தோல்வியுறாத அணியாக லா லிகா பட்டத்தை வென்றது பார்சிலோனா

292

லியோனல் மெஸ்ஸியின் ஹட்ரிக் கோல் மூலம் டிபோர்டிவோ லா கோருனா அணிக்கு எதிராக 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பார்சிலோனா அணி இன்னும் நான்கு போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே 25ஆவது முறையாக லா லிகா பட்டத்தை வென்றது.

இந்த பருவத்துடன் பார்சிலோனாவிலிருந்து விடைபெறும் இன்னியஸ்டா

பார்சிலோனா கால்பந்து ஜாம்பவான் அன்ட்ரெஸ் இன்னியஸ்டா இந்த பருவத்துடன் ஸ்பெயின் கழகத்தில் இருந்து வெளியேறப்போவதாக……..

இதன்மூலம் எர்னஸ்டோ வெல்வெர்டேவின் முகாமையின் கீழ் இந்த பருவத்தில் ஆடும் பார்சிலோனா இம்முறை ஸ்பெயினின் லீக் மற்றும் கிண்ணம் இரு பட்டங்களையும் வென்றுள்ளது. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த கோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி செவில்லாவை 5-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.   

பார்சிலோன அணி இந்த பருவத்தில் ஒரே பின்னடைவாக சம்பியன்ஸ் லீக் காலிறுதியின் இறுதிக் கட்ட போட்டியில் ரோமா அணியிடம் தோற்று வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.    

ஸ்பானிய பிரீமியர் லீக் தொடரான 87ஆவது லா லிகா தொடரில் தோல்வியுறாத அணியாக புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனா, பட்டத்தை வெல்வதற்கு நேற்று (29) நடைபெற்ற டிபோர்டிவோ லா கோருனா அணியுடனான போட்டியில் தோல்வியுறாமல் இருந்தால் போதும் என்ற நிலையிலேயே களமிறங்கியது.

எதிரணியின் எஸ்டாடியோ ரியாசோ மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் 7ஆவது நிமிடத்திலேயே பார்சிலோனா தனது கைவரிசையை காட்ட ஆரம்பித்தது. அவுஸ்மானோ டெம்பேலே கடத்தி தந்த பந்தை பெனால்டி எல்லையின் நடுவில் இருந்து பெற்ற கோடின்ஹோ உயர உதைத்து கோலாக மாற்றினார்.

ஸ்வீடன் அணிக்கு ஏமாற்றம் அளித்த இப்ராஹிமோவிக்

ஸ்வீடன் முன்கள வீரர் ஸ்லாடன் இப்ராஹிமோவிக் (Zlatan Ibrahimović) இந்த ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் விளையாடமாட்டார் என அந்நாட்டு……

தொடர்ந்து செயற்பட ஆரம்பித்த ஆர்ஜன்டீனாவின் லியோனல் மெஸ்ஸி வலைக்குள் புகுத்த கடினமான கோல் கம்பத்தின் இடது மூலையில் இருந்து இடது காலால் உதைத்து அனாயாசமாக கோல் போட்டார். 38ஆவது நிமிடத்தில் போடப்பட்ட இந்த கோல் மூலம் பார்சிலோனா அணி 2-0 என முன்னிலை பெற்றது.

எனினும் இரண்டு நிமிடங்கள் கழித்து கோருனா அணி சார்பில் பொர்ஜா வல்லே பரிமாற்றிய பந்தை பெற்ற லூகாஸ் பெனால்டி எல்லையின் நடுப்பகுதியில் இருந்து உதைத்து கோலாக மாற்றினார்.

முதல் பாதி: பார்சிலோனா 2 – 1 டிபோர்டிவோ லா கோருனா

பரபரப்பாக ஆரம்பமான இரண்டாவது பாதியின் 51ஆவது மற்றும் 52ஆவது நிமிடங்களில் மெஸ்ஸியின் கோல் பெறும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கோருனா அணி பார்சிலோனா கோல் கம்பத்தை ஆக்கிரமிக்க தொடங்கியது. 64ஆவது நிமிடத்தில் இதற்கு நல்ல பலன் கிடைத்தது.

துருக்கி வீரரான எம்ரே கோலக் பெனால்டி எல்லையின் நடுப்பகுதியில் வைத்து கெல்சோ பர்கஸ் பரிமாற்றிய பந்தை பெற்று கோலாக மாற்றினார். இதன்மூலம் கோருனா அணி போட்டியை 2-2 என சமநிலைக்கு கொண்டுவந்தது.

