ரியல் மெட்ரிட்டை மீட்டு சிவப்பு அட்டை பெற்ற பேல்

64
Real Madrid vs Villarreal

லா லிகாவில் வில்லாரியல் அணிக்கு எதிரான போட்டியில் ரியல் மெட்ரிட் அணியை மீட்ட கரேத் பேல் கடைசி நிமிடத்தில் சிவப்பு அட்டை பெற்று மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

முன்கள வீரர்கள் பலரும் காயமுற்ற நிலையிலேயே நேற்றைய (01) போட்டியில் ரியல் மெட்ரிட் களமிறங்கியது. போட்டியின் 11 ஆவது நிமிடத்தில் அணித்தலைவர் செர்ஜியோ ராமோஸ் பந்தை தவறவிட்டபோது அதனை பயன்படுத்தி முன்னேறிய வில்லாரியல், கெரார்ட் மொரேனோ கொண்டு முதல் கோலை பெற்றது.     

கிரிஸ்மனின் இரட்டை கோல்களால் மெஸ்ஸி இன்றி பார்சிலோனா வெற்றி

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா மற்றும்..

எனினும், முதல் பாதி முடியும் நேரத்தில் டானி கர்வஜா நெருக்கமான தூரத்தில் இருந்து பரிமாற்றிய பந்தைக் கொண்டு பேல் பதில் கோல் திருப்பினார்.

முதல் பாதி: ரியல் மெட்ரிட் 1 – 1 வில்லாரியல்

இரண்டாவது பாதி ஆட்டம் கடும் இழுபறியோடு நீடித்தது. கரிம் பென்செமா புகுத்திய கோல் ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் 74 ஆவது நிமிடத்தில் மொயி கொமஸ் கோல் புகுத்த வில்லாரியல் மீண்டும் முன்னிலை பெற்றது

போட்டி முடிவு நேரத்தை நெருங்கும் நேரத்தில் பேல் தாழ்வாக மிக வேகமாக பந்தை செலுத்தி கோல் ஒன்றை பெற்றதன் மூலம் போட்டியை சமநிலைக்குக் கொண்டுவந்தார். எனினும் போட்டி முடியும் தறுவாயில் அவர் இழைத்த தவறுகளால் இரு மஞ்சள் அட்டைகள் பெற்று வெளியேறினார்.    

டொட்டன்ஹாமுடனான பரபரப்பான போட்டியை சமன் செய்தது ஆர்சனல்

டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் அணிக்கு எதிரான பரபரப்பான..

ரியல் மெட்ரிட் தனது ஆரம்ப மூன்று போட்டிகளிலும் ஐந்து புள்ளிகளைப் பெற்று, நடப்புச் சம்பியன் பார்சிலோனாவை விடவும் ஒரு புள்ளியால் முன்னிலையில் உள்ளது. எனினும் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அட்லெடிகோ மெட்ரிட்டை விடவும் நான்கு புள்ளிகளால் பின்தங்கியுள்ளது.

முழு நேரம்: ரியல் மெட்ரிட் 2 – 2 வில்லாரியல் 74′

கோல் பெற்றவர்கள்

  • வில்லாரியல் கெரார்ட் மொரேனோ 12′, மொயி கொமஸ் 74’
  • ரியல் மெட்ரிட் கரேத் பேல் 45+1′, 86′

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<