T20I தரவரிசையில் பாரிய முன்னேற்றத்தைக் கண்ட ராஹுல்

58

ஐசிசி வெளியிட்டுள்ள புதிய T20I வீரர்கள் தரவரிசையின் படி, இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லோகேஷ் ராஹுல் தனது வாழ்நாள் அதியுயர் முன்னேற்றத்துடன், துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரை இந்திய அணி 5-0 என வென்று வரலாற்று சாதனையை பதிவுசெய்திருந்தது. இந்த வரலாற்று வெற்றிக்கு துடுப்பாட்ட வீரராக சிறந்த பங்களிப்பை வழங்கிய லோகேஷ் ராஹுல் வழங்கியிருந்தார்.

நியூசிலாந்தை வைட் வொஷ் செய்தது இந்தியா

நியூசிலாந்து அணி 25 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து…

தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த லோகேஷ் ராஹுல் 224 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இதன்படி, தரவரிசையில் 4 இடங்கள் முன்னேற்றம் கண்டு 2வது இடத்தை பிடித்துள்ளார். T20I தரவரிசையில் இவர் அடைந்த அதியுயர் முன்னேற்றமாக இது அமைந்துள்ளது.

ராஹுலை தவிர்த்து, இந்திய  அணியின் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சிலரும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.  இதில், ரோஹித் சர்மா மூன்று இடங்கள் முன்னுற்றத்துடன் 10வது இடத்தையும், ஸ்ரேயாஸ் ஐயர் 63 இடங்கள் முன்னேற்றத்துடன் 55வது இடத்தையும், மனிஷ் பாண்டே 12 இடங்கள் முன்னேற்றத்துடன் 58வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதில், T20I துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இந்திய அணியின் விராட் கோஹ்லி (9வது இடம்), ரோஹித் சர்மா மற்றும் ராஹுல் என மூன்று வீரர்கள் முதல் பத்து வீரர்களுக்குள் இடம்பிடித்துள்ளனர்.

துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையை போன்று, பந்துவீச்சாளர்கள் வரிசையிலும் இந்திய வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். இதில் ஜஸ்ப்ரிட் பும்ரா 26 இடங்கள் முன்னேறி 11வது இடத்தையும், யுஸ்வேந்திர சஹால் 30வது இடம், சர்துல் தாகூர் 57வது இடம் மற்றும் நவ்தீப் சைனி 76வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

நியூசிலாந்து அணியை பொருத்தவரை கேன் வில்லியம்சன் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் 23வது இடத்திலிருந்து 16வது இடத்துக்கும், டிம் செய்பர்ட் 73வது இடத்திலிருந்து 34வது இடத்துக்கும், ரொஸ் டெய்லர் 50வது இடத்திலிருந்து 39வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். பந்துவீச்சாளர்கள் வரிசையில், இஸ் சோதி 6 இடங்கள் முன்னேறி 13வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி

நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது T20 போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட…

இதேவேளை, பங்களாதேஷ்  அணிக்கு எதிரான போட்டியில் பிரகாசித்த பாகிஸ்தான் அணியின் சொஹைப் மலிக் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோர் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் முறையே 45 மற்றும் 71வது இடங்களை பிடித்துள்ளதுடன், குறித்த தொடரில் அரைச் சதம் ஒன்றை பெற்றுக்கொண்ட பாபர் அஷாம் தரவரிசையில் தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை பொருத்தவரை தொடரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய சஹீன் அப்ரிடி 72வது இடத்திலிருந்து 39வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.  பங்களாதேஷ் அணியில் தமிம் இக்பால் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் 50வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், பந்துவீச்சாளர்கள் வரிசையில் அல் அமின் ஹுசைன் 51வது இடத்தை பிடித்துள்ளார்.

ஐசிசியின் புதிய T20I வீரர்கள் தரவரிசையின் படி, துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் பாபர் அஷாம் , பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் மற்றும் சகலதுறை வீரர்கள் வரிசையில் மொஹமட் நபி ஆகியோர் முதலிடங்களை பிடித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க