புனித அன்னமாள் மற்றும் குருநாகல் மலியதேவ கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற  வருடாந்த 50 ஓவர் போட்டியில் மலியதேவ கல்லூரி 16.5 ஓவர்கள் எஞ்சிய நிலையில்  7 விக்கெட்டுக்களால் இலகுவாக வெற்றியீட்டியது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித அன்னமாள் கல்லூரி, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி மலியதேவ கல்லூரியின் அதிரடி பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 48.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 140 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

>> இறுதிப் பந்தில் வெற்றியை சுவீகரித்த நாலந்த கல்லூரி

புனித அன்னமாள் அணி சார்பாக அதிகபட்ச ஓட்டங்களாக  ரந்தீர ரணசிங்க 34 ஓட்டங்களை பதிவு செய்த போதிலும், ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர். அதேநேரம் பந்து வீச்சில் கவின் பண்டார, மனெல்க தர்மதாச, தினஞ்சய பிரேமரத்ன மற்றும்  சந்ஜீவ பிரியதர்சன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதனையடுத்து 140 என்ற இலகுவான இலக்கைப் பெறுவதற்கு களமிறங்கிய மலியதேவ கல்லூரி, 33.1 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பாக சிறப்பாக துடுப்பாடிய துலாஜ் ரணதுங்க அரைச் சதம் கடந்து 53 ஓட்டங்களைப் பதிவு செய்த அதேவேளை, இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பாடி அணியை வெற்றிப் பாதைக்கு வழி நடாத்திய தினஞ்சய பிரேமரத்ன 35 ஓட்டங்களால் அணிக்கு பங்களிப்புச் செய்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித அன்னமாள் கல்லூரி: 140 (48.1) – ரந்தீர ரணசிங்க 34, விமுக்தி பண்டார 30, கவின் பண்டார 2/12, மனெல்க தர்மதாச 2/30, தினஞ்சய பிரேமரத்ன 2/22, சந்ஜீவ பிரியதர்சன 2/16  

மலியதேவ கல்லூரி: 141/3 (33.1) துலாஜ் ரணதுங்க 53, தினஞ்சைய பிரமரத்ன 35 *, லக்ஷித்த டி சில்வா 2/18

போட்டியின் முடிவு : மலியதேவ கல்லூரி 7 விக்கெட்டுக்களால் வெற்றி!