இலங்கையுடனான முதல் டெஸ்டிக்கான பதினொருவரை அறிவித்தது ஆஸி

130

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிராக நாளை (24) பிரிஸ்பேன் – த கெப்பா மைதானத்தில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர்களாக குர்டிஸ் பெட்டர்சன் மற்றும் ஜெய் ரிச்சட்சன் ஆகியோர் களமிறங்குவார்கள் என அணித் தலைவர் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

பகலிரவு டெஸ்ட் போட்டியில் நம்பிக்கையுடன் களமிறங்கும் இலங்கை

சுற்றுலா இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு…

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியானது பகலிரவு போட்டியாக நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதான ஊடக சந்திப்பின் போது, அவுஸ்திரேலிய அணித் தலைவர் டிம் பெய்ன் நாளைய போட்டிக்கான பதினொருவரின் பெயர்களை வெளியிட்டுள்ளார்.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த பதினொருவரில் அறிமுக துடுப்பாட்ட வீரராக இலங்கை அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விக்கெட்டினை விட்டுக்கொடுக்காமல் இரண்டு சதங்களை கடந்திருந்த குர்டிஸ் பெட்டர்சன் இணைக்கப்பட்டுள்ளார். 2011ம் ஆண்டு (18 வயது) செப்பீல்ட் ஷீல்ட் போட்டித் தொடரில் சதத்துடன் முதற்தர கிரிக்கெட் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்த பெட்டர்சன், நீண்ட நாட்கள் காத்திருப்புக்கு பின்னர் தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 157* ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 102* ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்திருந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு பெட்டர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த பருவகாலத்தின் ஷீல்ட் தொடரில் ஒரு சதம் மற்றும் 3 அரைச்சதங்கள் அடங்கலாக 428 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளமையும், இவரது தேசிய அணி வாய்ப்புக்கு மற்றுமொரு காரணமாக அமைந்துள்ளது.

BPL தொடரில் அதிரடியுடன், அபார பந்து வீச்சிலும் மிரட்டிய திசர பெரேரா

பங்களாதேஷில் நடைபெற்று வரும் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் (BPL) கொமிலா …

இவரை அடுத்து, இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் திறமையான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்த ஜெய் ரிச்சட்சன் டெஸ்ட் போட்டி அறிமுகத்தை நாளைய தினம் பெறவுள்ளார். முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான பீட்டர் சிட்ல் மற்றும் ஜோஸ் ஹெசல்வூட் ஆகியோர் இல்லாமையை ஜெய் ரிச்சட்சன் பூர்த்தி செய்யவுள்ளார். இவ்வருடத்துக்கான உள்ளூர் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ரிச்சட்சன், 10 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதன் அடிப்படையில் அவுஸ்திரேலிய அணி நாளைய போட்டியில், மிச்சல் ஸ்டார்க், ஜெய் ரிச்சட்சன், பெட் கம்மின்ஸ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களையும், சுழற்பந்து வீச்சாளராக நெதன் லயனையும் உள்ளடக்கி மொத்தமாக நான்கு பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கவுள்ளது.

அதேநேரம், துடுப்பாட்டத்தை பொருத்தவரை ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ஜோ பர்ன்ஸ் மற்றும் மார்கஸ் ஹெரிஸ் ஆகியோர் களமிறங்கவுள்ளதுடன், மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களாக அணித் தலைவருடன் இணைந்து, உஸ்மான் கவாஜா, ட்ராவிஷ் ஹெட், மெர்னஸ் லெபுச்செங் மற்றும் குர்டிஸ் பெட்டர்சன் ஆகியோர் அணியைப் பலப்படுத்தவுள்ளனர்.

முதலாவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணி

மார்கஸ் ஹெரிஸ், ஜோ பர்ன்ஸ், உஸ்மான் கவாஜா, ட்ராவிஷ் ஹெட், குர்டிஸ் பெட்டர்சன், மெர்னஸ் லெபுச்செங், டிம் பெய்ன் (தலைவர்), பெட் கம்மின்ஸ், மிச்சல் ஸ்டார்க், ஜெய் ரிச்சட்சன், நெதன் லையன்  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<