சொந்த மைதானத்தில் அதிர்ச்சித் தோல்வியுற்ற பார்சிலோனா

251
mage Courtesy - Getty Image

லா லிகா கால்பந்து சுற்றின் 12 வது வாரத்திற்கான போட்டிகள் நிறைவுற்றுள்ள நிலையில் ரியல் பெடிஸ் அணியை எதிர்கொண்ட பிரபல பார்சிலோனா அணி 4-3 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியுற்றுள்ள அதேவேளை, ஸெல்டாவீகோ அணியை எதிர் கொண்ட ரியல் மெட்ரிட் அணி 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  

பார்சிலோனா எதிர் ரியல் பெடிஸ்

பார்சிலோனா அணியின் கெம்ப் நோ அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பார்சிலோனா அணி, இப்பருவகாலத்திற்கான லாலிகா தொடரில் முதல் தோல்வியை சந்தித்தது.

உபாதைக்குள்ளாகியிருந்த லியொனல் மெஸ்ஸி இரு வாரங்களுக்கு பிறகு தனது முதல் போட்டியில் விளையாடினார்.

வெற்றிவாகை சூடிய மென்சஸ்டர் யுனைடட், அட்லடிகோ மட்ரிட் அணிகள்

UEFA சம்பியன் கிண்ண கால்பந்து ……

போட்டி ஆரம்பித்து முதல் 15 நிமிடங்கள் வரை பார்சிலோனா அணியின் ஆதிக்கமே தென்பட்டது. இதன்போது கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்களை ரியல் பெடிஸ் அணியின் பின்கள வீரர்கள் சிறப்பாக தடுத்தனர்.

எனினும், போட்டியின் போக்கை 20 ஆம் நிமிடத்தில் பெறப்பட்ட கோலின் போது ரியல் பெடிஸ் அணி வீரர்கள் மாற்றினர். இதன்போது, மத்திய களத்திலிருந்து எதிரணியின் பின்கள எல்லைக்குள் வழங்கப்பட்ட பந்தை மத்திய கள வீரரான ஜூனியர் பர்போ கோலாக மாற்றினார்.

மேலும் 25 நிமிடங்களில் பார்சிலோனா அணியின் பின்கள வீரர் லின்கலட் போட்டியை சமப்படுத்த மேற்கொண்ட முயற்சியை ரியல் பெடிஸ் அணியின் கோல் காப்பாளர் தனது திறமையால் சிறப்பாக தடுத்தார்.

வலுவற்று தென்பட்ட பார்சிலோனா அணியின் பின்களத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரியல் பெடிஸ் அணி வீரர்கள் போட்டியின் 34ஆம் நிமிடத்தில் மேற்கொண்ட சிறந்த பந்துப் பரிமாற்றத்தின் பலனாக முன்கள வீரர் ஜக்குயீன் மூலம் இரண்டாவது கோலையும் முதல் பாதியின் நிறைவில் பெற்றுக் கொண்டனர்.

முதல் பாதி: பார்சிலோனா 0 – 2 ரியல் பெடிஸ்

போட்டியை வெல்லும் நோக்கோடு மாற்று வீரர்களுடன் களமிறங்கிய பார்சிலோனா அணி இரண்டாம் பாதியின் ஆரம்ப நிமிடங்களில் சற்று வேகமாகவே விளையாடினர்.

அதேபோல் போட்டியின் 68ஆம் நிமிடத்தில் பார்சிலோனா அணிக்கு கிடைக்கப்பெற்ற பெனால்டி வாய்ப்பின் போது மெஸ்ஸி மூலம் முதல் கோலை பார்சிலோனா அணி பெற்றது.

இரண்டாம் பாதியை ஆகிரோசமாக்கிய டிபெண்டர்ஸ், கிறிஸ்டல் பெலஸ் வீரர்கள்

பெத்தகான கால்பந்து மைதானத்தில் ….

ஓரு கோல் வித்தியாசத்தில் போட்டியில் முன்னிலையிலிருந்த ரியல் பெடிஸ் அணியினர் தொடர்ந்து கிடைக்கப்பெற்ற வாய்ப்பினை பயன்படுத்தி ஜியோவானி லோ ஸெல்ஸோ மூலம் மூன்றாவது கோலை போட்டியின் 71 ஆம் நிமிடத்தில் பெற்றது.

