குரோஷிய வீரர் மன்ட்சூகீச் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு

133

நடந்து முடிந்த 2018ஆம் ஆண்டு பிஃபா உலகக் கிண்ண கால்பந்து சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் குரோஷிய (Croatia) அணிக்காக இரண்டாவது கோலைப் பெற்ற முன்கள வீரரான மரியோ மன்ட்சூகீச் (Mario Mandzukic) சர்வதேச அரங்கிலிருந்து தனது 32 ஆவது வயதில் ஓய்வை அறிவித்துள்ளார்.

ஜுவன்டஸ் கால்பந்து கழகத்தின் முன்கள வீரரான 32 வயதை இவ்வருடம் பூர்த்தி செய்த மரியோ மன்ட்சூகீச், தனது ஒய்வை சமூக வலைத்தளம் மூலமே தெரிவித்தார். 11 வருட காலம் குரோஷியாவின் கால்பந்து அணிக்காக 89 போட்டிகளில் விளையாடியுள்ள மன்ட்சூகீச்,  33 கோல்களை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இவ்வருட உலகக் கிண்ணக் கோப்பையில் குரோஷிய அணி சார்பாக மொத்தமாக 3 கோல்களை பெற்றுள்ள இவர், தனது ஒய்வை பின்வருமாறு டுவிட்டர் கணக்கில் பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொண்டார்,

“உலகக் கிண்ணத்தில் கிடைக்கப் பெற்ற அனுபவங்களும், பதக்கங்களும் அற்புதமானவை. அவை வாழ்வின் சில கடினமான முடிவுகளை எடுப்பதற்கு உறுதுணையாக அமைந்தது.

பிரீமியர் லீக்: நடப்புச் சம்பியன் சிட்டி மற்றும் லிவர்பூல் அணிகளுக்கு உறுதியான வெற்றி

கடந்த மாதம் நாம் எமது கனவை ரசிகர்களின் உதவியுடன் அடைந்தோம். அவ்வேளை எமக்கு கிடைக்கப் பெற்ற வரவேற்பும், மரியாதையும் எனது வாழ் நாளில் மறக்க முடியாத நிகழ்வுகளாகும்.

நான் சந்தித்த பல கடினமான தருணங்கள் எனது கால்பந்து வாழ்வை மகிழ்ச்சிகரமானதாக மாற்றியுள்ளது. அவற்றை நினைத்து நான் தற்போதும் மகிழ்ச்சியடைகின்றேன். நான் எனது நாட்டிற்காக என்னால் இயலுமான வரை களத்தில் போராடியுள்ளேன். அனைவருக்கும் தனது தாய் நாட்டிற்காக மரணிக்கும் வரை விளையாட நப்பாசை உண்டு. எனினும், இயற்கை அதற்கு இடமளிப்பதில்லை.

எனது ஓய்வை அறிவிக்க இந்த உலகக் கிண்ண நினைவுகளே சிறந்த தருணம். எனது தேசிய கால்பந்து வாழ்வில் என்னை புரிந்து கொண்டு எனக்கு உதவிய அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.”

பயேர்ன் முனீச் மற்றும் அட்லடிகோ மெட்ரிட் கால்பந்து கழகங்களின் முன்னாள் வீரரான மன்ட்சூகீச், இறுதியாக தனது கால்பந்து வாழ்வில் இடம்பெற்ற தவறுகளுக்காகவும் தனது ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரிக் கொண்டார். அத்துடன் ஒரு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் எதிரணிக்கான ஓன் கோல் (Own Goal) மற்றும் தனது அணிக்கான ஓரு கோலையும் பெற்று, இவ்வருட உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் சாதனை ஒன்றையும் இவர் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

மன்ட்சூகீச், குரோஷிய அணிக்காக 2007ஆம் ஆண்டு தனது முதலாவது சர்வதேச போட்டியில் பங்குபற்றினார். அதன் பின்னர் இடம்பெற்ற முக்கியமான 4 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். யுரோ கிண்ணம் 2012 மற்றும் 2016, உலகக் கிண்ணம் 2014 மற்றும் 2018 ஆகிய முன்னணி தொடர்களில் ஆடியுள்ள இவர், 2012 மற்றும் 2013ஆம் ஆண்டிற்கான “குரேஷியாவின் சிறந்த கால்பந்து வீரர்” என்ற பட்டத்தையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<