ஐசிசியின் புதிய ஒரு நாள் தரவரிசையில் கோஹ்லியை நெருங்கிய ஜோ ரூட்

477

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) புதிதாக அறிவித்துள்ள ஒரு நாள் போட்டிகளுக்கான  துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில், இந்திய அணியின் கோஹ்லி தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளதுடன், இங்கிலாந்து தொடர் நிறைவுக்கு வந்த நிலையில், இரண்டாவது இடத்தில் புதிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டெஸ்ட் தரவரிசையில் திமுத் கருணாரத்னவுக்கு மிகப்பெரிய முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) நேற்று (15) …

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், தொடர்ச்சியாக இரண்டு சதங்களை விளாசியிருந்த ஜோ ரூட், ஆச்சரியப்பட வைக்கும் விதத்தில் முன்னேற்றத்தை கண்டுள்ளார். 6ஆவது இடத்திலிருந்த ஜோ ரூட் நான்கு இடங்கள் முன்னேறி, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் சோபிக்கத் தவறிய ஜோ ரூட், அடுத்த இரண்டு போட்டிகளிலும் எதிரணியின் பந்து வீச்சை பதம் பார்த்தார். இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 113 ஓட்டங்களை குவித்த இவர், மூன்றாவது போட்டியில் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களைப் பெற்று, இங்கிலாந்து அணியின் 2-1 என்ற வெற்றிக்கு முக்கிய காரணமாகினார்.

 மூன்று போட்டிகள் கொண்ட குறித்த ஒரு நாள் தொடரில் 216 என்ற ஓட்ட சராசரியை கொண்டிருந்த ஜோ ரூட், ஐசிசி தரவரிசையில் 818 புள்ளிகளை எட்டியுள்ளார். எவ்வாறாயினும், இவ்வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் தொடரில் ஜோ ரூட் 91* மற்றும் 43* ஓட்டங்களை பெற்று, 819 என்ற வாழ்நாள் உயர் புள்ளியினை தன்வசப்படுத்தியிருந்தார்.

இந்திய அணி தொடரில் தோல்வியடைந்திருந்தாலும், தலைவர் விராட் கோஹ்லி சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, தரவரிசையில் முதலிடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளார். இவர் முதல் போட்டியில் 75 ஓட்டங்கள், இரண்டாவது போட்டியில் 45 ஓட்டங்கள் மற்றும் மூன்றாவது போட்டியில் 71 ஓட்டங்கள் என விளாசி, ஐசிசி தரவரிசையில் 911 என்ற வாழ்நாள் உயர் புள்ளிகளையும் பெற்றுள்ளார்.

இந்திய டெஸ்ட் குழாமில் முதன்முறையாக இடம்பிடித்தார் ரிஷப் பாண்ட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக …

மேலும், ஜோ ரூட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முன்னேற்றத்தை பெற்றுக்கொள்ள, ஏனைய முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் தங்களுடைய இடத்திலிருந்து சரிவை சந்தித்துள்ளனர். பாகிஸ்தான் வீரர் பாபர் அஷாம் ஒரு இடம் பின்தள்ளி மூன்றாவது இடம், ஒரு வருட தடைக்கு ஆளாகியுள்ள டேவிட் வோர்னர் இரண்டு இடங்கள் பின்தள்ளி ஐந்தாவது இடம், ரோஸ் டெய்லர் ஒரு இடம் பின்தள்ளி ஆறாவது இடம் என பின்தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், இங்கிலாந்து தொடரின் முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ரோஹித் சர்மா, சரிவிலிருந்து தப்பித்து நான்காவது இடத்தை தக்கவைத்துள்ளார்.

இதேவேளை, ஒரு நாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில், இங்கிலாந்து – இந்திய ஒரு நாள் தொடரில் சிறப்பித்த சுழற்பந்து வீச்சாளர்களான குல்டீப் யாதவ் மற்றும் ஆடில் ரஷீட் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இறுதிப் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தத் தவறிய குல்டீப் யாதவ், ஒரு 5 விக்கட் குவிப்பு அடங்கலாக 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, 684 என்ற தனது வாழ்நாள் உயர் புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.

இவர் முதல் போட்டியில் 25 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்து அணியை தினறடித்திருந்தார். தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் ஆதிக்கத்தை செலுத்திய இவர் ஓட்டங்களை எதிரணிக்கு விட்டுக்கொடுத்தாலும் (68 ஓட்டங்களுக்கு) 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

வருடத்தின் முதலாவது ஒருநாள் தொடரை வென்ற பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணிக்கு எதிராக புலவாயோ சர்வதேச …

குல்டீப் யாதவ்வுடன் ஒரு நாள் தொடரில் அசத்திய, இங்கிலாந்து அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஆடில் ரஷீட், சுழற்பந்து வீச்சுக்கு எதிரான சம பலம் கொண்டுள்ள துடுப்பாட்ட வரிசையை ஆட்டம் காணச்செய்திருந்தார். இதனால், பந்து வீச்சாளர் பட்டியலில் வாழ்நாள் உயர் புள்ளியை (681) பெற்றுள்ள இவர், தொடர்ந்தும் எட்டாவது இடத்தில் நிலைத்துள்ளார்.

இதற்கு அடுத்தப்படியாக ஜிம்பாப்வே – பாகிஸ்தான் தொடரின் முதல் மூன்று போட்டிகள்  நிறைவடைந்துள்ள நிலையில், சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வரும் பாகிஸ்தான் வீரர்கள் தரவரிசையில் தங்களை முன்னேற்றிக்கொண்டுள்ளனர். 3-0 என பாகிஸ்தான் தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்த பக்ஹர் ஷமான் (177 ஓட்டங்கள்) துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில், 639 புள்ளிகளுடன் (வாழ்நாள் உயர் புள்ளி) 14 இடங்கள் முன்னேறி, 24ஆவது இடத்தை பிடித்துள்ளார். இதேவேளை பாகிஸ்தான் அணி சார்பில் 6 ஒரு நாள் போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ள,  புதிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் இமாம் உல் ஹக் 172 ஓட்டங்களை பெற்று, 94ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவர் 70 இடங்களை கடந்து முன்னேறியுள்ளார்.  இவர்களுடன் பந்து வீச்சாளர் ஷின்வாரி 94ஆம் இடத்திலிருந்து 66ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசியின் ஒரு நாள் தரவரிசையில் இங்கிலாந்து அணி தொடர்ந்தும் முதல் இடத்தில் உள்ளதுடன், இந்திய அணி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஒரு நாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய அணியின் ஜஸ்பிரிட் பும்ரா முதலிடத்தை தக்கவைத்துள்ளதுடன், ஒரு நாள் சகலதுறை வீரர்கள் வரிசையில் பங்களாதேஷ் அணியின் சகிப் அல் ஹசன் முதலிடத்தை பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…