குசல் பெரேராவை ஒரு நாள் தொடரில் இழக்கும் இலங்கை அணி

433

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா, தற்போது நடைபெற்று வருகின்ற தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரிலிருந்து முழுமையாக வெளியேறியிருக்கின்றார்.

இலங்கை அணிக்காக மூன்றாம் இலக்கத்தில் துடுப்பாடும் குசல் ஜனித் பெரேரா, தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தனது இடது தொடைத்தசையில் உபாதை ஒன்றினை எதிர் கொண்டிருந்தார்.

இந்த உபாதையின் காரணமாகவே, குசல் ஜனித் பெரேராவிற்கு தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு

தென்னாபிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், மீதமுள்ள இரண்டு…

ஒரு நாள் தொடரை அடுத்து குசல் ஜனித் பெரேரா தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள T20 தொடருக்கு முன்னர் குணமடைய சந்தர்ப்பங்கள் இருக்கும் காரணத்தினால் அவருக்கு பதிலாக, வேறு ஒரு வீரரை இலங்கை அணி தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரில் இணைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்காக குசல் ஜனித் பெரேரா தற்போது நடைபெற்று வருகின்ற ஒரு நாள் தொடரில் எதிர்பார்த்த ஆட்டத்தை காட்டாமல் போனாலும், தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி  வரலாறு படைக்க ஆட்டமிழக்காமல் 153 ஓட்டங்களை பெற்று சிறப்பாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் தென்னாபிரிக்க அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி வரும் இலங்கை அணி, இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியிருக்க ஒரு நாள் தொடரை 3-0 என பறிகொடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தென்னாபிரிக்க அணியுடன் எஞ்சியிருக்கும் இரண்டு ஒரு நாள் போட்டிகளும் இம்மாதம் 13 ஆம் மற்றும் 16 ஆம் திகதிகளில் முறையே போர்ட் எலிசபெத் மற்றும் கேப் டவுன் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது.

இந்த ஒரு நாள் தொடரை அடுத்து இலங்கை தென்னாபிரிக அணிகள் விளையாடும் T20 தொடர் இம்மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<