மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய இராணுவப்படை கிரிக்கெட் கழகம்

78

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), உள்ளூர் கழகங்கள் இடையே நடாத்தும் இரண்டு நாட்கள் கொண்ட மேஜர் எமர்ஜிங் கிரிக்கெட் தொடரில் இன்று (28) இரண்டு போட்டிகள் நிறைவடைந்தன.

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

டொம்பகொட மைதானத்தில் இடம்பெற்று முடிந்த இப்போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியில் எதிரணியினால் துடுப்பாட பணிக்கப்பட்டு முதலில் துடுப்பாடிய இராணுவப்படை கிரிக்கெட் கழகம் தமது முதல் இன்னிங்ஸில் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 73 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. 

டெஸ்ட் தொடருக்காக இலங்கை அணி பாகிஸ்தான் செல்ல வாய்ப்பு

டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் கீழ் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதற்காக …

இராணுவப்படை அணியினை பந்துவீச்சில் மிரட்டிய அவிந்து தீக்ஷன 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய லங்கன் கிரிக்கெட் கழக அணி, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 213 ஓட்டங்களை குவித்தது. 

லங்கன் கிரிக்கெட் கழக அணியின் துடுப்பாட்டம் சார்பில் லஹிரு தில்ஷான் 45 ஓட்டங்களுடன் தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களை பதிவு செய்தார். அதேநேரம், இராணுவப்படை கிரிக்கெட் கழக அணியின் பந்துவீச்சு சார்பில் ஷெஹான் விஜேரத்ன 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

அதேநேரம், லங்கன் கிரிக்கெட் கழக அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸ் நிறைவுக்கு வர போட்டியின் ஆட்ட நேரமும் நிறைவடைய போட்டியும் சமநிலை முடிவுடன் நிறைவுக்கு வந்தது.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 73 (21.5) – பெத்தும் குமார 17, அவிந்து தீக்ஷன 5/22

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 213 (49.3) – லஹிரு தில்ஷான் 45, கெவின் பெரேரா 41, ஷெஹான் விஜேரத்ன 3/25

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது 

சோனகர் கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 

கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் மழையின் குறுக்கீடு இருந்த காரணத்தினால் குறைவான ஓவர்களே வீசப்பட்டிருந்ததோடு, போட்டியும் சமநிலை அடைந்தது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய சோனகர் கிரிக்கெட் கழக அணி 44.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. சோனகர் கழக அணியின் துடுப்பாட்டம் சார்பில் லஹிரு அத்தநாயக்க 26 ஓட்டங்கள் குவிக்க, தமித் சில்வா 4 விக்கெட்டுக்களை சுருட்டினார்.

T10 லீக்கில் ஆடுகிறார் இலங்கையின் அசாதாரண சுழல் வீரர் கொத்திகொட

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியின் முன்னாள் வீரர் கெவின் …

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழக அணிக்கு  20 ஓவர்களை மாத்திரமே எதிர்கொள்ள முடியுமாக இருந்தது. அதன்படி, 20 ஓவர்களை எதிர்கொண்ட தமிழ் யூனியன் கிரிக்கெட் கழக அணி போட்டி சமநிலையில் நிறைவுக்கு வரும் போது 49 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்தது.

போட்டியின் சுருக்கம்

சோனகர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 110 (44.3) – லஹிரு அத்தநாயக்க 26, தமித் சில்வா 4/31

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 49/1 (20)

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க…