திரிமான்ன, கபுகெதரவின் தேர்வை நியாயப்படுத்தும் லெப்ரோய்

1590
Labrooy defends

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக் குழுத் தலைவர் கிரேம் லெப்ரோய் தனது வெளிப்படையான செயற்பாடுகளுக்காக அணித்தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் பயிற்சியாளர் நிக் போதாஸ் இருவரினதும் வரவேற்பை பெற்றுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் புதிய தேர்வாளர்களின் முதல் பணியாக இருந்தது. அந்த தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட இலங்கை அணி ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த ஏழு ஆண்டுகளில் ஒன்பது தொடர்களில் தோல்வியை சந்திக்காத பாகிஸ்தானை வீழ்த்தியது.  

சந்திமாலின் தலைமைத்துவத்தை பாராட்டும் குமார் சங்கக்கார

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்கார, பாகிஸ்தான்.

எவ்வாறாயினும் இலங்கை டெஸ்ட் அணியின் துணைத் தலைவராக லஹிரு திரிமான்னவை நியமித்தது, அதேபோன்று சாமர கபுகெதரவுக்கு இலங்கை ஒருநாள் அணியில் மீண்டும் இடம் வழங்கியது குறித்து புதிய தேர்வுக் குழு சில விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. எனினும் ThePapare.com க்கு லப்ரோய் அளித்த பேட்டி ஒன்றில் தனது முடிவுகளை அவர் நியாயப்படுத்தினார்.

“எமது கிரிக்கெட்டின் வெற்றி 70களின் பிற்பகுதியை நோக்கி பின்னோக்கிச் செல்கிறது. அப்போது எம்மிடம் இருந்த தலைவர்கள், துணைத் தலைவர்கள் ஒற்றுமையோடு செயற்பட்டனர். அதே பாணியை நாம் மீண்டும் முயற்சிக்க வேண்டியுள்ளது. அந்த காரணத்திற்காகவே நாம் திரிமான்னவுக்கு துணைத் தலைவர் பொறுப்பை வழங்கினோம். யார் எமது தலைவர் மற்றும் ஜோடிகளாக பணியாற்றுபவர்கள் யார் என்பது பற்றி நாம் அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரையான காலத்தை நோக்கி அவதானத்தை செலுத்த வேண்டியுள்ளது” என்று ThePapare.com லப்ரோய் கூறினார்.

“அணியில் இடம்பிடிக்க அவர் போதுமான திறமை கொண்ட வீரர் என்று நாம் கருதுகிறோம். கடைசி இரு ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் அவர் ஓட்டங்களை குவித்திருக்கிறார். அதன் அடிப்படையில் நீண்ட வகை போட்டிகளிலும் அவர் சிறப்பாக ஆடுவார் என்று நாம் உறுதியாக உள்ளோம். சந்திமாலின் துணைத் தலைவராக, அவர்களுக்கு ஒற்றுமையாக செயற்பட முடியும் என்பதோடு நீண்ட காலத்திற்கு கட்டி எழுப்பக் கூடிய கூட்டணி ஒன்று எமக்கு தேவைப்படுகிறது” என்றுkம் லெப்ரோய் குறிப்பிட்டார்.

சாமர கபுகெதர தொடர்ச்சியாக தேர்வுக்கு உட்படுத்தப்படுவது கிரிக்கெட் வட்டாரத்தில் மற்றொரு சலசலப்பை ஏற்படுத்தும் விடயமாகும். 100க்கும் அதிகமான ஒருநாள் போட்டிகளில் ஆடிய இருந்தபோதும் கபுகெதர இன்னும் ஒரு சதத்தை பெறவில்லை. அணியின் வெற்றிக்கான அவரது பங்களிப்பும் உடவலவ சிறுத்தைகள் போல மிக அரிதானது.

விக்கெட் வீழ்த்த தடுமாறும் இலங்கை A அணி

மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான உத்தியோகபூர்வமற்ற நான்கு…

ஒருநாள் போட்டிகளில் கபுகெதரவின் ஓட்ட சராசரி 21 என்பதோடு முதல்தர ஒருநாள் சராசரி 28 என்ற நிலையில் அது ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரருக்கு போதுமானதாக இல்லை. அதற்கு உப்பு சேர்க்கும் வகையில் காயங்களும் உள்ளன. கடந்த உள்ளுர் பருவத்தில் அவர் SSC அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். மாயமான MH370 விமானத்தின் மர்மம் ஒருநாள் தீர்ந்துவிடலாம். ஆனால் ஒரு கழக அணியிலேயே இடம் இல்லாத ஒருவருக்கு எவ்வாறு தேசிய அணியில் இடம்பெற முடிந்தது என்ற மர்மம் புரியவில்லை.   

