NCC கழகத்துக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த தேசிய அணி வீரர்கள்

142

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல் தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரிமியர் லீக் முதல் தர கிரிக்கெட் தொடரில் நான்காவது வாரத்துக்கான முதல் போட்டி இன்று (18) ஆரம்பமாகியது.

NCC மற்றும் இலங்கை இராணுவ அணிகளுக்கு இடையில் ஆரம்பமான இப்போட்டியில் NCC கழகத்துக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த 20 வயதுடைய இளம் துடுப்பாட்ட வீரரான பெதும் நிஸ்ஸங்க சதம் கடந்து 188 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்று முதல் தரப் போட்டிகளில் கன்னி இரட்டைச் சதத்தை நெருங்கியுள்ளார்.

டெஸ்ட் தரவரிசையில் குசல் மெண்டிஸை முந்திய அஞ்செலோ மெதிவ்ஸ்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ள டெஸ்ட் துடுப்பாட்ட…

இதேநேரம், தேசிய அணி வீரர்களான சதுரங்க டி சில்வா சதம் கடந்து 102 ஓட்டங்களையும், அஞ்செலோ பெரேரா மற்றும் உபுல் தரங்க ஆகியோர் அரைச்சதங்களையும் குவித்தனர்.

NCC கழகத்தின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற NCC அணித் தலைவர் அஞ்செலோ பெரேரா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

இதன்படி, முதலில் துடுப்பாடக் களமிறங்கிய NCC அணிக்கு ஹசித போயகொட 3 ஓட்டஙகளுடனும், லஹிரு உதார 5 ஓட்டங்களுடனும் ஏமாற்றம் கொடுத்தனர்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த உபுல் தரங்க மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் நிதானமாக துடுப்பாடி ஓட்டங்களைக் குவித்தனர். இதில் அரைச்சதம் கடந்த உபுல் தரங்க, 60 பந்துகளுக்கு முகங்கொடுத்து 53 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து பெதும் நிஸ்ஸங்கவுடன் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் அஞ்செலோ பெரேரா, 4 ஆவது விக்கெட்டுக்காக 121 ஓட்டங்களை இணைப்பட்டமாகப் பெற்று வலுச்சேர்த்தார். எனினும், மல்க மதுஷங்கவின் பந்துவீச்சில் 59 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அஞ்செலோ பெரேரா ஆட்டமிழந்தார்.

Photos: NCC v Army SC – Major League Tier A Tournament 2018/19

இதனையடுத்து சதுரங்க டி சில்வா மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஜோடி 5 ஆவது விக்கெட்டுக்காக 166 ஓட்டங்களை இணைப்பட்டமாகப் பெற்று NCC அணிக்கு மேலும் வலுச்சேர்க்க அந்த அணி 400 ஓட்டங்களைக் கடந்தது. இதில் 99 பந்துகளுக்கு முகங்கொடுத்த சதுரங்க டி சில்வா, சதம் கடந்து 102 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இதன்படி, NCC கழகம் ஆட்டத்தின் முதல் நாள் நிறைவில் 90 ஓவர்களுக்கு 466 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து வலுவான நிலையில் காணப்படுகின்றது.

அந்த அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த பெதும் நிஸ்ஸங்க 188 ஓட்டங்களையும், மஹேல உடவத்த 46 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காது பெற்று ஆடுகளத்தில் இருந்தனர்.

காது கேட்காமலும், வாய் பேசாமலும் உலக கிரிக்கெட் சம்பியனான நம்மவர்கள்

சாதாரண ஒரு மனிதனைப் போல எமக்கு தோற்றம் அளித்தாலும்…….

இப்போட்டியில் பெதும் நிஸ்ஸங்க இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்வாராயின், 2018/2019 பருவகாலத்தில் முதல் தரப் போட்டிகளில் இரட்டைச் சதம் கடந்த முதலாவது வீரர் என்ற பெருமைய அவர் பெற்றுக் கொள்வார்.

பந்துவீச்சில் மல்க மதுஷங்க 116 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 466/5 (90) – பெத்தும் நிஸ்ஸங்க 188*, சதுரங்க டி சில்வா 102, அஞ்செலோ பெரேரா 59, உபுல் தரங்க 53, மஹேல உடவத்த 46*, மல்க மதுஷங்க 2/116

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<