ரொனால்டோ, மெஸ்ஸி ஆதிக்கத்தை வீழ்த்தி பலோன் டி’ஓர் விருதை வென்றார் மொட்ரிக்

423

ரியல் மெட்ரிட் மற்றும் குரோஷிய கால்பந்து அணிகளின் மத்தியகள வீரர் லூகா மொட்ரிக் இந்த ஆண்டின் பலோன் டி’ஓர் (Ballon d’Or) விருதை வென்றார். இதன்மூலம், கடந்த ஒரு தசாப்த காலத்தில் நட்சத்திர வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தவிர்த்து கால்பந்து உலகின் கௌரவமிக்க விருதை வெல்லும் முதல் வீரராக அவர் இடம்பிடித்தார்.

33 வயதான மொட்ரிக் கடந்த மே மாதம் மூன்றாவது முறையாக சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்ற ரியல் மெட்ரிட் அணியில் முக்கிய இடத்தை பிடித்ததோடு, அவரது குரோஷிய அணி முதல் முறை உலகக் கிண்ண இறுதிப் போட்டி வரை முன்னேறியது.

உலகக் கிண்ணத்தினால் உலகையே ஈர்த்த நாயகர்கள்

ரியெல் மெட்ரிட் வாழ்வை முடித்து ஜுவண்டஸுடன்..

மெஸ்ஸி அல்லது ரொனால்டோ தவிர்த்து கடைசியாக 2007 ஆம் ஆண்டு பிரேசில் மற்றும் .சி. மிலான் அணிகளின் முன்னாள் முன்கள வீரர் ககா, பலோன் டிஓர் விருதை வென்றிருந்தார்.  

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் திங்கட்கிழமை (03) இரவு நடைபெற்ற கால்பந்து உலகின் சிறந்த வீரருக்கான இந்த விருது விழாவில் ரியல் மெட்ரிட்டில் இருந்து அண்மையில் ஜுவாண்டஸ் அணியில் இணைந்த ரொனால்டோ இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

இதில் பிரான்ஸ் அணிக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுக்க உதவிய அட்லெடிக்கோ முன்கள வீரர் அன்டோனி கிரீஸ்மன் மற்றும் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியின் முன்கள வீரரான கைலியன் ம்பாப்பே ஆகியோர் முறையே மூன்றாம் மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்ததோடு பார்சிலோனா முன்கள வீரர் மெஸ்ஸி ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.  

விருதை முத்தமிட்ட மொட்ரிக், பிஃபா சிறந்த வீரர் விருதையும் உலகக் கிண்ணத்தில் சிறந்த வீரருக்கான தங்கப்பந்து விருதையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.  

வெற்றிளை சுவைத்த ஜுவன்டஸ், ரியல் மெட்ரிட் மற்றும் PSG

UEFA சம்பியன்ஸ் லீக் கால்பந்து சுற்றுப்போட்டியின்..

மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவின் ஆதிக்கத்தால் கடந்த 10 ஆண்டுகளில் இந்த விருதை தவறவிட்ட அனைத்து வீரர்களுக்கும் இதனை சமர்ப்பிப்பதாக மொட்ரிக் குறிப்பிட்டார்.

சாவி, அன்ட்ரெஸ் இனியெஸ்டா அல்லது (வெஸ்லி) ஸ்னைடர் போன்ற சில வீரர்கள் கடந்த காலங்களில் பலோன் டிஓரை வென்றிருக்கலாம். கடைசியாக மக்கள் தற்போது வேறு யாரையாவது பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்என்று அவர் கூறினார்.

இதனை வெல்ல தகுதி படைத்தும் வெல்ல முடியாமல் போன அனைவருக்கும் இந்த விருது அர்ப்பணம். இந்த ஆண்டு எனக்கு சிறப்பானதாக இருந்தது.

எனது உணர்வை வார்த்தைகளால் விபரிக்க கடினமாக உள்ளது. எனக்கு இது தனித்துவமாக உள்ளது. இது மிகச்சிறந்ததாக இருந்ததுஎன்றும் அவர் மேலும் கூறினார்.  

இந்த விருதுக்கான சிறந்த வீரர்கள் பட்டியலில் முதல் 30 இடங்களை பிடித்தவர்களில் 17 வீரர்கள் ரியல் மெட்ரிட் அணியைச் சேர்ந்தவர்களாவர். இதில் பிரேசில் மற்றும் செயிண்ட் ஜெர்மைன் அணி முன்கள வீரர் நெய்மார் உள்ளார்.  

>> காணொளிகளைப் பார்வையிட <<

லியோன் மற்றும் நோர்வே அணிகளின் முன்கள வீராங்கனையான 23 வயதுடைய அடா ஹெகர்பேர்க் முதலாவது பெண்களுக்கான பலோன் டிஓர் விருதை வென்றதோடு, முன்னாள் பலோன் டிஓர் விருதை வென்றவர்களால் தேர்வு செய்யப்படும் 21 வயதுக்கு உட்பட்ட சிறந்த வீரருக்கான விருதை 19 வயதுடைய ம்பாப்பே முதல் வீரராக கைப்பற்றினார்.

கடந்த பருவத்தில் இங்கிலாந்து முன்னணி கால்பந்து தொடரில் அதிக கோல்கள் பெற்று சாதனை படைத்த லிவர்பூல் முன்கள வீரர் முஹமட் சலாஹ் பிரீமியர் லீக் வீரர்களில் உயர்ந்த இடமாக ஆறாவது இடத்தைப் பிடித்தார்.

செல்சி முன்கள வீரர் ஈடன் ஹஸார்ட் எட்டாவது இடத்தை பெற்றதோடு அவரது பெல்ஜியம் சக வீரர் கெவின் டி ப்ருயின் ஒன்பதாவது இடத்தைப் பெற்றார்.  

உலகக் கிண்ணத்தின் அரையிறுதி வரை முன்னேறி தங்கப்பாதணி வென்ற இங்கிலாந்து அணித்தலைவரும் டொட்டன்ஹாம் முன்கள வீரருமான ஹெரி கேன் 10 ஆவது இடத்தைப் பிடித்தார்.

மோதலில் முடிந்த கொழும்பு – புளூ ஸ்டார் போட்டி

களுத்துறை புளூ ஸ்டார் மற்றும் கொழும்பு கால்பந்து கழக..

பிரான்ஸ் கால்பந்து சம்மேளனத்தினால் 1956 தொடக்கம் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வரும் பலோன் டிஓர் விருதின் முதல் வெற்றியாளராக இங்கிலாந்தின் ஸ்டான்லி மத்தியூஸ் உள்ளார்.  

1995 ஆம் ஆண்டு வரை ஐரோப்பிய வீரர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்த விருது, ஐரோப்பிய கழகங்களில் ஆடும் எந்த ஒரு வீரருக்குமாக விரிவுபடுத்தப்பட்டது. 2007 இல் அது சர்வதேச அளவில் சிறந்த வீரருக்கான விருதாக மாறியது.

விருதுக்கான 30 பேர் கொண்ட இறுதிப் பட்டியல் பிரான்ஸின் இந்த சஞ்சிகையின் ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்தவர்களால் தேர்வு செய்யப்படுவதோடு வெற்றியாளர் உலகெங்கும் உள்ள செய்தியாளர்களின் வாக்கு மூலம் தேர்வு செய்யப்படுகிறார்.   

2010 தொடக்கம் 2015 வரை இந்த விருது, பிஃபா விருதுடன் இணைக்கப்பட்டதோடு 2016இல் உலக கால்பந்து சம்மேளனம் சொந்தமாக விருது வழங்க ஆரம்பித்தது.  

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<