மென். யுனைடடின் சொந்த மைதானத்தில் அவ்வணியை வீழ்த்திய மென். சிடி

147

பிரீமியர் லீக் சுற்றுத் தொடரின் நேற்றைய போட்டியில் மென்சஸ்டர் யுனைடட் அணியை எதிர்கொண்ட மென்சஸ்டர் சிடி அணி 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.

இப்போட்டியில் தோல்வியுற்றதன் மூலம் தனது சொந்த அரங்கில் நடைபெற்ற கடந்த 40 போட்டிகளின் பின்னரான முதல் தோல்வியை மென்சஸ்டர் யுனைடட் அணி சந்தித்தது.   

சிறந்த கால்பந்து வீரராக மெஸ்சியின் சாதனையை சமன் செய்த ரொனால்டோ

இந்த தலைமுறையின் தலைசிறந்த கால்பந்து..

பிரீமியர் லீக் சுற்றுத் தொடரின் ஆரம்பம் முதலே புள்ளிப் பட்டியலில் முதல் இரு நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் இவ்விரு அணிகளுக்குமிடையிலான போட்டி, மென்சஸ்டர் யுனைடட் அணியின் அரங்கமான ஓல்ட் ட்ரவுட் அரங்கில் (Old Trafford) நடைபெற்றது.

மென்சஸ்டர் யுனைடட் அணியின் மத்தியகள வீரர் பொவ்ல் போக்பா (Paul Pogba) மற்றும் மென்சஸ்டர் சிடி அணியின் முன்கள வீரர் ஸர்ஜீயோ அக்வேரோ (Sergio Aguero) ஆகியோர் போட்டித்தடை காரணமாக இந்த மோதலில் விளையாடவில்லை.

போட்டியை ஆரம்பித்த மென்சஸ்டர் யுனைடட் அணியால் இறுதிவரை அதிகமான நேரம் எதிரணியிடமிருந்து பந்தை தடுத்தாடக் கூடிய நிலைமையே காணப்பட்டது. இரு அணிகளுக்கும் கிடைத்த வாய்ப்புக்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதில் இரு அணி வீரர்களும் தோல்வி கண்டனர்.   

போட்டியில் அதிக நேரம் பந்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மென்சஸ்டர் சிடி அணியால் 44ஆம் நிமிடத்தில் முதல் கோல் பெறப்பட்டது. கோணர் வாய்ப்பின் போது எதிரணி வீரர்களால் தடுத்தாடப்பட்ட பந்து தன்னையடைந்ததும் மென்சஸ்டர் சிடியின் டேவிட் சில்வா (David Silva) வேகமாக உதைந்து கோலாக்கினார்.

FIFA உலகக் கிண்ண குழு நிலை அணிகள் அறிவிப்பு

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் FIFA உலகக்…

அதனைத் தொடர்ந்து போட்டியின் 45 நிமிடங்கள் கடந்த நிலையில், மென்சஸ்டர் யுனைடட் அணியின் மத்திய களத்தின் வலது பக்கத்திலிருந்து பெனால்டி எல்லைக்குள் உள்ளனுப்பப்பட்ட பந்தை, மென்சஸ்டர் சிடியின் பின்கள வீரர்கள் தடுத்தாடுவதில் தோல்வியுற்றனர். இதன்போது பின்களத்தில் விடப்பட்ட தவறைப் பயன்படுத்திய மென்சஸ்டர் யுனைடட் அணியின் முன்கள வீரர் மார்கஸ் ரஸ்வுட் (Marcus Rashford), தன்னையடைந்த பந்தை கோல் கம்பத்தின் இடதுபக்க மூலையினால் கோலினுள் உட்செலுத்தி ஆட்டத்தை சமநிலைப்படுத்தினார்.  

எனவே, முதல் பாதி ஆட்டம் சமநிலையில் நிறைவுற்றது.