இதன்போது லோ ஸெல்ஸோ மூலம் பெனால்டி எல்லையின் வலது பக்கத்திலிருந்து உதையப்பட்ட பந்து கோல் காப்பாளர் டெர் ஸ்ட்ரஜன் மூலம் விடப்பட்ட தவறினால் அவரின் கைகளிற்குள்ளால் கோலையடைந்தது.

மாற்று வீரர்களாக களமிறங்கிய முனீர் மற்றும் விடால் இருவருக்குமிடையில் நிலவிய பந்துப் பரிமாற்றத்தின் மூலம் போட்டியின் 79 ஆம் நிமிடத்தில் இரண்டாவது கோலை பார்சிலோனா அணி பெற்றது.

இவன் ரகடிச் சிவப்பு அட்டை பெற்று 2 நிமிடங்களின் பின் பார்சிலோனா அணியின் பின்கள வீரர்கள் தொடர்ந்து விட்ட தவறின் மூலம் ரியல் பெடிஸ் அணி நான்காவது கோலை கனாலெஸ் மூலம் பெற்றது.

தொடர்ந்து மெஸ்ஸி மூலம் போட்டியின் 92ஆம் நிமிடத்தில் பெறப்பட்ட கோலையடுத்து ரியல் பெடிஸ் அணியானது 4-3 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முழு நேரம்: பார்சிலோனா 3 – 4 ரியல் பெடிஸ்  

ஸெல்டாவீகோ எதிர் ரியல் மெட்ரிட்

ஸெல்டாவீகோ அணியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் ரியல் மெட்ரிட் அணி போட்டி ஆரம்பித்து 2 நிமிடங்களின் போதே முதல் வாய்ப்பை பெற்றது. இதன் போது உதையப்பட்ட பந்து கோல் கம்பங்களுக்கு அருகாமையால் சென்றது.

முதல் 10 நிமிடங்களில் எதிரணியின் ஆதிக்கத்தின் கீழ் விளையாடிய ஸெல்டா அணிக்கு போட்டியின் 19ஆம் நிமிடத்தில் கிடைக்கப் பெற்ற வாய்ப்பின் போது ஓகய் யகுஸ்லு கோலை நோக்கி மேற்கொண்ட முயற்சி கோல் கம்பங்களில் பட்டு வெளியேறியது.

சுப்பர் சன்னை கோல் வெள்ளத்தில் மூழ்கடித்த கொழும்பு கால்பந்து கழகம்

சுகததாச அரங்கில் நடைபெற்ற டயலொக் …….

தொடர்ந்து சவால் விடுத்த ரியல் மெட்ரிட் அணியினரால் போட்டியின் 23 ஆம் நிமிடத்தில் முதல் கோல் பெறப்பட்டது. மத்திய கள வீரர் லுகா மொட்ரிச் வழங்கிய பந்தின் மூலம் கரீம் பென்ஸமா தனது அணிக்கான கோலை பெற்றார்.

ஸெல்டாவீகோ அணியினர் போட்டியை சமநிலைப்படுத்த முயற்சித்தபோதும் அவற்றை சிறந்த முறையில் எதிரணி வீரர்கள் தடுத்ததன் விளைவாக ரியல் மெட்ரிட் அணி முதல் பாதியை வெற்றியுடன் நிறைவு செய்தது.

முதல் பாதி: ஸெல்டாவீகோ 0 – 1 ரியல் மெட்ரிட்

இரண்டாம் பாதியை துவங்கிய ஸெல்டரிகோ அணி தனது முதல் கோலை போட்டியின் 61 ஆம் நிமிடத்தில் ஹீயுகோ முல்லோ மூலம் பெற்றது.

எனினும், தொடர்ந்து நம்பிக்கையுடன் விளையாடிய ரியல் மெட்ரிட் அணிக்கு போட்டியின் 83 மற்றும் 91 ஆம் நிமிடங்களில இரண்டு கோல்கள் பெறப்பட்டன.

போட்டியின் நிறைவில் ரியல் மெட்ரிட் அணி 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸெல்வாவீகோ அணிக்கான இரண்டாவது கோலை பரய்ஸ் மென்டஸ் பெற்றார்.  

முழு நேரம் : ஸெல்டாவீகோ 2 – 4 ரியல் மெட்ரிட்  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<