முக்கியமான போட்டிக்கு முன் இலங்கை கால்பந்து அணியின் மூவருக்கு காயம்

73

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு இடம்பெற உள்ள பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023 AFC சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தகுதிகாண் சுற்று போட்டிகளை இலங்கை அணி வரும் (செப்டெம்பர்) 5 ஆம் திகதி துர்க்மனிஸ்தானுக்கு எதிராக போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது. இந்தப் போட்டி ரேஸ் கோஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.  

இலங்கை கால்பந்து அணி மிகப்பெரும் போட்டி ஒன்றை எதிர்கொண்டிருக்கும் நிலையில் அணியின் மூன்று முக்கிய வீரர்கள் உபாதைகளால் பாதிக்கப்படடுள்ளனர். துர்க்மனிஸ்தானுக்கு எதிரான முதலாவது தகுதிகாண் போட்டிக்கு இன்னும் மூன்று நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் மத்திய பின்கள வீரர்களான உதய கீர்த்தி, ஜூட் சுமன் மற்றும் கோல்காப்பாளர் ராசிக் ரிஷாட் மூவரும் காயம் காரணமாக ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.   

உலகக் கிண்ண தகுதி காண் இரண்டாம் சுற்றில் இலங்கை H குழுவில்

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் …………

தேசிய அணியின் இரண்டாம் நிலை கோல்காப்பாளரும் 23 வயதுக்கு உட்பட்ட அணித்தலைவருமான ரிஷாட் முழங்கால் தசைநார் உபாதை (ACL)  ஒன்றுக்காக கடந்த வாரம் சத்திரசிகிச்சை செய்து கொண்டிருக்கும் நிலையில் அவர் இலங்கையின் 3 போட்டிகளில் இடம்பெற மாட்டார் என்பதோடு, அவர் அணியில் இணைவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மோட்டர் சைக்கிள் விபத்து ஒன்றினால் காலில் காயங்களுக்கு உள்ளாகி இருக்கும் ஜூட் சுமனும் அணியில் இருந்து விலகியுள்ளார். அவரும் கூட குறைந்தது 2 போட்டிகளில் இடம்பெற மாட்டார் என்பதோடு குழாத்துடன் கடந்த இரண்டு வாரங்களாக பயிற்சிகளில் பங்கேற்கவில்லை

உதய கீர்த்தி முழங்கால் காயம் காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக பயிற்சியில் பங்கேற்கவில்லை. அவரும் கூட 2 போட்டிகளில் பங்கேற்பதில் சந்தேகம் இருப்பதோடு இந்த வாரம் மற்றும் அடுத்த வாரத்தில் பயிற்சிகளிலும் பங்கேற்க வாய்ப்பு இல்லை

இந்த விவகாரம் குறித்து இலங்கை கால்பந்து சம்மேளனம் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிடவில்லை.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<