“குழாமில் உள் நுழைவதும் வெளியேறுவதுமாக இருக்கும் மற்றுமொரு வீரர் அவர். அவருக்கு பல வாய்ப்புகள் வழங்கப்பட்டபோதும் அது ஒரு தொடர்ச்சியான அடிப்படையில் இருக்கவில்லை. அவர் ஓர் இடைவெளியை நிரப்ப அல்லது மேலதிக வீரராகவே பயன்படுத்தப்பட்டுள்ளார். குசல் பெரேரா, ஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் அசேல குணரத்ன ஆகிய வீரர்களும் எம்மிடம் உள்ளனர். இவர்கள் அனைவரும் 100 வீதம் உடற்தகுதி பெரும்போது எம்மால் சிறப்பாக முன்னோக்கி செல்லலாம். இந்த அனைத்து வீரர்களும் மத்திய வரிசை வீரர்கள் என்பதோடு ஒருவருக்கு ஒருவர் போட்டியாக செயற்படுவார்கள்” என்று லெப்ரோய் விபரித்தார்.  

தேர்வுக் குழு செய்த மற்றொரு மாற்றம் குசல் மெண்டிசை தனது வழக்கமான மூன்றாவது வரிசையில் இருந்து கீழிறக்கி நான்காவது இடத்தில் அனுப்பியதாகும். இது ஏன் என்று லெப்ரோய் கூறும்போது, “நான்காவது வரிசையில் இருந்து மெண்டிசை கழற்றிவிடுவது சிறந்தது என்று நாம் கருதுகிறோம். மெதிவ்ஸ் மற்றும் குணரத்ன உடற் தகுதி பெற்ற பின் எவ்வாறு செயற்படுத்தலாம் என்பதை பார்ப்போம்” என்றார்.

திமுத் குருணாரத்ன ஒருநாள் குழாமில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என்பது பற்றியும் லெப்ரோய் விளக்கம் அளித்தார். கருணாரத்ன இலங்கையின் 2015 உலகக் கிண்ண குழாமில் அங்கம் வகித்தார். ஆனால் அது தொடக்கம் காயத்தால் அவரால் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்  போட்டிகளில் திறமையை காட்ட முடியவில்லை. இந்த ஆண்டில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 900க்கும் அதிகமான ஓட்டங்களை பெற்று அபாரமாக ஆடிவருகிறார். 2017 இல் அவரை விடவும் டீன் எல்கர் மற்றும் ஹஷிம் அம்லா மாத்திரமே அதிக ஓட்டங்களை பெற்றுள்ளனர்.   

ஒருநாள் அணிக்கு ஆட அவர் போதுமான திறமையுடன் உள்ளார். ஆனால் அவரை ஒருநாள் அணிக்கு இணைப்பதா இல்லை அல்லது அவர் சிறப்பாக ஆடும் நீண்ட வகை போட்டிகளில் தொடர்ந்து ஆட விட்டுவிடுவதா என்ற கேள்வியே தற்போது உள்ளது. ஒருநாள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுக்கான இடத்திற்கு எமக்கு மேலும் சில தேர்வுகள் உள்ளன. அவரை அவசரப்பட்டு ஒருநாள் அணிக்கு கொண்டுவரத் தேவையில்லை. டெஸ்டில் அவரது நம்பிக்கையை வளர்க்க வேண்டும். நேரம் வரும்போது, அது பற்றி நாம் பார்க்கலாம்” என்றார் லெப்ரோய்.    

விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் கண்டிப்பான வழிகாட்டுதலை பின்பற்றி அணித் தேர்வில் உடற்தகுதி பிரதானமாக பார்க்கப்படும் என்று லெப்ரோய் கூறினார்.

