ஐந்தாவது தடவையாகவும் ஐரோப்பிய தங்கப்பாதணியை தனதாக்கிய மெஸ்ஸி

518
Messi wins Golden Shoe
Image Courtesy - AFP

அனைத்து ஐரோப்பிய லீக்குகளிலும் அதிக கோல் போட்டவர் வரிசையில் முதலிடத்தைப் பிடித்த பார்சிலோனா நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி ஐரோப்பிய தங்கப் பாதணி விருதை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இந்த விருதுக்கான போட்டியில் ஒரு மாதத்திற்கு முன்னர் லிவர்பூல் முன்கள வீரர் முஹம்மது சலாஹ் ஏனைய போட்டியாளர்களை விடவும் சிறப்பாக செயற்பட்டு முன்னிலை பெற்றிருந்தபோதும் கடந்த மார்ச் மாத முடிவுக்குப் பின் அவரால் நான்கு ப்ரீமியர் லீக் கோல்களையே போட முடிந்தது. இதற்கு பதில் மெஸ்ஸி லா லிகாவில் எட்டு கோல்களைப் போட்டு அவரை முந்தியுள்ளார்.

உலகக் கிண்ணத்தின் வரலாற்றுக் கதை

பிஃபா என்ற வார்த்தையைத் தெரியாத விளையாட்டு..

இதன்படி தனது உள்ளூர் லீக்கில் மொத்தம் 34 கோல்களைப் போட்ட மெஸ்ஸி முதலிடத்தை பிடித்தார். சலாஹ் இதனை எட்டுவதற்கு இன்னும் இரண்டு கோல்கள் குறைவான நிலையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். டோட்டன்ஹாமின் ஹரி கேன் மொத்தம் 30 கோல்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இத்தாலி லாசியோ அணியின் சிரோ இம்மோபைல், இன்டர் மிலானின் மவுரோ இகார்டி மற்றும் பயெர்ன் முனிச்சின் ரொபர்ட் லெவன்டோஸ்கி ஆகியோர் தலா 29 கோல்களைப் பெற்று நான்காவது இடத்தை பகிர்ந்து கொண்டனர்.   

கோல்களின் எண்ணிக்கையை விடவும் புள்ளிகள் அடிப்படையிலேயே ஐரோப்பிய தங்க பாதணியை வெல்லும் வீரர் தீர்மானிக்கப்படுகின்றார். இதன்படி ஐரோப்பாவின் முதல் ஐந்து லீக்குகளிலும் கோல் பெற்றால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படுகிறது.

இதனடிப்படையில் பெனிபிகா கழகத்தின் ஜோனாஸ் 34 கோல்களை பெற்றபோதும் போர்த்துக்கல் லீக்கில் கோல் ஒன்றுக்கு 1.5 புள்ளிகளே வழங்கப்படுகிறது. இதனால் அவர் தங்க பாதணி விருதுக்கான போட்டியில் ஒன்பதாவது இடத்திலேயே உள்ளார்.  

மெஸ்ஸி ஏற்கனவே இந்த விருதை நான்கு முறை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் 2017, 2013, 2012 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இந்த விருதை வென்றுள்ளார்.

லா லிகா சம்பியனான பார்சிலோனா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடரின் கடைசி போட்டியில் ஆடியபோது மெஸ்ஸி பதில் வீரராகவே களமிறங்கினார். எனினும் ரியல் சொசிடாட் அணியுடனான அந்த போட்டியில் பார்சிலோனா 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நடப்பு சம்பியன் ஜெர்மனியின் உலகக் கிண்ண குழாம் அறிவிப்பு

இறுதியாக இடம்பெற்ற உலகக் கிண்ணத்தை வெல்லும்…

ரியெல் மெட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் தங்கப் பாதணியை நான்கு தடவைகள் கைப்பற்றியுள்ளார். இதில் அவர் தனது முதலாவது தங்கப் பாதணி விருதை மன்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 2007-08 பருவத்தில் வென்றுள்ளார்.    

எனினும் 2008 ஆம் ஆண்டு தொடக்கம் வழங்கப்பட்ட 13 தங்கப் பாதணி விருதுகளில் 12 விருதுகளை லா லிகா தொடரின் வீரர் ஒருவரே வென்றுள்ளார். இதில் அட்லாண்டிகோ மெட்ரிட் வீரர் டிகோ போர்லன் 2008-09 பருவத்தில் இந்த விருதை வென்ற மற்றைய வீரர் ஆவார்.  

இந்த பருவத்தில் ரொனால்டோ 26 கோல்களுடன் எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். பார்சிலோனாவின் மற்றொரு நட்சத்திரமான லுவிஸ் சுவாரெஸ் 25 கோல்களைப் பெற்று பத்தாவது இடத்தில் உள்ளார்.

முதல் 10 இடங்கள்

1. லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனா, 68 புள்ளிகள் (34 கோல்கள்)
2. முஹம்மது சலாஹ், லிவர்பூல், 64 புள்ளிகள் (32 கோல்கள்)
3. ஹரி கேன், டோட்டன்ஹாம் ஹொட்புர், 60 புள்ளிகள் (30 கோல்கள்)
4. சிரோ இம்மோபைல், லாசியோ, 58 புள்ளிகள் (29 கோல்கள்)
5. மவுரோ இகார்டி, இன்டர் மிலான், 58 கோல்கள் (29 புள்ளிகள்)
6. ரொபர்ட் லெவன்டோஸ்கி, பயெர்ன் முனிச், 58 புள்ளிகள் (29 கோல்கள்)
7. எடின்சன் கவானி, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன், 56 புள்ளிகள் (28 கோல்கள்)
8. கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரியெல் மெட்ரிட், 52 புள்ளிகள் (26 கோல்கள்)
9. ஜோனாஸ் பெனிபிகா, 51 புள்ளிகள் (34 கோல்கள்)
10. லுவிஸ் சுவாரெஸ், பார்சிலோனா, 50 புள்ளிகள் (25 கோல்கள்)

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<