சிங்கர் கிண்ண இறுதிப் போட்டியில் டீஜேய் லங்கா, எல்.பி பினான்ஸ் அணிகள்

197
Mercantile Cricket

25 ஆவது தடவையாக நடைபெறும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான ப்ரீமியர் நொக் அவுட் (விலகல் முறை) கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இரண்டும் இன்று (25) நிறைவடைந்தன.

மாஸ் யுனிச்செல்லா எதிர் எல்.பி பினான்ஸ்

MCA மைதானத்தில் நடைபெற்ற தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் மாஸ் யுனிச்செல்லா மற்றும் எல்.பி பினான்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற எல்.பி பினான்ஸ் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை மாஸ் யுனிச்செல்லா அணிக்கு வழங்கியது. முதலில் துடுப்பாடியிருந்த திலகரத்ன தில்ஷான் தலைமையிலான மாஸ் யுனிச்செல்லா வீரர்கள் 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 201 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

மாஸ் யுனிச்செல்லா வீரர்களின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சாமர சில்வா 55 ஓட்டங்களைக் குவித்திருந்தார். நிரோஷன் திக்வெல்லவும் 28 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

எல்.பி பினான்ஸ் அணியின் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட ரஜீவ வீரசிங்க மற்றும் அஞ்செலோ பெரேரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் சுருட்டியிருந்தனர்.

தொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 202 ஓட்டங்களை பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய எல்.பி பினான்ஸ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களைக் குவிக்க போட்டி சமநிலை அடைந்தது.

எல்.பி பினான்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக ப்ரியமல் பெரேரா 46 ஓட்டங்களையும் சரித் சுதாரக்க 45 ஓட்டங்களையும் குவித்திருந்தனர். மாஸ் யுனிச்செல்லா அணியின் பந்துவீச்சு சார்பாக துவிந்து திலகரட்ன 3 விக்கெட்டுகளையும், சஹன் நாணயக்கார, இசார அமரசிங்க மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றினர்.

போட்டி சமநிலை அடைந்ததால் சுபர் ஓவர் முறையில் எல்.பி பினான்ஸ் அணி வெற்றியாளராக தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை அணி பாகிஸ்தானை T-20 தொடரில் எப்படி சமாளிக்கும்?

இலங்கை கிரிக்கெட் அணிக்கு 2017ஆம் ஆண்டு எந்தவகையிலும் எதிர்பார்த்தவிதமாக அமையவில்லை.

போட்டியின் சுருக்கம்

மாஸ் யுனிச்செல்லா – 201 (48.2) – சாமர சில்வா 55, நிரோஷன் திக்வெல்ல 28, குசல் ஜனித் 27, அஞ்செலோ பெரேரா 42/3, ரஜீவ வீரசிங்க 49/3, சிரான் பெர்னாந்து 38/2

எல்.பி பினான்ஸ் – 201/9 (50) – ப்ரியமல் பெரேரா 46, சரித் சுதாரக்க 45, துவிந்து திலகரட்ன 3/33, தில்ருவான் பெரேரா 27/2, இஷார அமரசிங்க 36/2

போட்டி முடிவு – போட்டி சமநிலை அடைந்தது. (எல்.பி பினான்ஸ் அணி சுபர் ஓவர் முறையில் இறுதிப் போட்டிக்குத் தெரிவு)


கொமர்ஷல் கிரடிட் எதிர் டீஜேய் லங்கா

தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியான இந்த ஆட்டத்தில் கொமர்ஷல் கிரடிட் அணியும், டீஜேய் லங்கா அணியும் பலப்பரீட்சை நடாத்தியிருந்தன.

NCC மைதானத்தில் தொடங்கிய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டீஜேய் லங்கா அணி கொமர்ஷல் கிரடிட் வீரர்களுக்கு முதலில் துடுப்பாடும் வாய்ப்பினை வழங்கியது.

இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய கொமர்ஷல் கிரடிட் வீரர்கள் மெதுவான ஆரம்பத்தையே காட்டியிருந்தனர். டீஜேய் லங்கா வீரர்களான சலன டி சில்வா, லசித் மாலிங்க மற்றும் சசித்ர சேனநாயக்க ஆகியோரின் அபாரப்பந்து வீச்சினால் 45.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து கொமர்ஷல் கிரடிட் அணி 156 ஓட்டங்களை மாத்திரமே குவித்துக் கொண்டது.

கொமர்ஷல் கிரடிட் அணி சார்பாக அதிகபட்சமாக அகீல் இன்காம் 38 ஓட்டங்களையும், ஜெஹான் முபாரக் 32 ஓட்டங்களையும் குவித்திருந்தனர். ஏனைய கொமர்ஷல் கிரடிட் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரைத் தவிர ஏனையோர் ஒற்றை இலக்க ஓட்டங்களையே பெற்றிருந்தனர்.

டீஜேய் லங்காவின் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட சலன டி சில்வா 21 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளையும் லசித் மாலிங்க மற்றும் சசித்ர சேனநாயக்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 157 ஓட்டங்களைப் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய டீஜேய் லங்கா அணி ஒரு கட்டத்தில் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதிலும் சலிக கருணநாயக்க மற்றும் சசித்ர சேனநாயக்க ஆகியோரின் போராட்டத்தினால் வெற்றி இலக்கை 33 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களுடன் அடைந்தது.

டீஜேய் லங்கா அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சாலிக கருணநாயக்க மொத்தமாக 60 ஓட்டங்களை 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கலாக பெற்று ஆட்டமிழக்காது நின்றிருந்தார். இவருக்கு உதவியாக காணப்பட்ட சசித்ர சேனநாயக்க 36 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொமர்ஷல் கிரடிட் அணி சார்பாக பந்து வீச்சில் லஹிரு மதுஷங்க, சுரங்க சலிந்த மற்றும் ப்ரனீத் விஜயசேன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

ஹரீன் 10 விக்கெட் வீழ்த்த புனித ஆலோசியஸ் கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் – 1)

போட்டியின் சுருக்கம்

கொமர்ஷல் கிரடிட் – 156 (45.5) – அகீல் இன்ஹாம் 38, ஜெஹான் முபாரக் 32, சலன டி சில்வா 21/3, லசித் மாலிங்க 19/2 , சசித்ர சேனநாயக்க 36/2

டீஜேய் லங்கா – 161/6 (33) – சாலிக கருணநாயக்க 60*, சசித்ர சேனநாயக்க 36, சலன டி சில்வா 25*, சுரங்க சலிந்த 18/2, ப்ரனீத் விஜயசேன 20/2

போட்டி முடிவு – டீஜேய் லங்கா அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி