மும்பை இந்தியன்ஸ் குழாமில் மஹேலவுடன் இணைந்த மாலிங்க

2835
Photo : Pal Pillai /Focus Sports/ Mumbai Indians

பந்துவீச்சு ஆலோசகராக புது அவதாரம் எடுத்துள்ள இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, மும்பை இந்தியன்ஸ் அணியின் குழாத்துடன் நேற்று (29) பயிற்சியில் இணைந்துகொண்டுள்ளார்.

இதன்போது, அவ்வணியின் பயிற்றுவிப்பாளரும், இலங்கை அணியின் முன்னாள் தலைவருமான மஹேல ஜயவர்தனவும் மாலிங்கவுடன் இணைந்து அவ்வணி வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான 34 வயதாகும் லசித் மாலிங்க கடந்த காலங்களில் இலங்கை அணிக்காக விளையாடி T-20 உலகக் கிண்ணம் உள்ளிட்ட பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த முக்கிய வீரராவார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் இணைந்த மாலிங்க

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக..

எனினும், தொடர் உபாதைகள் மற்றும் போதியளவு திறமைகளை வெளிப்படுத்தாமை உள்ளிட்ட காரணங்களால் அண்மைக்காலமாக இலங்கை அணியிலிருந்து அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார்.

இதனையடுத்து, .பி.எல் போட்டிகளில் கடந்த 10 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த லசித் மாலிங்கவை அவ்வணி முதற்தடவையாக இம்முறை விடுவித்திருந்தது.

இதன்படி, இவ்வருடத்துக்கான .பி.எல் தொடருக்கான ஏலத்தில் கலந்துகொண்ட மாலிங்கவை, குறைந்த பட்சம் ஏலத்திலாவது எடுக்கலாம் என எதிர்பார்த்திருந்த போதிலும், அவரை எந்தவொரு அணியும் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை. இதனால் மாலிங்க மாத்திரமின்றி, அவரை விரும்புகின்ற கோடிக்கணக்கான ரசிகர்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தனர். மும்பை அணியின் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர். எனவே, அவரது .பி.எல். வாழ்க்கை முடிந்துவிட்டதாவே கருதப்பட்டது.  

இந்நிலையில், லசித் மாலிங்கவை மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்க அவ்வணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது.  

மும்பை அணிக்காக 110 போட்டிகளில் விளையாடியுள்ள மாலிங்க, .பி.எல் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களைக்(154 விக்கெட்டுக்கள்) கைப்பற்றிய முதல் வீரராகவும் வலம்வந்து கொண்டிருக்கின்றார்.

வோர்னரின் தடையால் குசல் பெரேரா ஐ.பி.எல் இல்

இந்திய கிரிக்கெட் சபையினால் 11ஆவது தடவையாகவும்..

அண்மையில் நிறைவுக்கு வந்த இலங்கையின் உள்ளூர் கழகங்களுக்கிடையிலான T-20 போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராக மாறிய மாலிங்க, தனது வழமையான போர்முக்கு திரும்பி அனைவரது கவனத்தையும் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, முதற்தடவையாக பந்துவீச்சு ஆலோசகராக அவதாரம் எடுத்துள்ள மாலிங்க, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் வன்கடே மைதானத்தில் தற்போது நடைபெற்றுவருகின்ற பயிற்சிகளில் இணைந்துகொண்டு அவ்வணி வீரர்களுக்கு பந்துவீச்சு ஆலோசனைகளையும், பயிற்சிகளையும் வழங்கி வருகின்ற புகைப்பட்டங்கள், காணொளிகள் மும்பை இந்தியன்ஸ் அணியின் தளங்களில் பகிரப்பட்டிருந்தன. அவை தற்பொழுது சமூக வலைத்தளங்கள் வாயிலாக வைரலாக பரவி வருகின்றன.

  • Photos Courtesy: MI official Facebook Page

மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துகொள்ளக் கிடைத்தமை தொடர்பில் மாலிங்க கருத்து வெளியிடுகையில், ”மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்து கொள்ள சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 10 வருடங்களாக மும்பை எனது இரண்டாவது வீடாக இருந்து வந்தது. ஒரு வீரராக, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பயணம் செய்துவந்தேன். இப்போது பந்துவீச்சு ஆலோசகராக புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளேன்” என்றார்.

இதேநேரம், இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான மஹேல ஜயவர்தன, தொடர்ந்து 2ஆவது தடவையாகவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்றார். அவர் பயிற்சி வழங்க பொறுப்பெடுத்த முதல் வருடமே மும்பை அணி சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.

ஸ்மித், வோர்னர் மீதான தடை அனைவருக்கும் ஒரு முன் உதாரணம் – சங்கக்கார

தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு..

எனவே, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மீண்டும் பயிற்சியாளராக செயற்பட கிடைத்தமை தொடர்பில் மஹேல ஜயவர்தன கருத்து வெளியிடுகையில், கடந்த வருடம் முதற்தடவையாக பயிற்சியாளராகக் கடமையாற்றியிருந்தேன். எனினும், இவ்வருடம் மிகவும் கடினமாக இருக்கும் என நம்புகிறேன். ஆனால், இந்த சவாலை ஏற்றுக்கொள்ள நான் தயாராக உள்ளேன். இம்முறை ஏலத்தில் எங்களிடம் திட்டமிருந்தது. சற்று ஆபத்தானதுதான். ஆனால் நாங்கள் சரியாக செயல்பட்டோம் என்றே நினைக்கிறேன். ஆரம்பத்தில் பரபரப்பு அதிகமாக இருந்தது. நிறைய பேர் ஒவ்வொரு வீரருக்கும் ஏலம் கேட்க ஆரம்பித்தார்கள். எங்களிடம் அந்த அளவு பணம் இல்லை என்பதால் நாங்கள் பின்வாங்கிவிட்டோம். ஆனால் ஒருசில இளம் வீரர்களை அணிக்குள் கொண்டுவந்துள்ளோம். இது மும்பை அணிக்கு எதிர்காலத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொடுக்கும் என நம்புகிறேன்” என்றார்.

11ஆவது .பி.எல் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி முதல் மே 27ஆம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டியில் நடப்புச் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை சந்திக்கவுள்ளது.

மாலிங்கவின் இந்த இணைவு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயன் கொடுக்குமா? உங்கள் கருத்து என்ன?