முதல் பாதி: மென்சஸ்டர் யுனைடட் 1 – 1 மென்சஸ்டர் சிடி

இரண்டாம் பாதியை துவங்கிய மென்சஸ்டர் சிடி அணி, போட்டியின் 54ஆம் நிமிடத்தில் இரண்டாவது கோலைப் பெற்றது. எதிரணியின் மத்திய களத்தின் வலது பக்கத்திலிருந்து மென்சஸ்டர் சிடி அணிக்கு கிடைக்கப்பெற்ற ப்ரீ கிக் வாய்ப்பை பெற்ற டேவிட் சில்வா, பந்தை பெனால்டி எல்லையின் வலதுபக்க மூலைக்கு உட்செலுத்தினார். உள்வந்த பந்தை மென்சஸ்டர் யுனைடட் அணியின் வீரர் ரோமீயா லுகாகு (Romeo Lukaku) தடுத்தாடும்போது விட்ட தவறைப் பயன்படுத்திய ஒடமன்டி (Otamendi), தனது அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து ரோமியோ லுகாகு மூலம் போட்டியின் 68ஆம் நிமிடத்தில் கோலை நோக்கி எடுக்கப்பட்ட முயற்சி கோல் காப்பாளரால் தடுக்கப்பட்டது. சிறந்த தூரப்பந்து பரிமாற்றத்தின் பின்னர் மென்சஸ்டர் யுனைடட் அணியால் எடுக்கப்பட்ட இம்முயற்சியை அவ்வணியின் ஆதரவாளர்கள் வரவேற்றனர்.

மீண்டும் போட்டியின் 84ஆம் நிமிடத்தில் மென்சஸ்டர் யுனைடட் அணியின் சிறந்த பந்துப் பரிமாற்றத்தை அவதானிக்க முடிந்தது.

மாற்று வீரராக களமிறங்கிய ஸல்டன் இப்ராஹீமோவிக் (Zlatan Ibrahimovic) மற்றும் ஜுவான் மாடா (Juan Mata) மற்றும் லுகாகு ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சிறந்த பந்துப் பரிமாற்றத்தின் பின்னர் அவர்களால் கோலுக்கான முயற்சியொன்று எடுக்கப்பட்டது.

ஊக்கமருந்து சர்ச்சையினால் ரஷ்யாவுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை

ஆசிய பாடசாலைகளுக்கிடையிலான நகர் வல ஓட்ட சம்பியன்ஷிப்…

இதன்போது அஸ்லீ யன்க் (Ashley Young) மூலம் பெனால்டி எல்லையின் இடது பக்கத்திலிருந்து உள்ளனுப்பப்பட்ட பந்தை பெற்ற லுகாகு வேகமாக கோலை நோக்கி உதைந்தார். எனினும் பந்தானது கோல் காப்பாளரால் தடுக்கப்பட்டு மீண்டும் ஜுவான் மாடாவை அடைந்தது. மீண்டும் தொடர்ந்து ஜீவான் மாடாவால் கோலை நோக்கி உதையப்பட்ட பந்தையும் மென்சஸ்டர் சிடி அணியின் கோல் காப்பாளர் இரண்டாவது முறையாகவும் குறுகிய நேரத்திற்குள் தடுத்தார்.

போட்டியின் நிறைவில் ஒரு கோல் வித்தியாசத்தால் பெற்ற வெற்றி மூலம் மென்சஸ்டர் சிடி அணி பிரீமியர் லீக் சுற்றுத் தொடரில் இதுவரை நடைபெற்ற எந்தவொரு போட்டியிலும் தோல்வியுறாமல் 16 போட்டிகளில் 15 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முழு நேரம்: மென்சஸ்டர் யுனைடட் 1 – 2 மென்சஸ்டர் சிடி

மேலும் சில போட்டி முடிவுகள்

வெஸ்ட் ஹாம் 1 – செல்சி 0

ஹடர்ஸ்பீய்ல்ட் 2 – பரய்டன்0

ஸீவஸேனா சிடி 1 – வெஸ்ட் பூரும் 0

லியஸ்டர் சிடி 3 – நீயுகாஸ்ல் 2

டொடன்ஹாம் 5 – ஸ்டோக் சிடி 1

ஸவுதம்டன் 1 – ஆர்சனல் 1

கிரிஸ்டல் பெலஸ் 2 – பர்னமவுத் 2

லீவர்பூல் 1 – எவர்டன் 1

பர்ன்லீ 1 – வொர்ட்புர்ட் 0