ஆட்டம் இழுபறியோடு சமநிலையை நோக்கி சொல்லும்போது கடைசி 10 நிமிடத்தில் மெஸ்ஸி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 82 ஆவது நிமிடத்தில் லுவிஸ் சுவாரஸ் பரிமாற்றிய பந்தை பெற்ற மெஸ்ஸி கோல் கம்பத்தின் கீழ் வலது மூலையின் மிக நெருங்கிய தூரத்தில் இருந்து உதைத்து கோலாக மாற்ற பார்சிலோனா முன்னிலை பெற்றது.

சலாஹ்வின் அபாரத்தால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை அதிகரித்த லிவர்பூல்

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கின் இந்த பருவகால அரையிறுதியின் முதல் கட்டமாக இடம்பெற்ற ரோமா அணிக்கு எதிரான போட்டியில் லிவர்பூல்……

இத்தோடு நிற்காத மெஸ்ஸி இரண்டு நிமிடங்கள் கழித்து மற்றொரு கோலை பெற்று ஹட்ரிக் கோல் சாதனை படைத்தார். இம்முறை லா லிகா தொடரில் மெஸ்ஸி ஹட்ரிக் கோல் புகுத்தும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த கோல்கள் மூலம் அவர் இந்த பருவத்தில் 30 கோல்களை தாண்டியுள்ளார். இது தனது கால்பந்து வாழ்வில் மற்றொரு சாதனையாக இருந்தது. லா லிகாவின் ஏழு வெவ்வேறு பருவங்களில் 30 அல்லது அதற்கு மேல் கோல்கள் பெற்ற முதல் வீரராக அவர் சாதனை படைத்தார்.

அத்துடன் இந்த ஹட்ரிக் கோல் மூலம் 30 வயதான மெஸ்ஸி ஐரோப்பிய தங்கப் பாதணியை வெல்லும் போட்டியில் இதுவரை 31 கோல்களை போட்டிருக்கும் லிவர்பூல் அணியின் மொஹமட் சலாஹ்வை பின்தள்ளி முதலிடத்திற்கு (32) முன்னேறியுள்ளார்.

பார்சிலோனாவின் நட்சத்திர வீரர் அண்ட்ரஸ் இன்னியஸ்டா இந்த பருவத்துடன் தான் 12 வயது தொடக்கம் ஆடிவரும் பார்சிலோனாவில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்னர் நடைபெற்ற முதல் போட்டியாக இது இருந்தது. இதில் அவர் ஆரம்பத்தில் ஆசனத்தில் அமரவைக்கப்பட்ட நிலையில் 87ஆவது நிமிடத்தில் மேலதிக வீரராக களமிறங்கியபோது அரங்கில் இருந்த அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.   

ரொனால்டோவின் கோலின்றி ரியல் மெட்ரிட் முதல்கட்ட அரையிறுதியில் வெற்றி

பயென் முனிச் அணியுடனான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கின் முதல்கட்ட அரையிறுதியில் நடப்புச் சம்பியன் ரியெல் மெட்ரிட்……

டிபோர்டிவோ லா கோருனா அணியுடனான வெற்றியுடன் பார்சிலோனா லா லிகா தொடரில் இதுவரை ஆடிய 34 போட்டிகளிலும் தோல்வியுறாத அணியாக இருப்பதோடு புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அட்லெடிகோ மெட்ரிட் அணியை விடவும் 11 புள்ளிகள் அதிகமாக பெற்று எட்ட முடியாத இடைவெளியோடு முதலிடத்தை உறுதி செய்தது. நடப்புச் சம்பியனாக இருந்த ரியல் மெட்ரிட் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில் இந்த பருவம் முழுவதும் தோல்வியுறாத அணியாக ஸ்பெயின் கால்பந்து வரலாற்றில் முதல் சாதனை புரிய பார்சிலோனாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அந்த அணி லா லிகா தொடரில் எஞ்சியிருக்கும் தனது கடைசி நான்கு போட்டிகளிலும் தோல்வியை சந்திக்காமல் இருக்க வேண்டும். எனினும் அந்த அணி அடுத்த வாரம் சவால் மிக்க ரியல் மெட்ரிட்டுடன் ஒரு போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: பார்சிலோனா 4 – 2 டிபோர்டிவோ லா கோருனா

கோல் பெற்றவர்கள்

பார்சிலோனாகோடின்ஹோ கொரையா 7′, லியோனல் மெஸ்ஸி 38′, 82′, 85′  

டிபோர்டிவோ லா கோருனா லூகாஸ் பெரஸ் 39′, எம்ரே கோலக் 63′

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க