மேஜேர் எமர்ஜிங் லீக்கில் துடுப்பாட்டத்தில் அசத்தும் இளம் வீரர்கள்

2

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான மேஜேர் எமர்ஜிங் லீக் (Major Emerging League) இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின், காலிறுதிப் போட்டிகளின் இன்று (17) ஆரம்பமாகியுள்ளன.

இலங்கையின் இளம் வீரர்களுக்கு தேசிய மட்டத்திலான அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதற்கும், இலங்கை தேசிய அணிக்கு இளம் வீரர்களை உள்வாங்கும் முயற்சியை மேற்கொள்ளும் வகையிலும் நடைபெற்று வரும் மேஜேர் எமர்ஜிங் தொடரின், லீக் போட்டிகள் நிறைவுற்ற நிலையில், நான்கு காலிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின.

மகளிர் T20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் ஆறாவது மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், நேற்று (16) நடைபெற்ற மேற்கிந்தி…

 

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் விளையாட்டு கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் தங்களது சொந்த மைதானத்தில் விளையாடிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது. இதில் நிஷான் மதுஷ்க (88) மற்றும் ஜெஹான் டேனியலின் (51) அரைச்சதம் அடங்கலாக அந்த அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்களை குவிக்க, சோனகர் விளையாட்டு கழக அணி ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 88 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 251 (67) – நிஷான் மதுஷ்க 88, ஜெஹான் டேனியல் 51, ஹஷான் துமிந்து 40, சனுக டில்ஷான் 4/49

சோனகர் விளையாட்டு கழகம் – 88/4 (21) – பபசர வதுகே 23, ரமேஷ் மெண்டிஸ் 26, நிசல தாரக 2/37

காலி கிரிக்கெட் கழகம் எதிர் ப்ளூம் பீல்ட் கிரிக்கெட் கழகம்

வெலிசர விமானப்படை மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி கிரிக்கெட் கழக அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 320 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், ப்ளூம் பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்  22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

காலி கிரிக்கெட் கழகம் – 320 (74.2) – பவந்த்த உடங்கமுவ 184, அவிந்து பெர்னாண்டோ 56, அசங்க சிங்கபுலி 4/69, இம்ரான் கான் 3/46, மதுஷான் ரவிச்சந்திரகுமார் 3/74

ப்ளூம் பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் – 22/2 (13) – கயான் சிரிசோம 2/13

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் SSC

கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆகாஷ் சேனாரத்னவின் அபார பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 192 ஓட்டங்களுக்கு சுருண்டதுடன், SSC கழகம் 173 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 192 (52.3) – சனித் டி மெல் 38, சிஹான் டிலசிறி 30, ஆகாஷ் சேனாரத்ன 7/87

SSC – 173/6 (35) – சத்துபம குணசிங்க 65*, சம்மு அஷான் 35, சந்தகன் பத்திரன 2/58

சச்சித் பத்திரன, கமிந்து மெண்டிஸ் ஆகியோருடன் சதம் குவித்த இளம் வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான மேஜர் எமர்ஜிங் லீக்…

BRC எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தமிழ் யூனியன் அணி முதலில் களத்துடுப்பில் ஈடுபட, முதலில் துடுப்பெடுத்தாடிய BRC அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 357 ஓட்டங்களை குவித்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

BRC கழகம் – 357 (87) – ரமிந்த விஜேசூரிய 98, சவின் குணசேகர 70, ஹஷேன் ராமநாயக்க 48, பினுர பெர்னாண்டோ 56/3, இசுறு தனன்ஜய 21/2

தமிழ் யூனியன் – துடுப்பெடுத்தாடவில்லை

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<