சொந்த மைதானத்தில் முதல் தோல்வியை சந்தித்த சென்னை

131

ஐ.பி.எல். தொடரில் நேற்று (26) நடைபெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை அவர்களது சொந்த மைதானத்தில் அபார பந்து வீச்சின் மூலம் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சுகயீனம் காரணமாக சென்னை அணித் தலைவர் மகேந்திரசிங் டோனி விளையாடாத நிலையில், சுரேஷ் ரெய்னா தலைவராக செயற்பட்டார். போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை மும்பை அணிக்கு வழங்கியது.

தினேஷ் கார்த்திக்கின் அதிரடியை வீணடித்த ராஜஸ்தான்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், தினேஷ் கார்த்திக்கின் அதிரடித்…

சன்ரைஸர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக்கம் மைதானம் துடுப்பாட்டத்துக்கு சாதகமாக இருந்த போதும், இந்த போட்டியில் பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகத்தன்மையை கொண்டிருந்தது. எனினும், சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

மும்பை அணியின் துடுப்பாட்டத்தை பொருத்தவரை, இந்த பருவகாலத்தில் துடுப்பாட்டத்தில் தடுமாறிவந்த அணித் தலைவர் ரோஹித் சர்மா, அரைச்சதம் கடந்தார். இந்த பருவகாலத்தின் அவரது முதல் அரைச்சதமாக இந்த போட்டியில் பெறப்பட்ட அரைச்சதம் பதிவானது. ரோஹித் சர்மா 48 பந்துகளில் 67 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, எவின் லிவிஸ் 32 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா 23 ஓட்டங்களையும் பெற்றனர். சென்னை அணியின் பந்து வீச்சில் மிச்சல் சென்ட்னர் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணிக்கு, மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக லசித் மாலிங்க ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷேன் வொட்சனின் விக்கெட்டினை வீழ்த்த, மறுபக்கம் குர்னல் பாண்டியா, ராயுடு மற்றும் ஜாதவ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இவ்வாறு தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த சென்னை அணி, 17.4 ஓவர்களில் தங்களுடைய சகல விக்கெட்டுகளையும் இழந்து, 109 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டு, 46 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. சென்னை அணியின் இந்த ஓட்ட எண்ணிக்கையானது சேப்பாக்கம் மைதானத்தில் அவர்களுடைய குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியதுடன், 2013 ஆம் ஆண்டுக்கு பின்னர், இந்த மைதானத்தில் வெற்றியிலக்கை நோக்கி சென்னை அணி தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பமாகவும் அமைந்தது.

தொடர் தோல்விகளிலிருந்து மீண்ட பெங்களூர் அணிக்கு பாரிய இழப்பு

தோள்பட்டை வீக்கம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்…

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பில் முரளி விஜய் 38 ஓட்டங்களையும், மிச்சல் சென்ட்னர் 22 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். பந்து வீச்சில் லசித் மாலிங்க 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், குர்னால் பாண்டியா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதேவேளை, இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளதுடன், 16 புள்ளிகளுடன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் – 155/4 (20) – ரோஹித் சர்மா 67 (48), எவின் லிவிஸ் 32 (30), ஹர்திக் பாண்டியா 23 (18), மிச்சல் சென்ட்னர் 13/2

சென்னை சுப்பர் கிங்ஸ் – 109 (17.2) – முரளி விஜய் 38 (35), மிச்சல் சென்ட்னர் 22 (20), லசித் மாலிங்க 37/4, குர்னால் பாண்டியா 7/2, ஜஸ்பிரிட் பும்ரா 10/2

முடிவு – மும்பை இந்தியன்ஸ் அணி 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<