடரின் முதல் மற்றும் இரண்டாம் சுற்றுப் போட்டிகளின் இரு பாதிகளும் தலா 15 நிமிடங்களைக் கொண்டதாகவும், இடைவேளை 3 நிமிடங்களைக் கொண்டதாகவும் இருக்கும். மூன்றாம் மற்றும் காலிறுதி சுற்றுகளின் இரு பாதிகளும் தலா 20 நிமிடங்களையும் இடைவேளை 5 நிமிடங்களையும் கொண்டிருக்கும்.

அரையிறுதி ஆட்டத்தின் இரு பாதிகளும் தலா 25 நிமிடங்களையும், இறுதிப் போட்டியின் இரு பாதிகளும் தலா 30 நிமிடங்களையும் கொண்டதாக இருக்கும். இந்த இரு சுற்றுகளுக்கும் இடைவேளை நேரம் 5 நிமிடங்கள் வழங்கப்படும்.

மன்னார் மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டு அதிகளவிலான சுற்றுப் போட்டிகள் நடைபெற்றுள்ளதோடு பெரும்பாலான தொடர்களில் எதிர்பாராத விதமாக வெவ்வேறு அணிகள் சம்பியனாகத் தெரிவாகியுள்ளன. எனவே, இந்த சுற்றுத் தொடரும் ரசிகர்களுக்கு எந்த குறைவும் இன்றி சிறந்த விருந்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வட மாகாணத்தில் முதல் தடவையாக ஒரு விளையாட்டு உபகரண விற்பனை நிறுவனத்தினால் நடாத்தப்படும் முதலாவது சுற்றுப் போட்டியாக இது இருன்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Group A
AA Cup Fixtures 2017 Group A
Group B

AA Cup Fixtures 2017 Group B