வர்த்தக புட்சால் சம்பியன் கிண்ணத்தை வென்ற எல்.பி. பினான்ஸ் அணி

292
Mercantile Futsal

புட்சால் வேல்டில் (Futsal world) நடைபெற்ற வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான புட்சால் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH)  அணியை 4-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி எல்.பி. பினான்ஸ் அணி கிண்ணத்திற்கான சம்பியன் பட்டத்தை வென்றது.

சம்பியன்ஸ் அணிக்காக மொஹமட் ரிஸ்னி மற்றும் ஹகீம்  காமில் ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் போட்டதோடு வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான கால்பந்தில் எழுச்சி பெறும் அணியான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் சார்பில் உதார ஒரே ஒரு கோலை புகுத்தினார்.  

இலங்கையை வந்தடைந்த பிபா வெற்றியாளர் கிண்ணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

FIFA உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான வெற்றிக்…

கிண்ணத்திற்கான அரையிறுதியில் அமானா வங்கி கோல்காப்பாளரின் வ்ன் கோல் உதவியோடு எல்.பி. பினான்ஸ் அணி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எக்ஸ்போ லங்கா மற்றும் JKH இடையிலான பரபரப்பான அரையிறுதி பெனால்டி மூலம் முடிவு தீர்மானிக்கப்பட்டது. இந்த போட்டியின் முழு நேர முடிவில் 3-3 என சமநிலை பெற்றது. எக்ஸ்போ லங்கா சார்பில் சர்வான் ஜொஹார் மற்றும் மொஹமட் ரிப்னாஸ் (2) கோல் போட்டதோடு, JKH சார்பில் டரெல், சஞ்ஜுல திலான் மற்றும் உதார ஆகியோர் கோல் புகுத்தினர்.  

பிளேட் கேடயத்திற்கான இறுதிப் போட்டியில் டபிள்யூ.என்.எஸ். க்ளோபல் அணி 5-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் செலிங்கோ காப்புறுதி அணியை தோற்கடித்தது. டபிள்யூ.என்.எஸ். சார்பில் மொஹமட் அஷ்ரப், உதார ஹபெக்கல (2), மொஹமட் தௌஷீப் மற்றும் மொஹமட் முதீப் ஆகிய வீரர்கள் கோல் போட்டனர்.

பிளேட் அரையிறுதியில் ஸ்டான்டர்ட் சார்டட் வங்கியை 1-0 என்ற கோல் கணக்கில் செலிங்கொ வென்றதோடு, டபிள்யூ.என்.எஸ். கிளோபல் 2-0 என்று கோல் வித்தியாசத்தில் எஸ்கிமோ பெஷன்ஸ் அணியை தோற்கடித்தது.

மூன்றாம் இடத்திற்கான கிண்ணத்தை வெல்ல இடம்பெற்ற பலப்பரீட்சையில் எக்ஸ்போ லங்கா 5-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அமான வங்கியை சாய்த்தது. ரிப்னாஸ் இரண்டு கோல்களையும் அஹமட் சஸ்னி, சர்வான் மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் தலா ஒரு கோலையும் போட்டனர்.

பிளேட் கேடயத்தில் மூன்றாம் இடத்தை தீர்மானிக்கும் போட்டியில் கோல் மழை பொழிந்த ஸ்டான்டர்ட் சார்டட் வங்கி (SCB) 6-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் எஸ்கிமோ பெஷன்ஸ் அணியை வென்றது. துஷ்மன்த மற்றும் பிரதீப் எஸ்கிமோ பெஷன்ஸ் அணிக்காக கோல் பெற்றதோடு பென்சி (3), மொஹமட் நபீஸ், மொஹமட் நபாஸ் மற்றும் மொஹமட் அப்துல்லா ஆகியோர் SCB சார்பில் கோல் போட்டனர்.   

றோயல் கல்லூரியின் தலைமை கால்பந்து பயிற்றுவிப்பாளராக மொஹமட் ரூமி

றோயல் கல்லூரியானது அவர்களது கால்பந்து அணியின்..

குழு நிலை முடிவுகள்

A குழு

B குழு

C குழு

D குழு

காலிறுதிப் போட்டிகள்
எக்ஸ்போ லங்கா 5 – 2 எக்சிமோ பெஷன்ஸ்
JKH 3 – 0 டபிள்யூ.என்.எஸ் கிளோபல்
அமானா வங்கி 4 – 1 செலிங்கோ காப்புறுதி
எல்.பி. பினான்ஸ் 4 – 0 ஸ்டான்டர்ட் சார்டட் வங்கி

பரிசுகள்
சிறந்த வீரர் (கிண்ணம்) – மொஹமட் ரிஸ்னி (எல்.பி. பினான்ஸ்)
சிறந்த கோல் காப்பாளர் (கிண்ணம்) – மொஹமட் உஸ்மான் (எல்.பி. பினான்ஸ்)
சிறந்த வீரர் (பிளேட்) – உதார ஹபக்கெல (டபிள்யூ.என்.எஸ். கிளோபல்)
சிறந்த கோல் காப்பாளர் (பிளேட்) – லக்ஷ்மன் அஜேந்திர (டபிள்யூ.என்.எஸ். கிளோபல்)
போட்டி திறனை வெளிக்காட்டிய அணி – ஸ்டான்டர்ட் சார்டட் வங்கி