“வீரர்களின் உடற்தகுதி விடயத்தில் எமக்கு அழுத்தம் உள்ளது. அது விளையாட்டு அமைச்சர் அமைத்திருக்கும் உடற்தகுதி வழிகாட்டலை பின்பற்றி யோ-யோ சோதனையில் வீரர்கள் குறைந்தபட்ச அளவுகோளிலாவது தேர்வு பெற்றிருக்க வேண்டும் என்பதோடு தோல் கொட்டும் அளவு குறிப்பிட்ட வரம்பை விடவும் குறைவாக இருக்க வேண்டும். அஞ்செலோவை நாம் அவசரப்படுத்தாதற்கு இதுவும் ஒரு காரணமாகம். நீண்ட இந்திய சுற்றுப் பயணம் ஒன்றை எதிர்நோக்கி இருக்கும் நிலையில் அவர் 100 வீத உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். காயமடைந்த பெரும்பாலான வீரர்கள் அந்த தொடருக்கு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்” என்று லெப்ரோய் விளக்கினார்.

புதிய விதிகளுடனான ஒரு தொடர் என்பதால் இலங்கை கிரிக்கெட்டுக்கு இந்த ஆண்டு மிகக் கடினமாக உள்ளது. இதனாலேயே ஐக்கிய அரபு இராச்சியத்தில் அணியின் முயற்சி பற்றி மகிழ்ச்சி அடைவதாக லெப்ரோய் குறிப்பிட்டார்.

“எமது வீரர்கள் பற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு வெற்றி அதிகம் தேவைப்பட்டிருந்தது. சொந்த மண்ணில் ஆடும்போது இருக்கும் அழுத்தம் இன்றி வெளியில் ஆடியதும் அவர்களுக்கு உதவியது. அவர்கள் தமது திட்டத்தில் உறுதியாக நின்று வெற்றியை பெற்றுள்ளனர். அவர்கள் நம்பிக்கையை கட்டியெழுப்பி அதனை முன்னெடுத்து செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன்.”

“ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு அணியினர் வரும் முன் நாம் அணித் தலைவர் மற்றும் உப தலைவரை சந்தித்து, நாம் தொடர்ச்சியான அணி ஒன்றை கட்டியெழுப்பும் செய்தியை வழங்கினோம்.”

“நாம் வீரர் ஒருவரை அடையாளம் கண்டால் அவருக்கு அணியில் உள்ளே, வெளியே என்று நெருக்கடி கொடுப்பதை விட அவர் தொடர்ந்து ஆடுவதற்கான நம்பிக்கையை வழங்குவோம் என்ற அடிப்படையையே நாம் அவர்களிடம் கூறினோம். டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டி ஒன்றுக்கு நாம் வீரர் ஒருவரை தேர்வு செய்தால் அவரை ஒன்று அல்லது இரண்டு இன்னிங்ஸ்கள் ஆடவிட்டு அவருக்கு பதில் வேறு ஒருவரை தேர்வு செய்வதை விட திறமையை வெளிக்காட்ட நீண்ட மற்றும் முடியுமான அளவு அவரை அடையாளம் கண்டு நியாயமான வாய்ப்புகளை வழங்குவோம். இதனை என்னால் வீரர்களுக்கு உறுதி அளிக்க முடியும்” என்றும் லெப்ரோய் குறிப்பிட்டார்.

ஐ.சி.சியின் ஒரு பிராந்திய போட்டி மத்தியஸ்தரான லெப்ரோய் தற்போதைய தேர்வாளர் பதவி வழங்கப்படும் முன்னர் இந்த பதவிக்காக நான்கு தடவைகள் வாய்ப்பு வந்தபோதும் அதனை நிராகரித்தார். எனினும் அது அதிக சவால் கொண்டது என்ற நிலையிலேயே அவர் தற்போதைய கோரிக்கையை ஏற்றுள்ளார்.

“ஒரு தேர்வாளராவதற்கு இதற்கு முன் நான்கு தடவைகள் அழைக்கப்பட்டேன். எனினும் அதனைச் செய்ய பலரும் இருந்ததால் அந்த கோரிக்கைகளை நான் நிராகரித்தேன். ஆனால் இந்த முறை கிரிக்கெட்டுக்காக ஏதாவது செய்ய விரும்பினால் இதுவே சரியான வாய்ப்பு என்று நான் கருதினேன். இலங்கை கிரிக்கெட்டை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல உதவ முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று லெப்ரோய் மேலும் கூறினார்.